1 August 2014

பெண்டாட்டின்னா இந்த பயம் இருக்கணும் ?


பெண்டாட்டின்னா இந்த பயம் இருக்கணும் !

              ''தக்காளி விக்கிற விலையிலே குப்பையிலே போடுறீங்களே ,ஏன் சார் ?''
                 ''அதெல்லாம் உடைஞ்ச தக்காளி ....கடைக்காரனுக்கு நல்ல தக்காளி மட்டும் பொறுக்கி எடுத்தால் பிடிக்கலே ,உடைஞ்ச தக்காளியை கொண்டு போனா பெண்டாட்டிக்குப் பிடிக்கலே ,அதான் !''




சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

                                                  தின 'சிரி ' ஜோக்!
           
 வயசுக்கு வந்த பிள்ளைங்களை பூட்டி வைக்க முடியுமா ?

''என்னங்க ,காணாமப் போன நம்ம பையன் போன்லே என்ன சொன்னான் ?''

 ''பிரியாவை தேட வேண்டாம்னு பக்கத்து வீட்டுக்குப்  போய் சொல்லச் சொல்றான் !'



'சிரி'கவிதை! 
பணம் இருக்கிறதென்று பிறந்த நாளைக் கொண்டாடலாமா ?

இறந்தபின்னும் நம் பிறந்தநாளைக் கொண்டாடவும் 
நாலு பேர்கள்  இருக்கிறார்கள் என்றால் ...
இன்று நாம் நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது !

22 comments:

  1. அப்படீனா தக்காளிக்கு யாரு பணம் கொடுக்குறது ?
    அப்படீனா ஒரே கால்ல ரெண்டு மேட்டரு..
    கவிதை ஸூப்பரு...

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒண்ணும்கவலைப் படாதீங்க ,அவரே கொடுத்திடுவார் !
      ஒரு பெரிய பிரச்சினை முடிஞ்சுப் போச்சே !
      சரிதானே ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா..

    எல்லா நகைச்சுவையும் அர்த்தம் நிறைந்தவை... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அர்த்தத்தைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி !

      Delete
  3. ஹஹாஅஹாஆ....

    சிரி கவிதை அர்த்தப் பொதிந்த ஒன்று....அருமை ஜி!

    ReplyDelete
    Replies
    1. டெல்லியில் தக்காளி விலை கிலோ எண்பது ரூபாயாமே ?தலைநகரிலேயே இந்த நிலை என்றால் .......?
      நன்றி

      Delete
    2. ஜி ரூ 100 ந்னு வித்துச்சுனு சொன்னாங்க...வெங்காயமும்...பரவயில்லையே ஜி விலை குறஞ்சுருக்கு???!!!!!!!!!

      Delete
    3. எது மலிவா இருக்கோ அதை பயன்படுத்திக்க வேண்டியதுதான் ,வேற வழியில்லை ,ஆனா இந்த பாழாப்போன நாக்குக்கு இது புரிய மாட்டேங்குதே!
      நன்றி

      Delete
  4. பாவம் அந்த மனிதர். இதுக்குத்தான் காய் வாங்க ஆம்பிளைங்க போக கூடாது.. ஆனா முடியாதே!!!

    2. சூப்பர் ஜோக்

    3. சிந்திக்க வைக்க கூடிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. போகக் கூடாதுன்னுதான் படுது,ஆனா ,போகாம இருக்க முடியலையே !

      பிறந்த நாள் குழந்தைகள் கொண்டாடுவது சரிதான் ,மண்ணுக்குப் பாரமாய் இருப்பவர்களும் கொண்டாடலாமா ?
      நன்றி

      Delete
  5. ''..இறந்தபின்னும் நம் பிறந்தநாளைக் கொண்டாடவும்
    நாலு பேர்கள் இருக்கிறார்கள் என்றால் ...

    இன்று நாம் நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது ...'' ஆம் உண்மையில் நல்ல கருத்து.

    ஆம்!......நானும் இது பற்றி யோசிப்பதுண்டு.
    (இறந்தபின் கொண்டாடுவது)
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வெறும் பகட்டுக்காக சிலர் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் பார்க்கும் போதுஇப்படித்தான் எனக்கு தோன்றுகிறது !
      நன்றி

      Delete
  6. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா !

      Delete
  7. பொண்டாட்டி இருக்கிறவுகபொண்டாட்டிக்கு பயப்படுவாக சரி, இல்லாதவுக யாருக்கு பயப்படுவாக...ஜீ

    ReplyDelete
    Replies
    1. பெண்டாட்டி இருந்தாலும் இல்லைன்னாலும் மனசாட்சிக்கு பயந்தால் போதும்,கடவுள் கூடத் தேவையில்லை !
      நன்றி

      Delete
  8. ஜோக்ஸ் சூப்பர்! சிரி கவிதையின் வாசகங்கள் சிந்திக்க வைத்தது! அருமை!

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்றது சரிதானே ?
      நன்றி

      Delete
  9. பையன் ரொம்ப ஸ்மார்ட் தான்:)
    தம 5

    ReplyDelete
    Replies
    1. இல்லைன்னா,இழுத்துகிட்டு ஓடியிருக்கிறதை இவ்வளவு நாசூக்கா சொல்வானா ?
      நன்றி

      Delete
  10. தின சிரி ஜோக் ..செம கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. கலக்கலுக்கு வந்து நீங்களும் வந்து கலக்கியதற்கு நன்றி !

      Delete