22 May 2014

மல்லிகைப் பூ கண்ணில் விழலாமா ?

''அவர் போலி டாக்டர்ன்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா ,பிச்சிப் பூவான்னு கேக்கிறாரே !''



சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை ?
''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

உண்மைக் காதலன் கூட செய்யாத சூரசம்ஹார லீலைகள் !

'நான் எல்லாத்தையும் யமுனாவுக்காக மட்டும்தான் செஞ்சேன் ,ஆனா அவளே என்னைப் புரிஞ்சுக்கலேன்னு வேதனையா இருக்கு ...நிச்சயம் ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவா '
'வர்மக்கலை கற்று  தந்த என் குருவுக்கு துரோகம் செய்ஞ்சுட்டோமேன்னு வேதனையா இருக்கு ...
இப்படி இவ்வளோ பீல் பண்றது ...
திருச்சி  சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ...
நம்ம அஞ்சு கொலை ஆறுமுகம் அல்ல ...
டாங் லீ கண்ணன் என்றழைக்கபடும் சாமியார் (?)தான் !
யமுனாவுக்காக இந்தக் கள்ளக் காதலர் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல ...
யமுனாவின் கணவரை ...
கணவரின் நண்பரை ...
நண்பரின் கார் டிரைவரை ...
தான் கற்ற வர்மக் கலையை பயன் படுத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார் ...
 அப்பாவி பெண் யமுனாவின் வாழ்க்கையில் விளையாடிய பாவிகளைத்தான் கொன்றது கொலை அல்ல ...சூரசம்ஹாரமாம் ...
இந்த சூரசம்ஹாரம் இத்தோடு முடியவில்லை ...
யமுனாவின் மகனை ,மகளைக் கொன்றதில் முடிந்துள்ளது ...
கராத்தே பயின்றதால் இவனுக்கு டாங் லீ என்று பட்டப் பெயர் வந்ததாம் ...
வாய் திறந்தால் பொய்யாகவே கொட்டுவதால் ...
டங் லை (Tongue lie ) கண்ணன் என்றே சொல்லலாம் !

27 comments:

  1. Replies
    1. நேற்று வீட்டில் நான் இருந்த நேரம் எல்லாம் கரண்ட் இல்லை ,கரண்ட் வந்த நேரத்தில் வீட்டில் இருக்க முடியாததால்...உங்க' ம்' மைப்போன்று ஓரெழுத்து தட்டச்ச முடியலே !
      நன்றி

      Delete
  2. ஜோக் - 2: அப்ப வீட்டுக்கே போயி நியாபகப்படுத்தினா எவ்வளவு பீஸாம்????

    ReplyDelete
    Replies
    1. ஊட்டி விட்டா எவ்வளவோ அதில் பாதி தானாம் !
      நன்றி

      Delete
  3. சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ஆமா விழுந்த பூ என்ன பூவாய்
    இருக்கும் டாக்டர் பகவஞ்சி ?:.........:)))))))))))

    ReplyDelete
    Replies
    1. கண்ணுக்குள் பூத்ததால் கப்பூவா இருக்குமோ )))
      நன்றி

      Delete
  4. சொக்கன் சுப்ரமணியன் - நல்ல கேள்வி.....

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு தந்த பதிலும் நல்ல பதில்தானே ?
      நன்றி

      Delete
  5. போலி டாக்டர்
    SMS சார்ஜ்
    டங் லை (Tongue lie )
    மூன்றும் இருப்பதாலே தான்
    நம்மாளுகள் அழியிறாங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அழியிறாங்க ,அழிக்கிறாங்க ரெண்டும்தான் !
      நன்றி

      Delete
  6. வணக்கம் சகோதரர்
    எப்படி சாமி முடியல. மூன்றும் அருமை. பூவுக்கு விளக்கம், குறுஞ்செய்திக்கு பில். வாக்குமூலம் என்ன சும்மா பூந்து விளையாடிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரர்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் பூந்து விளையாடியதற்கு நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  7. சுருக்கமா சொன்னா சொக்க தங்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. போலி டாக்டர்,SMS சார்ஜ்செய்றவங்க ,டங் லை (Tongue lie ) மூவருமே சொக்கத் தங்கங்கள் தானா?
      நன்றி

      Delete
  8. ஜோக்ஸ் சூப்பர்! டாங்லீ- அதிர்ச்சியான தகவலா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. அவர் சென்ற வருடம் அதிர்ச்சி தந்தவர் ,இப்போ எங்கே பூந்து விளையாடிகிட்டு இருக்காரோ ?
      நன்றி

      Delete
  9. வேளைக்கு மருந்து சாப்பிடுவதை நினைவுறுத்த SMS சேவைகள் பல வருடங்களாக அமெரிக்காவில் நடந்து வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. அங்கே நடை முறைக்கு வந்தது ,இங்கே இன்னும் கற்பனையா இருக்கே ,சீக்கிரமே வல்லரசு ஆயிடுவோம் !
      நன்றி

      Delete
  10. வீட்டில் வந்து ஊட்டி விடவும் நர்ஸை அனுப்பச் சொல்வார்களா ?
    நன்றி

    ReplyDelete
  11. மூன்றுமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  12. போலி டாக்டர்கள,இப்படியும் கண்டுபிடிக்கலாமா............

    ReplyDelete
    Replies
    1. தலையிலே பூ வச்சுகிட்டு பொண்ணுங்களை ரொம்ப நேரமா பார்த்தீங்களான்னு வேற கேள்வி கேட்டாராம் அந்த டாகடர் !
      நன்றி

      Delete
  13. ஒருவேளை பூவின் சைசை புரிந்து கொள்ள
    ஜாடையாகக் கேட்கிறாரோ

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ,எத்தனை முழமென்று கேட்காமல் போனாரே!
      நன்றி

      Delete