11 August 2014

ராணியின் மோகம் யார் மீதோ ?

----------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மையில் அந்தக் காலம் தேவலையே !

''என்னப்பா சொல்றீங்க ,உங்க காலத்தில் இந்த அநியாயம் இல்லையா ?''
''ஆமா ,அன்னைக்கு குழந்தைத் திருமணம்தான் நடந்தது ,இன்னைக்கு ,திருமணம் ஆகாத குழந்தைக்கே குழந்தைப் பிறக்குதே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்! 

ராணியின் மோகம் யார் மீதோ ?

''ராஜாவின் பார்வை ராணியின் மீதே இருக்கிறதே ,ஏன் ?''
''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன அறையில் ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''

'சிரி'கவிதை!

வசதிகள் போக்குமா உடலின் அசதியை ?

மாவு ஆட்ட  சோம்பல் ...கிரைண்டர் வந்தது 
கல்லைக்  கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது 
வழித்து எடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது 
தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜிலேயே  மாவு...   
டாக்டரிடம் போக சோம்பல் ...எழுந்துகூட  நிற்க முடியாமல் !

18 comments:

  1. அனைத்தும் அருமை...
    வசதிகள் போக்குமா... நச்

    ReplyDelete
    Replies
    1. வசதிகள் பெருக பெருக சோம்பேறித் தனமும் கூடுவது உண்மைதானே ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா.

    எல்லாம் கருத்துள்ள நகைச்சுவை. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கருத்தைக் கண்டுபிடித்து ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  3. முதல் ஜோக் - சுடும் உண்மை.

    ராஜாவுக்கே இந்த நிலைமயா??

    சோம்பல் எள்ளத்திலும் தான் இருக்கிறது (அருமையாக சொன்னீர்கள்)

    ReplyDelete
    Replies
    1. துரோகிகளுக்கு சுட்டால் சரி !

      ராஜா என்ன யோக்கியமாவா இருப்பார் ?

      இப்போ ரெடிமேட் சாம்பார் ,சட்னி கூட கிடைக்குதே !ஏன் சோம்பல் கூடாது ?
      நன்றி !

      Delete
  4. அட அநியாயமே.. இது ஜோக் இல்லை. வயிற்றெரிச்சல்.

    நிழலைக் கூட மோப்பம் பிடிக்கிறாரே...!

    இன்னும் எதெதில் சோம்பல் வருமோ தெரியலையே... :))))

    ReplyDelete
    Replies
    1. வயிற்றெரிச்சல் உங்களுக்கு கிடைக்கலை என்பதால் இல்லையே ?)))))))

      நிழலும் நிஜமாகிறதே என்றுதான் !

      உங்கள் தோசைப் புராணம் கூட ,ஹோட்டலில் சாப்பிட வேண்டுமென்ற சோம்பலைத்தானே கூட்டுது ?)))
      நன்றி

      Delete
  5. 1. அதென்னவோ உண்மைதாங்க...ஜி! இப்ப நிலமை அப்படித்தான் போயிட்டுருக்கு......

    2. பின்ன என்னவாம்.....பார்த்துட்டா மூளை சும்மாவா இருக்கும்? ஜி? என்ன சொறீங்க?

    3. ரொம்ம்ம்ம்ம்ம்பவே உண்மை.....உக்காந்த இடத்திலயே சாப்பிட ரோபோ வைச்சுக்கிட்டாலும் வியப்பில்லை.....

    ReplyDelete
    Replies
    1. சாப்புடுறது யாரு ? நண்பரே.... நாமலா ரோபோவா ?

      Delete
    2. 1. மகளையே பெத்த அப்பனே கற்பழிச்சு கொல்றான் ,என்ன நடக்குதுன்னே புரியலை !
      2. என்ன செய்தாலும் வழிமாறிய வெள்ளாடை ராஜாவால் கண்டுபிடிக்க முடியாதே !
      3.ரோபோ ஊட்டிவிட்டாலும் வாயை திறக்கவாவது முடியுமான்னு தெரியலே !
      நன்றி

      Delete
    3. கில்லர் ஜி ,யோசிக்க வேண்டிய கேள்விதான் !
      நன்றி

      Delete
  6. நல்லவேளை பிறந்த குழந்தை கல்யாணம் செய்ய சொல்லலையே...

    இருக்காதா பின்னே அந்தப்புரம் வந்தவன் அதுகப்புறம் போயிடக்கூடாதுல...

    அன்னைக்கே சொன்னேன், விஞ்ஞானம் வேண்டாம், விஞ்ஞானம் வேண்டாம்னு.....

    ReplyDelete
    Replies
    1. அதுக்கும் ரொம்ப நாளாகாது!
      முடிஞ்சா தடுத்துப் பார்ன்னு சவால் விட்டு நுழைந்து இருப்பானோ ?
      மெய்ஞானி கூட விஞ்ஞானமே வேண்டாம்னு சொல்லமாட்டான் !
      நன்றி

      Delete
  7. முதல் ஜோக் காலமாற்றத்தை சொல்கிறது! ரெண்டாவது சந்தேகம் பெரிய வியாதியாச்சே! மூணாவது முழுசும் உண்மை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை பேசினால் காலமாற்றத்தால் பெரிய வியாதி பிடிச்சவன்னு கிண்டல் செய்வார்களோ ?
      நன்றி

      Delete
  8. நாடு வல்லரசாக ஆகலே...........அநியாயமும் வளர்ந்த்தானே வளர்ச்சி........

    ReplyDelete
    Replies
    1. இப்படி வல்லரசு ஆவதை விட கஞ்சிக்கில்லாமலே இருக்கலாம் !
      நன்றி

      Delete