7 May 2014

தாலி பாக்கியம் இவருக்கு நிலைக்குமா ?

''நிறைய தான தர்மம் பண்ற,உங்க வீட்டுக்காரர் ஹெல்மெட் போட்டுக்கமாட்டேன்னு சொல்றாரா ,ஏன் ?''
''தர்மம் தலைக் காக்கும்னுசொல்றாரே !!''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு உண்டா ?

''மடிசார் மாமிங்கிற சினிமா தலைப்புக்கு எதிர்ப்பாமே ?''

''மடி 'சாரி ' மாமின்னு மாத்திட்டாப் போச்சு !''


'சிரி'கவிதை!நான் டாஸ்மாக் தண்ணியைச் சொல்லலே !



நாம் யார்க்கும் அடிமையல்லோம் ...

என்று சொன்ன பாரதி இன்றிருந்தால் ...

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் அவரும் 

மினரல் வாட்டருக்கு அடிமை ஆகியிருப்பார் !

24 comments:

  1. Replies
    1. 1 ம் 2 ம் he he கிடையாது ,இரண்டும் SHE ,SHE சம்பந்தப்பட்டது !
      3 சுதந்திர தேவியே இந்த கொடுமை தகுமோ என்று நியாயமும் கேட்டிருப்பார் !
      நன்றி

      Delete
  2. உண்மை தான் பாரதியாரும் அடிமையாகியிருக்கலாம்!!!

    ReplyDelete
    Replies
    1. விளக்கமாச் சொல்லுங்க மினரல் தண்ணிக்கு என்று !
      நன்றி

      Delete
  3. வணக்கம் சகோதரர்
    தர்மம் தலை காக்கும் எனும் என்பதற்கு இப்படி ஒரு விளக்கம் நான் எங்கும் கண்டதில்லை சாமி. எல்லாத்துக்கும் சிறப்பு சேர்த்தால் போல் சென்ற வருடம் இதே நாளில் நல்ல சிந்தனை புதுமையான யோசனை. வலைப்பதிவர்கள் ஒவ்வொருவரும் சென்ற வருடம் இதே நாளில் எனும் தலைப்பில் தங்கள் பாணியைத் தொடர்ந்தாலும் தொடர்வார்கள். நன்றி சகோதரரே.

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளியின் தனித்துவமே வேறெங்கும் படிக்காததை மட்டுமே ,இங்கே படிக்கக் கிடைக்கும் என்பதுதானே ?

      ஜோக்காளிக்கு மட்டுமே உள்ள இன்னொரு தனித்துவம் தினசரி பதிவுகள் ,வேறு யாரும் சென்ற வருடம் இதே நாளில் என்று தினசரி போட்டுக்கொள்ள முடியாதே ?
      நன்றி

      Delete
  4. கெரகம்..? ..மதுரப் பக்கந் தான் நல்லா மழ பேஞ்சிருக்காமே!.. அப்பறமும் எதுக்குங்குறேன்!..

    ReplyDelete
    Replies
    1. மழை பெய்யும்போதுதான் சாலை வழுக்கும் ...ஈருருளியில் செல்லும்போது தலைக்கவசம் இப்பதானே ரொம்ப அவசியம் ?
      நன்றி

      Delete
  5. ''நிறைய தான தர்மம் பண்ற,உங்க வீட்டுக்காரர் ஹெல்மெட் போட்டுக்கமாட்டேன்னு சொல்றாரா ,ஏன் ?''
    ''தர்மம் தலைக் காக்கும்னுசொல்றாரே !!''

    நல்ல லொள்ளுத்தான் :)))

    ReplyDelete
    Replies
    1. அப்ப,தர்மம் தலைக்காக்கும்னு சொல்றதெல்லாம் டூப்பா ?அம்பாளுக்கு தங்க தலைக்கவசம் இவர் நன்கொடையா கொடுத்தாலும் புண்ணியம் இல்லையா ?

      அதைக்காட்டிலும் இது பெரிய லொள்ளுன்னு சொல்லிடாதீங்க !
      நன்றி

      Delete
  6. Replies
    1. இப்படி அமைதியா சிரிச்சா போதாது லாயர் ,உங்க வாதத்தை எடுத்து வைங்க !
      நன்றி

      Delete
  7. இதிலிருந்து தாலி பாக்கியம் காக்க தர்மம் செய்யனுமுன்னு தெரியுது............

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே தலையில் அடிபட்டு இறப்பவன் எல்லாம் தர்மமே செய்யவில்லையா ?இதைப் பற்றி யாராவது P.hd செய்து உண்மையைச் சொல்வார்களா ?
      நன்றி

      Delete
  8. பாவம் அந்த மனுசன். போட்டுக்க வாங்கின எத்த ஹெல்மெட்ட தானம் பண்ணாரோ. மாட்டிக்கிட்டு போலீசுக்கு மாமூல் தானம் ப்ண்ணாம இருந்தா சரி.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அது எல்லோரும் செய்கிற மாமூல் தானம்தானே ?
      நன்றி

      Delete
  9. ‘நறுக்’னு கொட்டிட்டீங்க ஜி.

    ReplyDelete
    Replies
    1. குட்டு வாங்கியவர் தர்மகர்த்தாவா ,மாமியா ,பாரதியாரான்னு சொல்லுங்க !
      நன்றி

      Delete
  10. ஹெல்மெட்டுக்கு பேர் தர்மம் னு வச்சா என்ன?

    ReplyDelete
    Replies
    1. நவீன திருவோடு தானே அது ?தாராளமா வைக்கலாம் !
      நன்றி

      Delete
  11. தர்மம் தலை காக்கும் - ஹெல்மெட் உயிர்காக்கும்...

    ReplyDelete
    Replies
    1. கொலப்பமா கீதே ,தலைய காப்பது தர்மமா ,ஹெல்மெட்டா ?
      நன்றி

      Delete
  12. தர்மம் தலைக் காக்குமா?
    தாலி பாக்கியம் மனையாளுக்கு நிலைக்குமா?
    எனக்கு என்னமோ ஐயம்!

    ReplyDelete
    Replies
    1. தர்மம் தலைக்காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்னு சொல்றது வெறும் பேத்தல் தானா ?
      நன்றி

      Delete