15 August 2014

வீட்டிலாவது சுதந்திரம் உள்ளதா ?

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
 ----------------------------------------------------
இப்படித்தான் சிலர் தேசபக்தியை காசாக்குகிறார்கள்!
---------------------------------------------------------------------------------
             ''கொடி ஏற்றிவிட்டு அந்த கஞ்சப் பிசினாறி கடைக்காரர்  புத்தியைக் காண்பிச்சிட்டாரா, எப்படி ?''
             ''மிட்டாயும் ,கொடியும் வேணுங்கிறவங்க ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிக்கணுமாம் !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

தலை கீழாய் நின்று கொடி வணக்கம் செய்ய முடியாதே !

''தலைநிமிர்ந்து கொடிவணக்கம் செய்யவேண்டியவங்க ஏன் தலைக் குனிஞ்சு நிற்கிறாங்க ?''
''தலைவர் ஏற்றின கொடி தலைக்கீழா பறக்குதே !

'சிரி'கவிதை!

 சுதந்திரம் உள்ளதா உங்களுக்கு ?

எறும்புகளே ...
எந்தக் கோட்டையில் கொடியேற்ற 
 நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று 
உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !


20 comments:

  1. 01.பொழைக்கத்தெரிந்தவரோ...

    02. ரௌடிகளையெல்லாம் தலைவனாக்கினால் இப்படித்தான்.

    03.எறும்புக்கு கிடைத்த சுதந்திரம் பிரமருக்கு கிடைக்கலையே...

    ReplyDelete
    Replies
    1. 1.அதுக்காக இதிலுமா வியாபாரம் ?
      2.ரௌடிகள் மட்டுமா தலைவர்கள் ?
      3.சுதந்திர நாட்டின் தலைமை அடிமை ?
      நன்றி

      Delete
  2. எறும்புகளே ...
    எந்தக் கோட்டையில் கொடியேற்ற
    நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
    பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று
    உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
    பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !

    சிந்தனை முத்து !

    ReplyDelete
    Replies
    1. சிந்தனை முத்தை ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  3. ஆஹா! செம பாஸ்!
    சுதந்திர தின ஸ்பெஷல் ஒவ்வொன்னும் களைகட்டுது:))
    thama 2

    ReplyDelete
    Replies
    1. இந்தியப் பிரஜைன்னு சொல்லிகிட்டா போதுமா ,இப்படியாவது சுதந்திரத்தைக் கொண்டாட வேண்டாமா ,அதான் !
      நன்றி

      Delete
  4. பரவாயில்லை மீட்டயும்,கொடியையும் சேர்த்து தான் ஒரு ரூபாய் என்று சொல்லியிருக்கிறார். வெறும் மிட்டாய் மட்டும்னு சொல்லலையே...

    தலைகீழ் கொடி -சமீபத்தில் நடைபெற்ற காமன் வெல்த் விளையாட்டில் இப்படித்தான் கொடியை தலை கீழாக பிடித்தார்கள் என்று ஒரு பிரச்சனை கிளம்பியது.

    எறும்புகளின் அணிவகுப்பை வைத்து அருமையான ஒரு சிந்தனைத்தாக்கம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு ரூபாய்தான் ,அன்னைக்கி மட்டும்தான் மிட்டாய் ஓசியில் கிடைக்கும்ன்னு ஆசையா இருக்கிற குழந்தைகளை ஏமாற்றலாமா ?

      மற்ற நாட்டு சுதந்திரம்ஆன விதத்தை பார்க்கும் போது நம்ம நாட்டு சுதந்திரம் வந்தது தலைக்கீழ் போலத்தானே ?
      நன்றி

      Delete
  5. அதே ,அதே !
    நன்றி

    ReplyDelete
  6. கவிதை கூட எழுதுவீங்களா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்கு ரொம்ப வேணும் பாஸ் ,இது என் பாணி 'சிரி' கவிதை !
      நன்றி

      Delete
  7. Replies
    1. என்ன கருண் ஜி ,உங்க வேடந்தாங்கலில் பறவைகள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டதா ?
      நன்றி

      Delete
  8. அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் ,கமெண்டுக்கும் நன்றி !

      Delete
  9. கொடி ஏத்தறதுக்கு காசு வாங்காம விட்டாரே! ஹாஹா! ஜோக்ஸ் கவிதை ரெண்டும் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. கொடியைக் கூட வாங்கினாரா ,எங்காவது சுட்டுட்டு வந்தாரான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  10. இன்னைக்குக் கூட ஒருத்தர் தலைகீழா கொடியேத்திட்டாராமே...
    ஆந்திராவில் ஒரு அம்மா கொடியேத்தி முடிச்சதும் கொடி ஏத்திய தலைவரை செருப்பால அடிக்குதே...

    சரி இதெல்லாம் எதுக்கு... ஜோக்ஸ் இரண்டும் அருமை....
    கவிதை சூப்பரு.....

    ReplyDelete
    Replies
    1. நம்ம நாட்டிலே தலைவர்கள் நடப்பே தலைக்கீழ்தானே ?
      இப்படிப்பட்ட அடிச்சா தப்பே இல்லை !
      முன்பை விட இன்று ஒருபடி முன்னேற்றம் ,கொடியேற்ற வரும் போதே குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் வர வேண்டிய நிலைமை !
      நன்றி

      Delete
  11. சிறந்த நகைச்சுவைப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete