11 May 2014

இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம் ?

''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு ஷேக்ஸ்பியர்  என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார் ?''
''எனக்கும் தெரியலே , EB ஆபீசர் ஒருத்தர் பக்கத்து வீட்டிலேதான் இருக்கார் ,அவரிடம் கேட்டுச் சொல்றேன் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!மரமண்டைக்கு புரியவே புரியாது !

''அரிசிக் கடைக்கு வந்து மர  வியாபாரமும் 

உண்டான்னு ஏன் கேக்குறீங்க ?''

''உடனடி 'டோர் 'டெலிவரி செய்யப்படும்னு போட்டு 

இருக்கீங்களே !''

'சிரி'கவிதை!பெண்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் !

வயசுப் பொண்ணு வீட்டில் இருந்தால் ஒரு வசதி ...

வாலிபப் பசங்க வீட்டை சரியாக அடையாளம் காட்டி 

விடுவார்கள் !.

38 comments:

  1. Replies
    1. EB ஆபீசர் அடிக்கடி ராத்திரியில் பியுசைப் பிடுங்கிற காரணமும் இதுதானா ,சீனி ஜி ?
      நன்றி

      Delete
  2. நீங்கள் எத்தனை பேருக்கு சரியான விலாசத்தை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்????

    ReplyDelete
    Replies
    1. நீங்க கூட வந்து கேட்டதை மறந்து விட்டீர்களா ?
      நன்றி

      Delete
  3. ஷேக்ஸ்பியர் சொன்ன அர்த்தமும்
    நம்மாளுகள் பார்க்கிற அர்த்தமும்
    வேறுபடுகிறதே...

    ReplyDelete
    Replies
    1. அவர்களோட அழகியல் கோட்பாடே வேற ஆச்சே !
      நன்றி

      Delete
  4. Replies
    1. ஷேக்ஸ்பியர் சொன்ன அர்த்தத்தை வாத்தியார் நீங்களாவது சொல்லக் கூடாதா ?
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    தலைவா...

    ஆகாநன்றாக உள்ளது..நகைச்சுவை.
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மர டோரை கேட்ட மர மண்டையில் ஷேக்ஸ்பியர் சொன்னதும் வில்லங்கமாத்தான் புரியுமா ரூபன் ஜி ?
      நன்றி

      Delete
  6. 1. இந்த மாதிரி அர்த்தத்தில் சினிமா பாட்டு எழுதி ஒரு கவிஞர் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
    2. அட..!?
    3. எத்தனை நாளைக்கு?..

    ReplyDelete
    Replies
    1. 1.அது என்ன பாட்டு ?எந்த கவிஞர் என்று சொன்னால் ரசிக்கலாமே ,சொல்லுங்க !
      2.இப்படி கேட்டவரை டோரை சாத்தி அடி பின்னியிருப்பாரோ ?
      3.அந்த தேவதை மனதில் வாழும் நாள் வரை !
      நன்றி

      Delete
  7. :-) 'டோர் 'டெலிவரி மேட்டரு சூப்பருபா...!
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. என்ன போட்டீங்க,டோருக்கு தாழ்ப்பாளா?
      நன்றி

      Delete
  8. Replies
    1. 1.புரிந்தது என்று அர்த்தமா ,இந்த ம்?
      2.இவர் கடையிலே அரிசி வாங்க வந்த மாதிரி தெரியலே !
      3.விலாசம் தவறாய் போக வாயப்பே இல்லை ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  9. ரசிக்கும்படியான நகைச்சுவைகள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் !
      நன்றி

      Delete
  10. Replies
    1. நகைப்புக்கு நன்றி ஜமான்!
      நன்றி

      Delete
  11. மூன்றுமே நன்றாயிருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரி ,சாரி ...ஸ்ரீராம் ஜி !
      நன்றி

      Delete
  12. அப்ப 'விண்டோஸ்' விக்கிற பில்கேட்ஸ் கிட்டயும் இப்படித்தான் கேப்பாரோ ?

    ReplyDelete
    Replies
    1. கதவை இங்கே வாங்கினா ,விண்டோவ்ஸ் அவர்கிட்டே தானே வாங்கணும் ?இவர்வீடு கட்டி வாழ்ந்த மாதிரிதான் !
      நன்றி

      Delete
  13. வயசுப் பொண்ணு வீட்டில் இருந்தால் ஒரு வசதி ...

    வாலிபப் பசங்க வீட்டை சரியாக அடையாளம் காட்டி

    விடுவார்கள் !...சூப்பரு

    ReplyDelete
    Replies
    1. என்ன பரிதி ஜி ,வாலிப நினைவுகள் சிறகடித்து பறக்குதா ?
      நன்றி

      Delete
  14. இவருக்கு அனுபவம் இல்லேன்னுதானே மி.வா ஆபிசர்கிட்ட கேட்டு சொல்றேன் என்கிறார். ஒருவேள அவர்க்கும் தெரியலைன்னா எப்படி தெரிந்து கொள்வது.

    ReplyDelete
    Replies
    1. தான் பெற்ற இன்பம் (?) அனைவரும் பெறணும்னு விளக்கை அணைக்கிற அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை !
      நன்றி

      Delete
  15. சிரித்தேன். ஆனால்.....

    “4 ல் இருந்து 6ஆ?உச்சத்தில் ஏற ஏற சறுக்கலும் அதிகமாகுமோ !“

    இது எல்லாவற்றையும் விட சூப்பர் பகவான் ஜி.
    உண்மையை அனுபவத்தில் எழுதி இருக்கிறீர்கள். தவறாக எண்ண வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணம் ஒவ்வொரு வாரமும் முன்னணி வலைப் பட்டியலை வெளியிடுகிறது ,இன்றும் ஜோக்காளி முதலிடம் தான் கடந்த இரண்டு மாதங்களாக வார பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜோக்காளி ,ஆறாம் இடத்திற்கு போனது எப்படி என்ற பிரம்ம ரகசியம் புரிய மாட்டேங்கிறது !

      நீங்கள் சொன்ன பிறகுதான் ,தவறாய் எண்ணுவதற்கு சறுக்கலில் என்ன இருக்கிறது என்று யோசிக்கறேன் !
      நன்றி

      Delete
  16. வணக்கம் சகோதரி
    முத்தாய்ப்பான மூன்று நகைச்சுவைகளும் சிரிக்க வைக்கிறது. எங்கிருந்து தான் யோசிப்பீர்களோ என்ற சிந்தனையும் எழுகிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரியா ?விலாசத்தை வாலிப பசங்ககிட்டே சரியாய் விசாரித்த மாதிரி தெரியலையே !
      பாராட்டுக்கு நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  17. பெண்களைப் பற்றி எழுதியது வணக்கம் சகோதரி என்றல்லவா போட்டுவிட்டேன் மன்னிக்கவும் சகோதரரே! (இப்ப கோபம் போயிருச்சா)

    ReplyDelete
    Replies
    1. கோபமில்லே சகோதரி சாரி சகோதரா !
      நன்றி

      Delete
  18. வில்லியம் ஷேக்ஸ்பியர், பெண்களை விமர்சிச்சே காலத்தைப் போக்கிவிட்டார் பாவம். அவரையோ அவர் இனத்தையோ கவனிக்கவில்லை. :) விளக்கை அணைப்பதே பெண்கள், ஆண்கள் அழகைப் பார்த்து "மூட் அவ்ட்" ஆகமல் இருக்கத்தான். விளக்கை அணைக்கச் சொல்லுவது பெண் தான். இல்லையா? நம்மாளு என்னைக்கு அணைக்கச் சொன்னான் விளக்கை? :)))

    உங்க "ஜோக்கை:கூட சீரியஸாக்கி விட்டேன் போல! :)))

    ReplyDelete
    Replies
    1. வில்லியம் ஷேக்ஸ்பியர் பெண்களை ரசித்துதானே எழுதி உள்ளார் ?நீங்கள் அவரை பெண்குலத்தின் வில்லி போல் அல்லவா சொல்கிறீர்கள் ?
      அதானே ,நம்மால் என்னைக்கு மூட் அவுட் ஆனான் ?

      காமெடி பீஸ் என்னைக்கு சீரியஸ் ஆச்சு ?
      நன்றி வருண் ஜி !

      Delete
  19. முன்று மே ஹாஹாஹா! ஷேக்ஸ்பியரின் ரசனை அருமைதான்!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வெளிச்சத்தில் படிக்கவும் ,இருட்டில் சிந்திக்கவும் வைத்த ஷேக்ஸ்பியர் ரசனைக் கார கவிஞர்தான் !
      நன்றி

      Delete