29 May 2014

இந்த 'கோச்' சடையான் ' உலக கோப்பை வெல்வாரா ?

''உங்க கபடி 'கோச் 'சை ரசினி ரசிகர்ன்னு எப்படி சொல்றே ?''
''சடையான் என்கிற தன் பெயருக்கு முன்னாலே 'கோச்' என்று போட்டுக்க ஆரம்பித்து விட்டாரே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

மாணவனின் பதிலால் ஆசிரியர் மயக்கமாகி இருப்பாரா !

''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
''அதிலேயே எழுதி இருக்கும் !''

'சிரி'கவிதை!

மங்கை மாலுமிகளை கரை ஏற்றுவாளா ?

என்னவள் ...
கலங்கரை விளக்கின் அருகில் நின்று 
கடலழகில் கண்களை இமைக்க மறந்து 
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும் 
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள் எப்படி வரும் என்று ?

30 comments:

  1. வணக்கம் ஜி
    காலத்திற்கேற்ற முதல் நகைச்சுவை செம கலக்கல். கோச்சடையான் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமும் இருக்கா! மூன்றாவது காமெடி சொல்வீங்கனு பார்த்தா கவிதை சொல்லி இருக்கீங்களே! கம்பனும் செல்லியும் உங்கள் தவம் கிடக்க வேணும் போல!! ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. அப்பப்ப இப்படியும் டைம்லி விட் தேவைப் படுகிறதே !
      நல்ல வெயில் நேரத்திலே கம்பன் செல்லி என்று பெரிய ஐஸை தலையில் வைக்கிறீர்களே ,கடுமையா ஜல்ப் பிடிச்சிடும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. கோச்சடையானை இப்படி கூறு போட்டலாமா ,அட ?
      நன்றி

      Delete
  3. 'கோச்' சடையான் இல் கபடி விளையாட்டும் உண்டோ?

    ReplyDelete
    Replies
    1. தமிழர் வீர விளையாட்டில் கபடி இல்லாமலா ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. சடையானை திரையில் பார்த்தீங்களா ?
      நன்றி

      Delete
  5. மாணவன் சரியான பதிலைத் தான் சொல்லியிருக்கான். இப்படிப்பட்ட மாணவர்கள் இருந்தால், ஆசிரியர்கள் எல்லாம் பாவம் தான்.

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. பிராக்டிகல் திங்கிங் இதைதான் சொல்றாங்க போலிருக்கே !உங்க மக ஓவியா இப்படி எல்லாம் கேட்காதுன்னு நினைக்கிறேன் !

      மாலுமிகள் திசைமாறி சென்று விடக்கூடும் இல்லையா ,சொக்கன் ஜி ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. ரஜினி கெட்அப்பும் படத்தில் சடையான் போலத்தானே இருக்கு ?
      நன்றி

      Delete
  7. ஹா ஹா ஹா .... சடையானை நினைத்தாலே சிரிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பு உங்களுக்கு வருதா ?சடை யானைக்கு வருதா ,பாண்டியன் ஜி ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. ஜோக்காளியின் வார்த்தை கபடி இது !
      நன்றி

      Delete
  9. ஓ! இது தான் கோச்சடையானா?

    ReplyDelete
    Replies
    1. ஏன் நம்ப முடியலையா ?
      நன்றி

      Delete
  10. ஓ! இது தான் கோச்சடையானா?

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியம் தாங்க முடியலையா ?மறுபடியும் அதே கேள்வியா ?
      நன்றி

      Delete
  11. 1. இது வேறயா!...
    2. பையனுக்கும் இந்த கதியா?..
    3. கப்பல் ஒழுங்கா கரை சேர்ந்திடுமா!?...

    ReplyDelete
    Replies
    1. 1 .கோச்சடையான் டிரைலர் பார்த்து நொந்து போயிட்டீங்க போலிருக்கே !
      2 .வாத்தியார் சொல்லிக் கொடுத்த விதம் அப்படி !
      3 .கப்பல் கரை சேர்ந்திடும் ,மாலுமிதான் கரை ஏறுவாரா என்று தெரியவில்லை !
      நன்றி

      Delete
  12. இந்த 'கோச்' சடையான் ' உலக கோப்பை வெல்வாரா ? ..ஹா...ஹா...ஆஸ்கார் வெல்வார்?

    ReplyDelete
    Replies
    1. கோப்பை வென்றாலும் ,ஆஸ்காரை வென்றாலும் நமக்கெல்லாம் பெருமைதானே ?
      நன்றி

      Delete
  13. 1) ஹிஹிஹி..
    2) ஹா ஹா ஹா
    3) ஆ...ஹா!

    ReplyDelete
    Replies
    1. 1.கோச் கடுமையா பயிற்சியில் ஈடு பட்டிருக்கார் ,நீங்க சிரிக்கறீங்க ?
      2.பையன் நோட்டைக் காணலேன்னு வருத்தப் படுறான் ,நீங்க சிரிக்கறீங்க ?
      3.இந்த திசையில் எந்த கரையோவென்று குழப்பத்தில் இருக்கிறார் ,நீங்க சிரிக்கறீங்க ?
      நன்றி

      Delete
  14. முதல் ஜோக் கலகல! இரண்டாவது ஹிஹி! மூணாவது கவிமழையா பொழிஞ்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரஜினி சம்பந்தப் பட்டிருப்பதால் கலகல என்பதற்குப் பதிலாய் லகலக வென்று சொல்லலாம் !
      பையன் நல்லா வருவான் அப்படித்தானே ?
      என்னவள் கண்விழி தந்ததாச்சே ,கவிமழையாகத்தான் இருக்கும் !
      நன்றி

      Delete
  15. நல்லவேளை சடையான் ''சாக்கு'' வியாபாரம் செய்யலே இல்லைனா ''சாக்கடையான்'' னு சொல்லியிருப்பீங்க, பகவான்ஜீ குசும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு உங்களுக்கு...
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நாலு பேர்கிட்டே கேட்டுப் பார்ப்போம் ,யாருக்கு குசும்பு அதிகமென்று !
      நன்றி

      Delete