23 May 2014

பையன் சரியா படிக்கலைன்னா இப்படியுமா ?

''உங்க  பையன் செய்ஞ்ச காரியத்தாலே... .ஒரு வார்த்தைக்கு,தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம்னு  சொல்லக் கூட முடியலியா ,ஏன் ?''
''ஒன்பதாம் வகுப்பிலே மூணு வருசமா  உட்கார்ந்து  இருக்கிறவனை  முதல்லே எழுப்புங்கன்னு நக்கல் அடிக்கிறாங்களே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!காட்டின் நடுவே 'வன'மூர்த்தி !
''என் முதலாளிகிட்டே கார் ஓட்ட 'காடா 'இருக்குன்னு சொன்னா ,வன மூர்த்திங்கிற என் பெயரை மாத்திக்கன்னு சொல்றாரே ,ஏன் ?''
''வனமூர்த்தி இருக்கிற இடம் காடுதானே ?நீ 'ஹார்டா 'இருக்குன்னு சொல்லி இருக்கணும் !



'சிரி'கவிதை!இது ஒரு சுயநல வேண்டுதல் !

என் உறவுகளுக்கும் வேண்டும் ...
என் பொருளாதார வலிமை !
கொடுக்கல் இருக்காதே !



27 comments:

  1. 1) பாவமா இருக்கு!
    2) வன மூர்த்தி சினமூர்த்தி ஆகியிருப்பாரே!
    3) என்ன ஒரு சுயநலப் பொதுநலம்!

    ReplyDelete
    Replies
    1. 1.உட்கார்ந்து இருப்பவனையே எழுப்ப முடியலைன்னா ,தூங்கிற மாதிரிநடிப்பவனை எழுப்ப முடியாதுதானே ?
      2.வன மூர்த்திக்கு நான் ஏற்றிய விளக்கினால்,நீங்கள் ஏற்றிய விளக்கு பிரகாசமா இருக்கு !
      3.தன் தப்பிக்கணும் என்பதற்காகவாவது நல்லது நினைக்கிறாரே !
      நன்றி

      Delete
  2. :)))

    வன மூர்த்தி - சின மூர்த்தி! ரசித்தேன் ஸ்ரீராம்.

    ReplyDelete
    Replies
    1. சாதாரண சின மூர்த்தி இல்லே ...வெஞ்சின மூர்த்தி !
      நன்றி

      Delete
  3. ஒன்பதாம் வகுப்புல மூணு வருஷமா தூங்கிக்கிட்டே தான் இருக்கானா??
    அப்ப எந்த அளவிற்கு வாத்தியார் மொக்கையை போட்டிருப்பார். பாவம் பையன்.

    ReplyDelete
    Replies
    1. மொக்கையைப் புரிஞ்சிக்கிற அளவிற்கு இவனுக்கு அறிவில்லையா ,இவனுக்கு புரிய மாதிரி வாத்தியாருக்கு மொக்கைப் போடத் தெரியலையான்னு கமிஷன் போட்டுதான் விசாரிக்கணும் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. என்ன P hd யா பண்றான் ?
      நன்றி

      Delete
  5. சகோதரருக்கு வணக்கம்
    பத்தாம் வகுப்பு படிப்பதற்கு முன் தியானம் செய்ய வேண்டுமென்று யாரும் சொல்லி விட்டார்களோ என்னவோ! அழகான பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எட்டாம் வகுப்புவரை all pass செய்ற மாதிரி இப்பவும் செய்ஞ்சா நல்லா இருக்கும் !
      நன்றி

      Delete
  6. அலுப்படிக்காம மூணு வருஷம் ஒரே வகுப்பில படிக்கிற அவனோட கஸ்ரம்
    உங்களுக்குமா விளங்கவில்லை ?............:)))))))))) .

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புரியுது ,அவங்கப்பனுக்கு தான் புரியலே !
      நன்றி

      Delete
  7. 9ம் வகுப்புல பேஸ்மட்டம் ஸ்ட்ராங்கா போட்டாதான் பத்தாவதுல நிறைய மார்க் வாங்கலாம் னு நினைச்சுட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. அதுக்கும் ஒரு அளவில்லையா ?இவன் பத்தாவது பாஸ் ஆவதற்குள் ,கூடப் படித்தவனே வாத்தியாரா வந்து பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவான் போலிருக்கே !
      நன்றி

      Delete
  8. ஏதாவது விஞ்ஞானி ஆகும் கனவில் இருப்பான்
    ஆழ்ந்த சிந்தனை...தூக்கமா?

    ReplyDelete
    Replies
    1. அவங்கப்பன் ...தூங்கிற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாதுன்னு சொல்ல வந்தது இவனுக்குதான் பொருந்துமோ ?
      நன்றி

      Delete
  9. புடுச்சு போச்சுன்னா...அத யாருலாயும் மாத்த முடியாதுங்கோ......”ஒன்பாதம் வகுப்பில் பெயிலான வலிப்போக்கன்.”.

    ReplyDelete
    Replies
    1. ஒன்பாதமே கதின்னு புடிச்ச பொண்ணு பின்னாலே திரிவானோ என்னவோ ?பார்ப்போம் ஒன்பதாம் வகுப்பைத் தாண்டுவானா என்று ?
      நன்றி

      Delete
  10. மூன்றுமே அருமை! நன்றி!

    ReplyDelete
  11. மூனு வருஷமா தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம். ஆனா, மூச்சை இழுத்துவிட்டுத் தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாதுன்னு சொல்லலாமே?

    ReplyDelete
    Replies
    1. இனிமே இதுதான் புது மொழி !
      நன்றி

      Delete
  12. பொருளாதார வலிமையோடு இருக்குறீர்கள் என்பதை அறிந்து கொண்டேன்
    வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வலிமை என்றால் சாதாரண வலிமை இல்லை ,IMF க்கே கடன் கொடுக்கும் அளவிற்கு வலிமை !(திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதைப் போல் )
      நன்றி

      Delete
  13. வாத்தியாரைப் பிடிச்சுப்போய்
    ஒருவேளை அப்படி ஒட்டிக்கிட்டானோ ?

    ReplyDelete
    Replies
    1. வாத்தியார் மாறிக்கொண்டே இருக்கிறார் ,மாறாமல் இருப்பது இவன் மட்டும்தான் !
      நன்றி

      Delete