29 August 2014

சதையைக் காட்ட காரணம் கதையில்லே ,காசுதானே ?

               ''உங்க பட ஹீரோயின்  கதைக்கு தேவைப் பட்டதால் கவர்ச்சியா நடித்தேன் என்று சொல்லி இருக்காங்களே ...அதைப் பற்றி .....!''
              ''அப்படின்னா ரெண்டு மடங்கு  சம்பளம் எதுக்கு வாங்கி கிட்டாங்களாம் ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


'இது'க்கும் டாட் 'காமா 'வந்திருக்கு ?
''என்னது பிச்சைக்காரன் டாட் காமா ?''
''ஆமா ...ஒரு E மெயில் அனுப்பினாப் போதும் ,மீந்து போனதை வந்து எடுத்துட்டு போயிடுவான் !''

அதுக்குத்தானா இந்த கொண்டாட்டம் ?

அமாவாசை வந்தாலே காக்கைகளுக்கு கொண்டாட்டமாய்  இருக்கும் ...
தானும் கருப்பு அமாவாசையும் கருப்பு என்பதால் அல்ல !
எச்சில் கையால் காக்கையை விரட்டாதவன் கூட ...
அன்று மட்டும் முன்னோர்களை நினைத்து காக்கைக்கு முதல் படையல் வைப்பதால் !

12 comments:

  1. 01. இந்த தயாரிப்பாளருக்கு எதை எங்கே பேசுறதுனு இங்கிதம் தெரியாதோ... ?
    02. எல்லோரும் ஐபேடும் கையுமா லோலோனு அலையுறத பார்த்தா அப்படித்தான் போகுமோ ?
    03. நல்லவேளை அந்த ஒரு நாளைக்காவது வக்கிறானே...

    ReplyDelete
    Replies
    1. 1.சூட்டிங் எடுக்கும் போது யாரும் வேடிக்கைப் பார்க்கக்கூடாதுன்னு நடிகையால் தடுக்கப் பட்ட கோபமாய் இருக்குமா ?
      2.இப்போவே குப்பை டாட் காம் வந்துவிட்டதே !
      3.இதை நம்பி எந்த காக்காவும் இல்லைங்கிறது வேறு விஷயம் !
      நன்றி

      Delete
  2. ஹா... ஹா... தயாரிப்பாளருக்கு ரொம்ப வருத்தம் போல வாங்குன காசுக்கு உழைக்கலைன்னு... மற்ற இரண்டும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கொடுத்த காசுக்கு நமக்கே திருப்தி இல்லைன்னு சொல்லும்போது ,அவருக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  3. ஹா..ஹா... உண்மையெல்லாம் வெளில வருது!

    ஹா...ஹா... வந்தாலும் வரும்!

    ஹா...ஹா... உண்மை... உண்மை!

    ReplyDelete
    Replies
    1. படம் வந்தாத்தானே உண்மையெல்லாம் வெளியே வருது !

      வலையுலகில்பதிவு திருடர்கள் இருக்கிறார்கள் ,பிச்சைக்காரர்களும் வந்துவிடுவார்கள் போலிருக்கே !

      காக்காக்களும் இந்த உண்மையை உணருமா ?
      நன்றி

      Delete
  4. காசேதான் கடவுளா இருக்கும்போது.....கதையாவது, மண்ணாங்கட்டியாவது

    ReplyDelete
    Replies
    1. இதை ஒப்புக்கொள்ளாமல் 'அஞ்சாமல் 'சமீபத்தில் ஒரு நடிகை சொல்லி இருப்பதுதான் இந்த பதிவுக்கு அடிப்படை !
      நன்றி

      Delete
  5. ஹாஹாஹா...

    கம்பூட்டர் யுகம் பிச்சைக்க்காரனும் பணக்கார பிச்சைக்காரன் போலும்....

    அக்மார்க் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. இப்பவாவது ஒப்புக்கிறீங்களா,நாடு வல்லரசு ஆகிட்டு வருதுங்கிறதை !
      நன்றி

      Delete
  6. சிறந்த எண்ணப்பதிவு

    தொடருங்கள்

    ReplyDelete