6 April 2014

ஆபரண நகையினால் ஆபத்து வரக்கூடாது என்பதற்காக ...!

''தலைவரே ,விலைவாசி அதிகமாயிட்டது உண்மைதான் ,நீங்களும் நகைங்களை பாங்கிலே வச்சு இருக்கிறதா எந்த தைரியத்திலே சொல்றீங்க ?''
''அடமானத்திலே இருக்கா ,சேப்டி லாக்கர்லே இருக்கான்னு யாரும் கேட்க மாட்டாங்கிற தைரியத்திலேதான் !''

45 comments:

  1. அட உண்மையத்தானே சொல்லியிருக்கார்...

    ReplyDelete
    Replies
    1. பாதி உண்மையை மறைச்சிட்டு இல்லே சொல்லி இருக்கார் ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்

    நன்றாக உள்ளது....வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. நானும் நகைங்களை பாங்கிலே வச்சு இருக்கேன்னு நடுத்தர மக்களை மாதிரி தலைவரும் சொல்வது ,நல்லாவா இருக்கு ?
      நன்றி

      Delete
  3. அட! இதைத்தானேசெய்யுறாங்க ஜி?!!! இல்லையா?

    த.ம. இன்னும் இணைய வில்லை போலும்! ஓட்டுப் போட பின்னர் வருகிறோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. சேப்ட்டிக்காக நகைகளை பாங்கிலே வச்சு இருக்கேன்னு மக்களிடம் விளக்கமா சொல்ல தலைவர் தயாராய் இல்லையே?

      நீங்களே இணைக்கலாமே ,ஏன் முடிய வில்லையா ?
      உறுதிமொழி வேறா ?நன்றி

      Delete
  4. Replies
    1. ஆமாமா,தலைவர் வாயிலிருந்து உண்மை தவிர வேறெதுவும் வராது !
      நன்றி

      Delete
  5. Replies
    1. முதல் வருகைக்கும் ,புன்னகை பூத்ததற்கும் நன்றி !

      Delete
  6. Replies
    1. சாதுரியமாக உண்மையை மறைத்து பேசத் தெரிவதால் தான் ,அவர் தலைவராய் இருக்கிறாரா ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. மறைத்து பேசுவதற்கு வசதியா நகைங்களையும் மறைத்து வைத்தாயிற்று !
      நன்றி

      Delete
  8. வணக்கம் சகோதரர்
    நண்பர் ரொம்ப விவரமான ஆளா தான் இருப்பார் போல. தங்க நகைகளை அடகு வைத்து விட்டு பள்ளிக் கூடத்துக்கு படிக்க போயிருக்கு என்று சொல்வார்கள். அதனை நினைவு படுத்தியது நகைச்சுவை. நன்றி சகோதரர்..

    ReplyDelete
    Replies
    1. இப்போ , நகையை அடகு வைச்சு பிள்ளையை படிக்க வைக்க முடியாது ,விற்றுத்தான் படிக்க வைக்க முடியும் போலிருக்கு ..அப்படி நன்கொடை புடுங்குறாங்களே!
      நன்றி

      Delete
  9. எப்படி இருந்தாலும் பத்திரமாக இருக்குதுல...........

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,வட்டியை கட்டுறதும் ,வாடகையை கட்டுறதும் ஒண்ணுதானா ?
      நன்றி

      Delete
  10. உஷார் பேர்வழிதான்!

    ReplyDelete
    Replies
    1. ஏழைப் பங்காளன் உயிர் உள்ளவரை உஷாராத்தானே இருப்பார் ?
      நன்றி

      Delete
  11. என் தோழி சொல்வாள் 'எல்லாரும் சேட்டுகிட்ட ஹிந்தி படிக்கவைபாங்க, நான் முத்தூட் ல மலையாளம் படிக்கவைச்சுருக்கேன் " .ஹ..ஹ..ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தியும் ,மலையாளமும் கத்துகிட்டு காசை தொலைச்சுகிட்டு இருக்காம் நம்ம தமிழன் ,ஏன்னா தங்கம் வாங்குறதும் அவங்ககிட்டேதான் ,அடகு வைக்கிறதும் அவங்க கிட்டேதானே !
      நன்றி

      Delete
  12. அப்புறம் ஒரு சின்ன விஷயம் ஆபரணம் என்றாலும் நகை என்றாலும் ஒன்று தானே?

    ReplyDelete
    Replies
    1. நகை சொல்வழக்கு ,ஆபரணம் எழுத்து வழக்கு ,ஆனால் யார் அதை வாங்கித்தந்தாலும் போட்டுக்கிறதிலே எந்த வம்பு வழக்கும் இல்லை !
      நன்றி

      Delete
  13. என்னா ஒரு யோசனை! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. நம்மள மாதிரி ஆளுங்க லாக்கரில் வைக்க முடியாமத்தான் அடமானத்திலே வைத்து விடுகிறோமே !
      நன்றி

      Delete
  14. தளவருக்கு பதில் தொண்டன் சொல்லியிருந்தால் உண்மையாக இருக்கும். இந்த காலத்துல எந்த தலைவர் தன்னோட நகைகளை அடமானம் வைப்பார்????

    ReplyDelete
    Replies
    1. நம்ம தலைவரும் அதைதானுங்க செய்திருக்காரு ?ஜனங்கள ஏமாற்ற இப்படி சொல்லுறாருங்கோ !
      நன்றி

      Delete
  15. Replies
    1. ஏமாறஆள் இருக்கும் வரை தலைவர் இப்படி நிறைய யோசனை செய்துக் கொண்டேதான் இருப்பார் !
      நன்றி

      Delete
  16. லாயருக்கு பாயிண்ட் புரிந்து விட்டது ,புரியாதவங்க அவர் கிட்டே தெரிஞ்சுக்குங்க !
    நன்றி

    ReplyDelete
  17. யோசனை நல்லாத்தானே இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. யோசனைத் திலகம்னு தலைவருக்கு பட்டம் கொடுத்திடலாமா ?
      நன்றி

      Delete
  18. ஜி! அப்படி ஒருத்டவை இணைக்கப் போய், அதேசமயம் தங்கள் தளத்திலும் ஏதோ பிரச்சினையாக அதற்கு ஒருவேளை நாங்கள் இணைத்ததுதான் பிரச்சினையாகி விட்டதோ என்று நினைத்து பின்னர் தான் தெரிந்ததது அது அதனால் அல்ல என்று! கொஞ்சம் பயம் இருந்தது! இனி அப்படிக் காண நேர்ந்தால் இணைத்துவிட்டால் போச்சு!

    நன்றி ஜி!

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை ....நானும் சில பதிவர்களை பதிவுகளை தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன் ,ஒரு சில பதிவர்களின் பதிவுகளை இணைக்க முயற்சி செய்தாலும் முடிவதில்லை ,ஏனிந்த பிரச்சினை என்று தெரியவில்லை !
      நன்றி

      Delete
  19. இதுக்குப் பேருதான் இலை மறை காயா?
    பொய்யும் சொல்லலை, உண்மையும் சொல்லலை..அவங்கவங்க எப்படி வேணுமோ அப்படி புரிஞ்சுக்கலாம் .. :)

    ReplyDelete
    Replies
    1. இப்படி பேசத் தெரிந்தால் விரைவில் தலைவராகி விடலாம்!
      நன்றி

      Delete
  20. நான் தலைப்பைப் பார்த்ததும் “கட்டிக் கட்டியாக“ வாங்கி வைக்க சொல்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன் பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. வசதி படைத்தவர்கள் அப்படித்தானே வாங்கி (மறைத்து )வைத்துக் கொள்கிறார்கள் ?
      நன்றி

      Delete
  21. ''அடமானத்திலே இருக்கா ,சேப்டி லாக்கர்லே இருக்கான்னு யாரும் கேட்க மாட்டாங்கிற தைரியத்திலேதான் !'' என்று பார்த்தால்
    எல்லாருக்கும் தெரியுமே
    போலி நகைங்களை பாங்கிலே வச்சு இருப்பாரென்று...

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் இருக்கும் !
      நன்றி

      Delete