1 May 2014

ஜாதகம் போலியா ,ஜோதிடர் போலியா ?

''தலைவரோட ஆயுசுக் காலம் நாளையோட 

முடியுதுன்னு எப்படி சொல்றீங்க ,ஜோசியரே ?''

''ஜாதகத்தில் ஜனன நேரம் பக்கத்திலே,ஜனகன மன 

நேரமும் போட்டிருக்கே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...



தின 'சிரி ' ஜோக்!தங்கம் விக்கிற விலையில் ...?

''நீங்க தெரியாம விழுங்கின மூக்குத்தியை 

ஆப்ரேசன் செஞ்சு எடுக்கணும்னா லட்ச ரூபா 

செலவாகுமே !''

''பரவாயில்லை டாக்டர் ,நான் வேற மூக்குத்தியை 

வாங்கிக்கிறேன் !''

'சிரி'கவிதை!மனித மனம் ஒரு குரங்கு ?

டார்வின் கொள்கைப்படி ...

பரிணாம வளர்ச்சியில் உருவம் மாறிவிட்டாலும் ...

குரங்கின் குணம் 

மனதிலே மாறாமலே இருக்கிறது ...

சேனலை மாற்றி மாற்றி  தாவிக் கொண்டே இருக்கும் 

TV ரிமோட்டே சாட்சி  !

36 comments:

  1. இதிலென்ன சந்தேகம் பகவானே? சாதகமாகச் சொலவதுதான் சாதகம், மற்றபடி சாதகமே போலிதான், அதைச் சொல்பவர் பாவம் வறுமையின் குழந்தை அல்லது வேறு வேலைகிடைக்காத “வேலையில்லாத் திண்டாட்டத்தின் குழந்தை” அவரும் போலியான வேலையைச் செய்பவர்தான். இது ! டூப்புகளின் உலகம். ஆனால் கதாநாயகன் தான் பெரியாளாகப் புகழ்பெறுவான்.

    ReplyDelete
    Replies
    1. ஜோதிடர் சொல்வதெல்லாம் பலிக்கணும்னா அவருக்கு நல்ல நேரமா இருக்கணுமாம்,முதல்லே அவர் ஜாதகத்தை யாரிடம் கொண்டு போய்க் காட்டுவது ?டிவியில் சில ஜோதிடர்கள் உறுதியாக நடக்கும் என்று அள்ளி விடுவதைப் பார்த்தால் ,அரசியல்வாதிகளுக்கு இவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்களாய் தெரியவில்லை !
      நன்றி

      Delete
  2. இன்றைய நிலமையில், ஆபிரேஷன் செஞ்சவது அந்த மூக்குத்தியை எடுத்து விடுவார்கள்.

    உண்மை தான் மனது குரங்கின் குணத்தை இன்னும் விட்டபாடில்லை.

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய பேப்பரில் வந்த செய்தி ...கம்மலை விழுங்கிய கோழியை அறுத்து ,நாலு துண்டாக கம்மல் கிடைத்த சந்தோசத்தைக் கொண்டாட கோழிக் குழம்பு வைத்து சாப்பிட்டார்களாம்!இன்றைய நிலையில் ஆபரேசன்தான் ,சந்தேகமே இல்லை !

      டார்வின் கொள்கையை இப்படியும் நிரூபிக்கலாம் போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா...

    குரங்கினம் மாறிவிட்டாலும் இந்த மனிதஇனம் இன்னும்மாறவில்லை.....தொடர்கதையாக உள்ளது...
    மேதின வாழ்த்துக்கள்
    எனது பக்கம் கவிதையாக.--
    எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பல்லாயிரம் ஆண்டுகளில் உருவான பரிணாம வளர்ச்சி ஒரு நாளில் மாறாதே !
      ,வருகைக்கும் மே தின வாழ்த்திற்கும் நன்றி

      Delete

  4. 1.ஜாதகம் எழுதினவர் ஒருவேளை கவிஞரோ ?
    2.சரியான முடிவு. லட்ச ரூபாய்க்கு எத்தனையோ மூக்குத்தி வாங்கிவிடலாம்.இருக்கவே இருக்கு அட்சயதிருதியை நல்லநாள்.... போய் வாங்கிடலாமே ??.
    3.வாலில்லா குரங்குனு சொல்லவர்ரீங்களா???????

    ReplyDelete
    Replies
    1. 1.புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ன்னு சொல்றீங்களா ?
      2 புருசனுக்கு அது நல்ல நாள் தானா ?
      3 சொன்னால் என்ன தப்புன்னு நினைக்கிறீங்க ?
      நன்றி

      Delete
  5. பரிணாம வளர்ச்சி... :))))

    மூன்றும் ரசித்தேன். நன்றி பகவான் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளியும் பரிணாம வளர்ச்சி அடைத்து தமிழ் மணம் நாலாவது இடத்தில் ஏறி நாலு நாள்தான் ஆகிறது ,மறுபடியும் இன்று ஐந்தாவது இடத்தில்....உங்கள் தளமும் நான்காவது இடத்தில் வந்ததை என்னாலும் ரசிக்க முடியலையே ,வெங்கட் ஜி !
      நன்றி

      Delete
  6. Replies
    1. தலைவர் போய் சேரவேண்டிய நேரம்தான்னு ரைட்டுன்னு சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  7. அ. வருசத்ல சனவரி, ஆகஸ்டுல கண்டம் - ஜோசியர்.

    ஆ. அத்தானெ பாத்தேன். ஒங்க பெறந்த ஊட்லேந்து கொண்டாந்த மூக்குத்தியா - லேடி டாக்டர்.

    இ. இந்த ரிமோட்டக் கண்டுபிடிச்சவன் கட்டேலபோக. ஒரு சீரியல் பாக்கவுடறார இந்த மனுசன் - தாய்க்குலம்

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அ. அந்த நாட்கள் இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்துவதாச்சே!
      ஆ .வாங்கித் தர ஒரு இளிச்சவாயன் இருக்கான்னு சொல்றீங்களா ?
      இ. சீரியல் நேரத்திலே ரிமோட் தாய்க்குலத்தின் கையில் பசை போடாமலே ஒட்டிக் கொள்கிறதே !
      நன்றி

      Delete
  8. மூன்று நகைச்சுவைத்
    துணுக்குகளையும் ரசித்தேன்
    குறிப்பாக டி,வி,ரிமோட்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நாம ரிமோட்டை நோன்டுறோம் ,இன்றைய தலைமுறை செல்லை நோண்டிக்கொண்டே இருக்கிறதே !
      நன்றி

      Delete
  9. அப்ப நாமும் ஜனகன பாடீற வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. கோஷ்டி கானத்தில் உங்களுக்கும் இடமுண்டே!
      நன்றி

      Delete
  10. மூன்றும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. இது அபூர்வமாச்சே ?
      நன்றி

      Delete
  11. ரெண்டாவதுதான் டாப்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க இதுவரை கம்மலுக்கு செலவு செய்ஞ்சதில்லைப் போலிருக்கு !
      நன்றி

      Delete
  12. ஜனன நேரம்
    ஜனகன மன நேரம்
    இரண்டிற்கும் இடையில
    ஜோதிடர் பார்த்த நேரம்
    பிழையா?

    ReplyDelete
    Replies
    1. அது நாளை தலைவர் செத்துப் பிழைத்தால் தால் தெரிந்து விடும் !
      நன்றி

      Delete
  13. மூக்குத்தி ஜோக் சூப்பர். ஜன சரி, அது என்ன கன மன? இதுதான் மரண நேரமோ:))

    ReplyDelete
    Replies
    1. மூக்குத்தி மின்னுறது உங்களுக்கும் பிடிச்சிதா ?
      தலைவர்கள் சடலத்தின் மேல் தேசியக் கொடியைப் போர்த்தி விட்டு ஜனகனமன வாசிப்பதை நீங்களும் கேட்டு இருப்பீங்களே !
      நன்றி

      Delete
  14. Replies
    1. அப்படியா ஸ்பை?ரொம்ப சந்தோசம் !
      நன்றி

      Delete
  15. Replies
    1. எல்லாம் சூப்பர் டூப்பர்தான் இல்லையா ?
      நன்றி

      Delete
  16. இரசிக்க வைக்கும் சிரிப்புகள் 3ம்!

    ReplyDelete
    Replies
    1. நிஜமாத்தான் சொல்லுறீங்களா நிஜாமுத்தின்?
      நன்றி

      Delete
  17. Replies
    1. அதான் த ம டென் போட்டீங்களோ ?
      நன்றி

      Delete