19 August 2014

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு ?

  --------------------------------------------------------------------------------    ஜென்டில்மேன் இராவணன் ?      
          
        ''இராவணன்  சீதையை சரியாக பத்து மாதம் சிறை வைத்து இருந்தாராம் ,இதில் இருந்து என்ன தெரியுது ?''
            ''இராவணன் சீதையிடம் சேஷ்டை எதுவும் செய்யலேன்னு தெரியுது !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

''நீ கேட்ட நெக்லசை உன் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா ?''
''உனக்குத்தான் கழுத்தே இல்லையே ,நெக்லஸ் எதுக்குன்னு கிண்டல்தான் பண்றார் !''

தன் குறையை மறக்கும் மனிதன் !

பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
எந்த வகையில் நியாயம் ?

22 comments:

  1. 01. அதாவது இராவணன் ''சீதையிடம்தானே'' சேஷ்டை செய்யலே ?

    02. பொண்டாட்டியை இப்படியும் சமாளிக்கலாமா ?

    03. இந்த பூனை அமலாபால் விட்டு பூனையா ?

    ReplyDelete
    Replies
    1. 1..வேறெந்த பெண்ணிடமும் சேஷ்டை செய்ததாய் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் ?
      2.சமாளிக்கிறதா ?சரி கழுத்துக்கு வேண்டாம் காதுக்கும் மூக்குக்கும் வாங்கித்தாங்கன்னு கேட்பார்களே !
      3.குடிக்கிற பூனைக்கு தெரியுமா ,இது ஆவின்பால் ,அமலா பால் என்று ?
      நன்றி !

      Delete
  2. வணக்கம்
    ஆகா ...ஆகா. என்ன தத்துவம் ஜி... இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ராவணனை வில்லனா சித்தரிப்பது என்ன நியாயம் ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. நீங்களே சொல்லுங்க வாத்தியாரே ,ராவணன் நல்லவனா ,கெட்டவனா ?
      நன்றி !

      Delete
  4. ஹாஹாஹா......

    அப்பா செலவு இல்லனு சொல்லுங்க....

    ஹாஹாஅ

    ReplyDelete
    Replies
    1. இராவணன் நல்ல மன்னனோ இல்லையோ ,நல்ல மனுசன்னு தெரியுது ,இல்லையா ?
      செலவு இல்லையா ,இரட்டைச் செலவு இருக்கே !
      பால் டேஸ்ட்டா இருந்ததா ?
      நன்றி

      Delete
  5. அந்த கால வில்லன்களும் ஒரு நெறியுடன் வாழ்ந்திருக்கிறார்கள் போல! சரியான கேள்வி! நியாயம் இல்லைதான்!

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்திலே நல்ல மனுஷன் போர்வையில் வில்லனாயில்லே நிறைய பேர் இருக்காக ?
      நன்றி

      Delete
  6. 'ஜென்டில்மேன்' உள்ளே புகுந்த 'அந்நியன்' இப்படி செய்ய தூண்டி இருப்பானோ?.

    ReplyDelete
    Replies
    1. அன்னியனே நுழையவே இல்லையே ,நுழைந்து இருந்தால் அசோகவனத்தில் பத்து மாதம் இருந்த சீதை பிள்ளை பெற்று இருப்பாரே !
      நன்றி

      Delete
  7. விருப்பமில்லாத பெண்ணிடம் விஷமம் செய்தால் உயிர் போய்விடும் என்ற சாபம் இருந்ததாம் ராவணனுக்கு! :)))

    ஹா...ஹா...ஹா... சர்வர் சுந்தரம் நாகேஷ் வசன வரிகள் நினைவுக்கு வருகின்றன!

    அதானே.... :)))))

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு சாபம் இன்றும் இருந்தால் பாலியல் குற்றங்களே நாட்டிலே நடக்காதே ,யார் இந்த சாபம் கொடுப்பார்கள் ?
      நாகேஷ் என்ன சொன்னார் ?(அதுதான் எனக்கும் தெரியலே என்று மட்டும் சொல்லிடாதீங்க )...சொன்னா நாங்களும் சிரிப்போமில்லே!
      பால் குடிக்காத பூனையும் உண்டான்னு கேட்பதுதானே நியாயம் ?
      நன்றி

      Delete
    2. நாகேஷ் சொல்லும் முழு வசனம் நினைவுக்கு வரவில்லையே... எஸ் வி ரெங்கா ராவ் அவர்களை இயக்குனராய் வைத்து ஒரு படப்பிடிப்புக் காட்சி. பிளவுசும், நெக் லேசும் என்றெல்லாம் ரைமிங்காய் வரும். ஆஹா... ஆஹா... என்று வசனத்தை முடிப்பார். மனோரமா பதிலுக்கு 'அத்தான்' என்பார்.உணர்ச்சியே இல்லாமல் நாகேஷ் 'கண்ணே' என்பார். நாராசம் ததும்பும் உங்கள் முகமும் என்று அபசுரமாய்த் தொடங்குவார் மனோரமா!

      Delete
    3. படப் பிடிப்பு காட்சி என்றால் சர்வர் சுந்தரம்தான் நினைவுக்கு வருகிறது !
      நன்றி

      Delete
  8. ரசித்துச் சிரித்தேன்.
    பகிர்விற்கு நன்றி நகைச்சித்தரே!

    ReplyDelete
    Replies
    1. நானும் ரசித்துச் சிரித்தேன் ..நீங்க வழங்கிய பட்டத்தை!
      நன்றி

      Delete
    2. பகவான்ஜி நானும்கூட பட்டம் கொடுத்திருந்தேனே....

      Delete
    3. கில்லர்ஜி,அந்த பட்டம் என் மண்டைக்கு மேலேறாமல் வானத்தில் பறந்து விட்டது !
      நன்றி

      Delete
  9. இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
    சிறந்த நகைச்சுவைப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. பால் குடிக்காட்டி அது பூனையே இல்லையே ! இப்படியுமா சந்தேகம் ?
      நன்றி

      Delete