26 August 2014

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

    ---------------------------------------------------------------------------------------------------------

தொந்தி உடையார் விழுவதற்கு அஞ்சார் ?
     
         ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
        
         ''நல்ல வேளை.தொந்தி இருந்ததால் மூக்குக்கு ஒண்ணும் ஆகலே !''
   
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

சேரனின் அடுத்த காதல் படத் தலைப்பு ....?

''சேரன் இயக்கத்திலே ஒரு காதல் படம் எடுக்கலாம்னு இருக்கேன் ,பொருத்தமா என்ன டைட்டில் வைக்கலாம் ?''
''தாமினி ,இனி என் பக்கம்னு வைங்க !''

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

தாஜ்மகாலை ...
அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை சின்னமாய்தான்  கண்ணுக்கு படுகிறது ...
பதினான்கு  முறை பிரசவித்து 
முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது !

21 comments:

  1. தொந்தியால் இப்படி ஒரு பயனும் உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. விழுந்தால் மீசையில் கூட மண் ஒட்டாதாமே ?
      நன்றி

      Delete
  2. அதனால்தான் போலீஸ்காரர்கள் தொந்தியுடன் இருக்கின்றார்கள் போலும்......

    தாமினி பற்றி தெரியவில்லை கூகுள் ஆண்டவரைக் கேட்டால் தெரியலாம்..ஜி! .ஏதாவது

    தாஜ்மாஹாலை உலகமே கொண்டாடுகின்றார்கள். ஆனால் எங்களுக்கு ஏனோ அதைக் காதல் சின்னமாகப் பார்க்க முடியவில்லை. அதனைக் கட்டிய சிற்பிகளின் கைவண்ணம் மட்டுமே மனதில் நிழலாடுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நாளா இந்த ரகசியம் நமக்கு தெரியாமப் போச்சே !

      இதுவும் கூகுள் ஆண்டவருக்குதான் வெளிச்சமா ?

      கைவண்ணம் காட்டியவர்களின் கைகள் வெட்டப் பட்டு விட்டன என்று வேறு ஒரு சோகக் கதை சொல்லுகிறார்களே !
      நன்றி

      Delete
  3. அப்பவாவது தொந்தி குறைஞ்சுதா இல்லையா?

    பாவங்க சேரன்...

    அந்தத் த்யாகத்துக்குத்தான் பரிசு போல!

    ReplyDelete
    Replies
    1. ஆயுசுக்கும் கரையாத தொந்தி யாச்சே அது !

      சேரனுக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கக் கூடாதுதான் !

      பரிசை மரித்த பிறகா தருவது ?
      நன்றி

      Delete
  4. அப்போ இனி நீங்க தொந்தியைக் குறைக்காதீங்க ஜீ :))

    ReplyDelete
    Replies
    1. தொந்தியை விட எனக்கு மூக்கு நீளமாச்சே!
      நன்றி

      Delete
  5. தொந்தி தற்காப்பா!

    ReplyDelete
    Replies
    1. தற்காப்பு என்று தற்செயலாய்தான் தெரிந்தது !
      நன்றி

      Delete
  6. 01. தொந்தி வளர்த்தால் ? நமக்கும்கூட பிரயோசனம் உண்டோ ?
    02. தலைப்பு பேஷ், பேஷ். சத்தியமா எனக்கு தெரியாதுங்கோ...
    03. 39 க்குள்ளே 14 லா ? என்ன கொடுமை பகவான்ஜி ?

    ReplyDelete
    Replies
    1. 1 எப்போ பிரசவம் என்று கேட்பார்கள் ,தேவையா நமக்கு ?
      2.தலைப்பு செய்தியாய் போன வருடம் வந்த விஷயம் ,இப்போ தலைமறைவாகி விட்டதே !
      3.இன்னும் ஒரு கொடுமை ,மும்தாஜ் முதல் மனைவி அல்ல !ஷாஜகான் முதல் கணவனும் அல்ல !
      நன்றி
      நன்றி

      Delete
  7. Replies

    1. //''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது...//

      ஏட்டய்யா ஓடினாரா? நம்ப முடியல பகவான்ஜி.

      Delete
    2. என்ன இப்படி கேட்டுட்டீங்க ?அவர் துப்பாக்கியை திருடிக்கிட்டு ஓடினால் விடுவாரா ?
      நன்றி

      Delete
  8. தொந்தி உள்ளவர்கள் இனி கவலைப்படவே வேண்டியதில்லை.......தொந்தியும் நண்மைக்கே்.......

    ReplyDelete
    Replies
    1. இதுக்கும் ஒரு அலவன்ஸ் கேட்கச் சொல்லுவீங்க போலிருக்கே ))))))
      நன்றி

      Delete
  9. ஆஹா... தொந்தி வளக்கணுமோ...

    பாவம் சேரன்... மிகச் சிறந்த இயக்குநர் விட்டு விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எதுக்கு தொந்தி வளர்க்கணும் ?

      சேரன் படத்திலும் காட்டியதை விட அதிக சோகம் அவர் சொந்த வாழ்க்கையில் !அவர் மீண்டு வருவார் !
      நன்றி

      Delete
  10. தொந்திக்கு வேட்டு வைச்சாச்சா
    சேரனுக்கு மதியுரையா
    மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது!
    எல்லாமே
    சிறந்த பதிவுகள்

    ReplyDelete
    Replies
    1. தாஜ்மஹால் பார்க்க குளுமை ,ஆனால் அதன் பின்னணியில் .நீங்கள் உங்கள் பதிவில் சொன்னதுபோல் நிறைய கொடுமை நடந்திருக்கே !
      நன்றி

      Delete