27 May 2014

கணவன் மேலே இந்த மரியாதையாவது இருக்கே !

''உங்க கணவரோட கல்லறையையும் , கடல்லே   பாலம் கட்டும் போது பயன்படுத்துற  சிமெண்ட்டை வைத்துதான் கட்டணும்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''கல்லறைக் காயிறதுக்கு முன்னாடியே அடுத்த கல்யாணத்தைப் பண்ணிகிட்டானு யாரும் சொல்லக் கூடாதுன்னுதான் !''




சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்! பெண்டாட்டிமேலே இம்புட்டு பாசமா ?
''உங்க  மாப்பிள்ளை பாசக்காரர்னு அவர் பைக்கைப் பார்த்தா தெரியுதா .எப்படி ?''
'' புது பைக் அல்ல ,புது  மனைவியே எனக்கு மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''


'சிரி'கவிதை!வண்டிக்கு அவசியம் ஸ்டெப்னி ,நமக்கல்ல !

ஸ்டெப்னி ...
டிரைவர்கள் வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல்  செட் செய்துக் கொள்வது !

18 comments:

  1. தங்கள் கல்லறை வரிகள்
    கொஞ்சம்
    சிந்திக்க வைக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. என்னது ,என் கல்லறை வரிகளா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. நாம பாலத்தைப் பார்த்தால் ,அந்த அம்மா எதை கவனித்து இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா ?
      நன்றி

      Delete
  3. சுதாரிப்பான ஆளுதான்
    பிழைச்சுக்குவார்

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை,மாமனார் பைக் வாங்கித் தரலைன்னு சிம்பாலிக்கா சொல்றாரோ ?
      நன்றி

      Delete
  4. மனைவியிடமிருந்து இந்த அளவிற்கு மரியாதை எல்லாம் கணவன்மார்கள் எதிர்பார்க்கலையாம்!!!

    ஸ்டெப்னிக்கு சரியான விளக்கம் தந்திருக்கிறீர்கள்....

    ReplyDelete
    Replies
    1. வேற எப்படி எதிர்ப் பார்க்கிறார்களாம் ?இருக்கும் போதே சுதந்திரமா இருக்க விட்டா போதும்னு சொல்றாங்களா ?

      இந்த விளக்கத்தை எந்த அகராதியிலும் நீங்கள் தேடி கண்டு பிடிக்க முடியாதே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. புது மாப்பிள்ளை ,டிரைவர் இருவரில் யார் ரொம்ப விவரமான ஆள் ?
      நன்றி

      Delete
  6. அப்படீனா சங்கர் சிமெண்ட்தான் வாங்கனும்.
    Killergee
    www.Killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி,நீங்க CID சங்கரா இருப்பீங்க போலிருக்கே ,துப்பு துலக்கி கண்டு பிடிச்சிட்டீங்களே !
      நன்றி

      Delete
  7. மூன்றுமே அசத்தின! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அசத்தல் தொடர வாழ்த்து கூறியதற்கு நன்றி !

      Delete
  8. காதலுக்கும் கல்லரை கட்டிட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. சினிமாவில் காதலை வைத்து கல்லா கட்டிக்கிட்டு இருக்காங்க ,நீங்க என்னடான்னா ....?
      நன்றி

      Delete
  9. Replies
    1. அதுக்காக இவ்வளவு அவசரமா அடுத்த கல்யாணம் பண்ணிக்கிறது சரியா ?கணவன் மரணத்தில் எனக்கு சந்தேகம் வருது !
      நன்றி

      Delete