''நம்ம பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்கு பணம் வரலே போலிருக்கா ,ஏன் ?''
''வோட்டுக்கு பணம் தர வக்கு இல்லாதவன் எல்லாம் தேர்தல்லே ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுக்கிட்டு இருக்காரே !''
''வோட்டுக்கு பணம் தர வக்கு இல்லாதவன் எல்லாம் தேர்தல்லே ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுக்கிட்டு இருக்காரே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்......
தின 'சிரி ' ஜோக்!நாணயம் வேணும்தான் ,ஆனா இப்படியா ?
''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்துக் கதவை தட்டுகிறாரே !''
'சிரி'கவிதை!விண் மீன் உயரத்தில் மீன் விலை !
உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும்
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும்
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?
|
|
Tweet |
அதுவும் சரிதான்
ReplyDeleteமனுஷன் வரப்போகிற அந்த பணத்தினால் என்னென்ன பண்ணனும்னு மனக்கோட்டை கட்டி வச்சி இருந்தாரோ தெரியவில்லை ,இப்படி அவருக்கு பணத்தைத் தராமல் ஏமாற்றலாமா ?
Deleteநன்றி
tha.ma 1
ReplyDeleteநன்றி
Delete1. என்ன ஒரு ஆவேசம்!
ReplyDelete2. நல்லவேளை நாணயங்களாக மாற்றி வாடகை தராமல் விட்டாரே!
3. சிரி கவிதை விழிப்புணர்வுக் கவிதையாக உள்ளது.
1.என்னைக்கும் கொடுக்கிற மூதேவி இன்னைக்கு ஏன் கொடுக்கலைன்னு அவர் கேட்கத்தானே செய்வார் ?
Delete2.காயினா கொண்டு போனா தன தலையிலேயே கனகாபிஷேகம் நடந்து விடுமோன்னு பயந்து விட்டார் !
3.இது தரகு முதலாளிகளின் காலம் ,விழிப்புணர்ச்சி ,ஊஹீம் ..வாருமா தெரியலே !
நன்றி
:-))
ReplyDeleteமீன் விலை உயர்வுக்கு இடைக்காலத்தடை வாங்க முடியுமா ,லாயர் ?
Deleteநன்றி
மூன்று முத்துக்கள்.
ReplyDeleteரொம்ப பிசியோ ?வழக்கமான நக்கல் எங்கே போச்சு அஜீஸ் ஜி ?
Deleteநன்றி
NSK typeல இருக்கே.. பேஷ்..
ReplyDeleteஇருக்காதா ,அவரோடநிஜ காதல் லீலைகளை ரசிக்க முடியவில்லை என்றாலும் ,காமெடியை ரசிக்காதவர்கள் யார் இருக்கக்கூடும் ?
Deleteநன்றி
1. பரமசிவத்துக்கு இன்னும் பொழுது விடியலையா!..
ReplyDelete2. எதுக்கும் ஒரு தடவை ரெண்டு காலும் இருக்கான்னு .. பாத்துட சொல்லுங்க!..
3. ஊரான் வீட்டு தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா..
அதை காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்!..
அப்படின்னு ரொம்ப ரொம்ப பழைய பாட்டு!..
முட்டையிடாத - டூப்ளிகேட் கோழிக்கு - மீன் பரவாயில்ல..
பாவம்.. வலை போட்டு இழுக்கறப்ப - மீனுக்கும் வலிக்கும் தானே.. சிவ.. சிவ..
1.பத்து full வாங்கிற அளவுக்கு காசு தேறும்னு நினைச்சு ஏமாந்தவருக்கு எப்படி விடியும் ?
Delete2.அந்த வீட்டு டோர் நம்பர் 13 தான் ,உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?
3.சரியாய் சொன்னீங்க ,செயற்கை கோழி விலை மலிவாய் இருப்பது உண்மைதான் ,பிராய்லர் மீனும் மலிவாய்க் கிடைத்தால் பரவாயில்லை !
மீனுக்கும் வலிக்கும்தான் ,அதுக்குத்தான் சொல்றாங்களே ...மருந்தைக் குடிக்கும் போது குரங்கை நினைக்காதேன்னு !
நன்றி
பிராய்லர்.. மீனா!?... சரியாப் போச்சு போங்க!..
Deleteஇனிமே.. அதுக்கான வேலையில எறங்கிடுவானுங்களே!?...
எல்லாமே - இந்த மாதிரி வந்ததுன்னா... மனுசனும் அதே மாதிரி ஆயிடுவான்!..
இப்பவே அந்த நிலைக்குப் போய்ட்டதா பீதிய கிளப்புறாங்க!..
புரிஞ்சுதா.. இல்லையா!.. உங்களுக்குப் புரியாததா!..
குளோனிங் ஏற்கனவே கண்டு பிடிச்சாச்சே !கண்ணுலே படுகிறவங்க எல்லாரும்
Deleteஐஸ்வர்யா ராய் மாதிரியே இருந்தாலும் போரடிச்சுருமேன்னுதான் நிறுத்தி வச்சுருக்காங்க போலிருக்கு !
நன்றி
குளோனிங்.. சரி..
Deleteஆனா - நான் சொன்னது வேற..
முக்கியமான மேட்டருக்கே வரவில்லை.. நீங்க!..
சிவ சிவ ,கூட்டத்திலே கட்டுசோறு அவுக்காதேன்னு சொல்லி இருக்காங்களே ,அதான் அந்த மேட்டரை நாலு தாய்க்குலம் விரும்பி வர்ற இந்த இடத்திலே எப்படின்னுதான் யோசனையா இருக்கு !
Deleteஇந்த மாதிரி விஷயத்துக்கு'ஆன்மீக உலா 'நம்பள்கி தான் லாயக்கு !
நன்றி
வாழ்க.. வளமுடன்!..
Deleteவணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
சேர்ந்தாச்சு ,பதிவையும் இணைச்சாச்சே!
Deleteநன்றி
உங்களைமட்டும் கட்டம்கட்டி சேர்த்துட்டு தான் ஓஞ்சுருக்காரே !? என்ன பாஸ் காரணம்!!
Deleteஎன்னவொரு கோபம்... [அ]நியாயம்...?
ReplyDeleteஇப்படி கேட்கிற அளவிற்கு ஜனநாயகத்தை கேலி கூத்து ஆக்கிட்டாங்களே நம்ம அரசியல்வாதிங்க !
Deleteநன்றி
[[''நம்ம பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்கு பணம் வரலே போலிருக்கா ,ஏன் ?''
ReplyDelete''வோட்டுக்கு பணம் தர வக்கு இல்லாதவன் எல்லாம் தேர்தல்லே ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுக்கிட்டு இருக்காரே !'']]
இனி இப்படியும் மக்கள் சொல்லலாம்; பணம் இல்லமால் ஒட்டு கேட்டே பிச்சுடுவேன் பிச்சு!
வாழ்க! இந்தியா ஒளிர்கிறது+வல்லரசு!
+6
அதிலும் நேற்று நடந்த தேர்தலில் பிச்சைக்காசு நூறு ரூபாய்க்காக தங்கள் உரிமையை அடகு வைத்திருக்கிறார்கள் மக்கள் !
Deleteநன்றி
மீன் விலை கோழி இறைச்சியை விடவும் அதிகமாக இருப்பது விந்தைதான். அதுவும் இத்தனை நீள கடற்பரப்பைக் கொண்ட சென்னையிலும் இந்த விலைக்கு விற்கப்படுவதற்குக் காரணம் இடைத்தரகர்களே. மீன்பிடி தடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். நாற்பது நாட்களுக்கும் மீனே வேண்டாம் என்று முடிவுக்கு வந்தாயிற்று.
ReplyDeleteமீன் விலையை குறைக்க வேண்டிய மீன் வளத்துறையும் சேர்ந்து கொள்ளை அடிக்கிறதே !தண்ணிரிலே மீன் அழுதால் வெளியே தெரியாதுதான் ,ஏழைகள் மீன் வாங்க முடியாமல் அழுவதை அரசு புரிந்து கொள்ளுமா ?
Deleteநன்றி
முதலில் இவ்வளவு எழுதியதற்கு நன்றி.
ReplyDeleteஇரண்டே வரியுடன் முடிப்பீங்களே அது தான் செல்றேங்க.
ரசித்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
நானும் முதலில் நன்றி இல்லை இல்லை சாரி .. சொல்லி விடுகிறேன் ,முதல் நான்கு வரி மட்டுமே இன்றைய படைப்பு ,மற்றவை கடந்தாண்டு வெளியானதாச்சே !
Deleteநன்றி
இந்த முறை மூணு ஜோக்கும் ஒன்றுக்கொன்று தொடர்போட ஒரு குறியீடு போல் உள்ளதே!!!
ReplyDeleteஅரசியல் தரகு மற்றும் நள்ளிரவு பணப்பரிமாற்றம்!!!:)
இவையெல்லாம் என்றைக்கும் பொருந்தும் சீரஞ்சீவி தன்மை பெற்ற விஷயங்களாச்சே!
Deleteநன்றி
அருமை
ReplyDeleteதம 7
அருமை என்று சொல்லி ஏழாவது வாக்கு பதித்து பெருமைப் படுத்தியதற்கு நன்றி ஜெயகுமார் ஜி !
Deleteஇதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம்ம பக்கத்துவீட்டு பரமசிவம் தான் இருந்த கட்சியை விட்டு எதிர்கட்சிக்கு தாவுகிறார்... இருக்கிற வீட்டிலேயே இருந்து மற்ற கட்சிக்கு தாவும் தைரியம் படைத்த அண்ணன் பரமசிவம் வாழ்க!
ReplyDeleteஎந்த கட்சிக்கு போனாலும் தொண்டரா இருக்கும் வரை தரித்திரம் தானே ?
Deleteநன்றி
:))
ReplyDeleteநகைச்சுவைக்கு நகைத்து வைத்ததற்கு நன்றி !
Deleteஅய்யோ பாவம்,இந்த கொடுமை வேறா.........
ReplyDeleteஎந்த கொடுமையைச் சொல்றீங்க ?பணம் தராத அரசியல்வாதியையா,நாணயமான வாடகைக்காரரையா,மீன் தரகர்களையா ?
Deleteநன்றி
நல்லா கேட்டான்யா ஒரு கேள்வி........
ReplyDeleteவேட்பாளர் நாக்கை பிடுங்கிகிட்டு சாக வேண்டாமா ?
Deleteநன்றி
கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!
ReplyDeleteநேற்றும் இன்றும் கலந்த கலக்கல் ஜோக்கேதான் !
Deleteநன்றி
சிரி கவிதை சிந்திக்க வைக்கும்...
ReplyDeleteசிரிப்பு சிறப்பு.
மீன் வாங்கலாமா வேண்டாமான்னு நம்மைதான் சிந்திக்க வைக்கிறதே !
Deleteநன்றி
சரி,சரி உங்களுக்கு ஓட்டுக்கு பணம் கிடைக்கலைன்னு ரொம்பவும் புலம்பாதீங்க.
ReplyDeleteஆஹா, இப்படி ஒரு குடித்தனக்காரர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.
ஒரு லட்சத்துக்கு கீழே ...கீழே கிடந்தாலும் நான் எடுத்துக்க மாட்டேன் ,பிச்சாத்து இந்த ரூபாய் யாருக்கு வேணும் ?(சீச்சீ இந்த பழம் புளிக்கும் ?ன்னு மறு கமெண்ட்போடாதீங்க )
Deleteகொடுத்தா இனிக்கத்தான் செய்யும் ,அட்வாச்சை வந்து கேக்கும் போதுதானே வலி தெரியும் ?
நன்றி
ஹஹாஹா நல்ல ஜோக்....துட்டுக்கு ஓட்டு போட்டுத்தானேங்க பழக்கம்! பழக்க தோஷம் வுடுமா என்ன சொல்லுங்க ஜி!
ReplyDeleteத.ம.
இந்த மனப்பான்மையை உருவாக்கிய தலைவர்களை என்ன செய்யலாம் துளசி தரன் ஜி ?சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தோடு புதைத்து விடலாமா ?
Deleteநன்றி
என்னவொரு ஆதங்கம்! :(((((
ReplyDeleteகாசுக்கே இப்படின்னா தங்கம் கிடைக்காம போய் இருந்தா கோர்ட்டிலே கேசே போட்டு விடுவார் போலிருக்கே !
Deleteநன்றி
ஓட்டுக்குப் பணமா?
ReplyDeleteவோட்டுக்கு பணமா?
புட்டுப்புட்டாய்
போட்டுடைக்கிறியளே
உண்மையை!