5 May 2014

மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா ?

''உங்க பெர்சனல் உதவியாளரா என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி பாஸ் ...என் பெயரை ஏன்  சாந்தின்னு மாற்றிக்கச் சொல்றீங்க ?''
''அது என் மனைவி பெயர் ,நான் தூக்கத்திலே உளறினாலும் அவளுக்கு சந்தேகம் வரக் கூடாதுன்னுதான் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!லட்சங்கள் போனாலும் லட்சியம் ஸ்டாராய் மின்னுவதே !

''இவ்வளவு கேஸ்கள்,பவர் ஸ்டார் என்ன ஆவாரோ ?''

''கஞ்சிக்கு வழி  இல்லைன்னாலும் 'புவர்ஸ்டார்'ன்னு 

 போட்டுக்குவார் !''

'சிரி'கவிதை!ரெகுலராய் சந்தித்தால் PICKUP தானா ?

 PICKUP என்பது ,,,

பஸ்களுக்கு இருக்கவேண்டியது ...ஆனால் 

பெண் பயணிக்கும் டிரைவருக்கும் உண்டாவது !



34 comments:

  1. Replies
    1. எனக்கு என்னவோ அந்த ஜோள்ளரை நம்ப முடியலே ,அந்த பொண்ணு வேற இடம் பார்க்கிறது நல்லதுன்னு படுது !
      நன்றி

      Delete
  2. செக்ரட்டரிக்கும் பேர் மாற்றும் புத்திசாலி சிரிக்க வைத்தார்.

    ReplyDelete
    Replies
    1. பேர் மாத்திக்கச் சொல்பவரிடம் எப்படி வேலைப் பார்க்கிறதுன்னு அந்த பொண்ணு யோசிப்பதாக கேள்வி !
      நன்றி

      Delete
  3. உளறுவது நிஜமாகாமல் இருந்தால் சரி...

    ReplyDelete
    Replies
    1. நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கும் ?இப்படி முன் கூட்டி யோசிப்பவரிடம் நிஜமாகாமல் போகாதே !
      நன்றி

      Delete
  4. உதவியாளர் உளறி விட்டால்?..

    ReplyDelete
    Replies
    1. அப்படி உளறும் அளவிற்கு பாஸ் நடந்து கொண்டால் ..உதவியாளர் ,எஜமானி ஆயிடுவாங்களே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. செகரட்டரி ஆக இருக்கும் வரை ஓகே,'சீக்ரெட் 'டரி தான் ஆகிவிடக் கூடாது !
      நன்றி

      Delete
  6. நல்ல ஐடியாதான்
    நல்ல விவரமான ஆளாத்தான் இருக்காரு
    பொழைசிக்குவாரு

    ReplyDelete
    Replies
    1. விவரமான ஆளாயிருந்தா ஆம்பளை PA போதும் ,இந்த ஜொள்ளுபார்ட்டி
      பொழைச்சிக்குவாரான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  7. தூக்கத்துல உளரும் வியாதி இருந்தாலே ஆபத்துதான். சரியான நேரத்தில் சரியாக ஒளறிவிட்டு சிக்கிக்கொள்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தானாட விட்டாலும் தசையாடும்னு சொல்ற மாதிரி உளறலும் காட்டிக் கொடுத்து விடுமோ ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. நான் நல்லா பிக் அப் ஆயிட்டேன்னு சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  9. சாந்தமான சாந்தி எல்லாம் கிடையாது!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனுபவமும் இப்படித்தானா ?
      முதல் வருகைக்கும் ,கமண்டிற்கும் நன்றி ரமேஷ் ஜி !

      Delete
  10. அட, அருமையான யோசனை தான். பாவம் அந்த மேலாளரின் மனைவி

    ReplyDelete
    Replies
    1. போக போகத்தான் தெரியும் யார் பாவமென்று !
      நன்றி

      Delete
  11. Replies
    1. ஒரு பொண்ணோட பெயரை மாற்றிக்க சொல்றது உங்களுக்கு நல்ல ஜோக்கா ?
      நன்றி !

      Delete
  12. படப்பிடிப்பின் காரணத்தினால தளத்திற்கு வர முடியவில்லை! மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. புரோட்டா கார்த்திக் குறும் படத்தைப் பற்றி சகோ .DD அவர்களிடம் கேட்டு அறிந்தேன் .உங்களின் பன்முகத் திறமை அறிந்து மிக்க மகிழ்ச்சி !
      உங்களின் சமீபத்திய பதிவு மூலமும் விபரங்கள் அறிந்தேன் ,பல பதிவர்கள் நடிகர்களாக அறிமுகம் படத்தைக் காண ஆவலோடு இருக்கிறேன் !
      நன்றி

      Delete
  13. அட.திருட்டு தனத்திலும் இப்படியும் இருக்கோ..........ம்ம்ம.

    ReplyDelete
    Replies
    1. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்னு நினைக்கிறது தப்பா ?
      நன்றி

      Delete
  14. இல்லேன்னா சந்தி சிரித்துவிடுமே!

    ReplyDelete
    Replies
    1. போலி சாந்தி கிட்டேஇவர் முறைதவறி நடந்துக்கிட்டா சந்தி சிரிக்கும் படியாத்தானே ஆகும் ?
      நன்றி

      Delete
  15. Replies
    1. பிக் அப்பைதானே சொல்றீங்க ?
      நன்றி

      Delete
  16. பலே ஐடியாவா இருக்கே பேர் மாற்றுவது!

    ReplyDelete
    Replies
    1. தேவை ஏற்படும் போது ஐடியாவும் வரத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete