''தலைவர் ஒன்பதாவது வரை படித்ததை நிருபீக்க தலைமை ஆசிரியரை மேடைக்கு கூட்டிட்டு வந்து பேசச் சொன்னது தப்பாப் போச்சா ,ஏன் ?''
''படிக்கிற காலத்திலேயே கஞ்சா அடித்தான் என்று அடி வாங்கியது ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்துவிட்டார் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
''படிக்கிற காலத்திலேயே கஞ்சா அடித்தான் என்று அடி வாங்கியது ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்துவிட்டார் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!உயிர் இருக்கிறதான்னு இப்படியும் செக் செய்யலாமா ?
'' நோயாளிக்கு உயிர் இருக்கான்னு செக் பண்ற
விதத்திலேயே அவர் போலி டாக்டர்ன்னு தெரிஞ்சுப்
போச்சா ,எப்படி !''
விதத்திலேயே அவர் போலி டாக்டர்ன்னு தெரிஞ்சுப்
போச்சா ,எப்படி !''
என்றும் வாழும் TMS !
என்றும் வாழும் TMS !
நம் நெஞ்சங்களை எல்லாம் தன் வசீகரக் குரலால் மகிழ்வித்துக் கொண்டிருந்த TMS அவர்களின் உயிர் இன்றுடன் ஓய்வுப் பெற்றது !காற்றுள்ள வரைக்கும் அவர் குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
சில வருடங்களுக்கு முன்னால் எதிர்ப்பார்க்காமல் அவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது ...
என் உறவினர் ஒருவர் மதுரை கீழவாசல் அருகில் உள்ள கிளினிக்கில் அட்மிட் ஆகியிருந்தார் .அந்த கிளினிக் இருக்கும் இடத்தை யாரிடம் விசாரிப்பது என்று பார்த்தபோது ...சிக்னல் அருகே ஒரு வீட்டில் ,ஈசி சேரில் ஒரு பெரியவர் சாய்ந்து அமர்ந்து இருந்தார் ,அவரிடம் சென்று என் மனைவி விலாசம் கேட்டு வந்தார் .டூ வீலரில் வெளியே நின்று இருந்த என்னிடம் வந்து 'அந்த பெரியவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது 'என் மனைவி சொல்லவும் நான் அவரை பார்த்தேன் ...அதிசயமாய் இருந்தது ,,அவர் அய்யா TMS தான் !மிகவும் எளிமையாக மேல்சட்டைக் கூட இல்லாமல் இருந்தஅவரை சந்திப்போமென நினைக்கவே இல்லை ..பிறகு அவரிடம் சென்று நலம் விசாரித்து எங்களின் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினோம் .
தமிழ் உலகத்திற்கே முகவரியாய் இருந்தவரிடமே இன்னொரு முகவரி விசாரித்தது நாங்களாகத்தான் இருப்போம் .இனி எந்த முகவரியில் அவரை சென்று சந்திப்போம் ?
உலகுள்ளவரை அவர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
துக்கத்தில் ...
பகவான்ஜி ,
|
|
Tweet |
நினைச்சது ஒன்னு; நடந்தது ஒன்னு! பாவம் தலைவர்!!
ReplyDeleteவலுக்கட்டாயமா HM யை தூக்கி வந்து பேசச் சொன்னா இப்படித்தானே பேசுவார் ?
Deleteநன்றி
அமரர் TMS அவர்களின் நினைவில் மனம் நெகிழ்ந்தது.
ReplyDeleteஅந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் போது,மாமனிதருடன் செல் மூலம் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டிருக்கலாமோ என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் !
Deleteநன்றி
TMS + எளிமை என்றும் இனிமை...
ReplyDeleteகற்பனை ,கற்சிலை உள்ள அளவும் தமிழ் நெஞ்சங்களில் அவர் வாழ்ந்துக் கொண்டே இருப்பார் !
Deleteநன்றி
டி எம் எஸ் அவர்களிடம் பேசிஇருக்கிறீர்களா
ReplyDeleteகொடுத்து வைத்தவர் நண்பரே தாங்கள்
தம 3
இப்படி சந்திப்போம் என்று கனவில் கூட நினைத்ததில்லை ,திடீர் என்று ஒரு இன்ப அதிர்ச்சி தந்த சந்திப்பு !
Deleteநன்றி
தலைவரையே அசத்திட்டாரே வாத்யார்....
ReplyDeleteடி.எம்.எஸ்.... - அவரைப் போல இனிமேல் எவரும் வரப் போவதில்லை.... அருமையான பாடகர்/மனிதர்.
தலைவர் கஞ்சா சிங்கம் என்றால் வாத்தியார் எதற்கும் அஞ்சா சிங்கமாச்சே !
Deleteபின்னணி பாடகர்களில் முன்னணி பாடகரை மறக்க முடியுமா ?
நன்றி
பொணத்துக்கு இடுப்புல கிச்சுமூட்டும்போது... கிச்சு தாம்பாளம், கிய்யா கிய்யா தாம்பாளம்னு சொல்வாரா ? டாக்டரு.......
ReplyDeleteKillergee
www.Killergee.blogspot.com
சீரீயஸா தொழில் பண்ற நேரத்திலே அப்படி எல்லாம் பாட மாட்டார் !
Deleteநன்றி
அரசியய்வாதிகளுக்கு தான் சூடு சுரணை எல்லாம் இருக்காதே. அதனால் இந்த விஷயம் எல்லாம் தாப்பாகவே ஆகாது.
ReplyDeleteபுகழின் உச்சியில் இருப்பவர்கள், எளிமையை விரும்புவதால் தான் அவர்களை மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள்.
நான் ஒன்பதாம் வகுப்பிலேயே கஞ்சா குடியன் ,அப்புறம் வியாபாரி என்று பெருமையாக சொல்லி கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை !
Deleteபதவி வரும்போது வரும்போது பணிவு வரவேண்டும் என்று பாடியது மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டியவர் !
நன்றி
ஜோக்ஸ் சூப்பர்! எளிமையான மனிதர் டி.எம்.எஸ் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஎளிமையான மனிதனுக்கு எவ்வளவு கம்பீரமான குரல் ,காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே !
Deleteநன்றி
தலைவரின் எண்ணமும்
ReplyDeleteதலைமை ஆசிரியரின் வண்ணமும்
முரண்பட்டுவிட்டதே!
உங்களின் இரண்டு கருத்துரையும் முரண்படவில்லையே !
Deleteநன்றி
தலைவரின் எண்ணமும்
ReplyDeleteதலைமை ஆசிரியரின் வண்ணமும்
முரண்பட்டுவிட்டதே!
மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்தால் இப்படித்தான் ஆகும் !
Deleteநன்றி
அடக் கஷ்டமே
ReplyDeleteசான்றிதழ் வாங்குவதோடு
நிறுத்தி இருக்கக் கூடாதா ?
அந்த சான்றிதழ் இல்லாததால்தானே சாட்சிக்கு இவரை அழைத்தார் ?இவர் கொடுத்த சான்றிதழை உலகம் மறக்காது !
Deleteநன்றி