31 May 2014

பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா' தரகர் சொன்னது !

''பொண்ணுக்கு  காது சரியாக் கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு  சொன்னேனே!''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்! 

'சீனப்பெருங்''சுவரில் முட்டிக்கணும் போல இருக்கு !

''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''


சிரி'கவிதை!

வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!

உயரம் அதிகமாக அதிகமாக  
விழுந்தால் அடியும் பலமாய்தான்  இருக்கும் ...
இதற்கு பயந்தால் ...
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !




30 comments:

  1. "காது சரியாக் கேட்காதுன்னு" என்பதையும்
    ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு'' என்பதையும்
    முடிச்சுப் போட்ட விதம் அழகு!

    ReplyDelete
    Replies
    1. அதை விட அழகு ,முடிச்சை நீங்கள் ரசித்த விதம் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. நன்றி
      மிக்க நன்றி
      மனங்கனிந்த நன்றி

      Delete
  3. முதல் ஜோக் அருமை. ரூம் போட்டு யோசிப்பீங்களோ !!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த அளவிற்கு எல்லாம் வசதி இல்லைங்கோ !
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா.

    நகைச்சுவையை பல தடவைபடித்து படித்து ரசித்தேன்.
    இவைஎல்லாம் விட்டுப்போட்டு ஆதித்தியா தொலைக்காடசிக்கு போங்க தலைவா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. போகத்தான் ஆசை .ஊழியமும் இல்லறமும் போக விட மாட்டேங்குதே!
      நன்றி

      Delete
  5. காது கேட்காது என்பதை இப்படியும் சொல்லலாமா
    அருமை
    தம 1

    ReplyDelete
    Replies
    1. அது தரகர்கள்சொல்லும் ஆயிரத்தில் ஒரு பொய்யாச்சே!
      நன்றி

      Delete
  6. 1. எண்ணெய் - ன்னு கேட்டால் !?..
    2. ஆஹா !..
    3. அடடா !..

    ReplyDelete
    Replies
    1. 1.சீயக்காய் தூளோடு வந்து நிற்பாரோ ?
      2.நிலாவை கையிலே பிடிக்கிறவங்களும் இருக்கிறாங்களே !
      3.உயரம் இப்படியும் பயம் தருமோ ?
      நன்றி

      Delete
  7. சரியாத் தான் சொல்லியிருக்கார்...!

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா ?????அந்த பிராடுக்கு சப்போர்ட் ?
      நன்றி

      Delete
  8. முன்னாடியே சொல்லல என்றவருக்கு புத்தி மட்டு....

    ReplyDelete
    Replies
    1. அதானே ,தரகர் இவ்வளவு விவரமா சொல்லியும் புரிஞ்சிக்கிற துப்பில்லையே !
      நன்றி

      Delete
  9. பிய்த்து உதறுகிறீர்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. அதாவது ,டார்வின் கொள்கைக்கு அடிப்படையான குரங்கு குணம் இன்னும் விடலேன்னு சொல்றீங்க ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  10. பர்ஸ்ட் ஜோக்! பர்ஸ்ட் ரேங்க்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இந்த நாள் ,எனக்கு இனிய நாளோ ?பர்ஸ்ட் ரேங்க் எடுத்து விட்டேனே !
      நன்றி

      Delete
  11. தரகர் சாமர்தியசாலிதான்...பகவான்ஜி மாதிரி....
    www.Killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியுது ,என் வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியலையே !
      நன்றி

      Delete
  12. எந்த சுவர்ல முட்டுரதுன்னு தெரியலியே...ஹீ.ஹீ.ஹீ.

    ReplyDelete
    Replies
    1. இதுக்காக சீனப் பெருந்சுவருக்கா செல்ல முடியும் ?}}
      நன்றி

      Delete
  13. குறிப்பா சொன்னதை புரிஞ்சிக்காம விட்டாரே
    பாவம்

    ReplyDelete
    Replies
    1. குறையை இப்படி குறிப்பா சொன்னா எப்படி புரியும் ?
      நன்றி

      Delete
  14. பயந்தால் உயர்வதற்கு வழியே இல்லை.... நல்ல விஷயம்....

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக ஆழம் தெரியாம காலை விடக்கூடாது !
      நன்றி

      Delete