9 August 2014

பார்க்கவும் ,கேட்கவும் அழகா எல்லோருக்கும் அமையுமா ?

                   ''என்னங்க ,புளியந்தோப்பில்  நடந்து வரும் போது,பயம்மா இருந்தா ஏதாவது ஒரு பாட்டைப் பாடிக்கிட்டே வர வேண்டியதுதானே ,என்னை ஏன் பாடச் சொல்றீங்க ?''
                      ''காத்து கருப்பு எதுவும் இருந்தா பயந்து ஓடட்டும்ன்னுதான் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்! 

உப்பு  போடத் துப்பில்லே,ஆனா வாய் ?

" சாப்பிட்டவங்க 'உப்பில்லை ,நமக் நஹி ,நோ சால்ட்,உப்பு லேதுன்னு சொல்றாங்க,சமையலிலே கவனம் வேணாமா,மாஸ்டர் ? " 
"நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க முதலாளி ! "




'சிரி'கவிதை!

கும்கி யானையின் கேள்வி !

ஏ மானிடனே ...
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்பதை
உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
வெந்ததை உண்டக்  கட்டியாய்  உண்ணக் கொடுத்து ..என்னையும் 
எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ?

20 comments:

  1. பொண்டாட்டி குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும் போலயே.....
    மால்டருக்கு எல்லா மொழியும் தெரியணும் போலயே....
    கும்கியானை கேள்வி கும்முனுதான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. பொண்ணு பார்க்கும் போதே பாடச் சொல்லி கேட்டு இருந்தால் இந்த கருப்பும் தப்பித்து இருக்கலாமே ?
      உப்பு சரியாய் போடத் தெரிந்தாலே போதுமே !
      யானைக் கேட்கும் நிலையிலா மனித இனம் இருப்பது ?
      நன்றி

      Delete
  2. (த.ம.2) இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொண்டாட்டி ஜோக்கை வைத்தே பிழைக்கப்போகிறார்களோ இந்தப் பதிவர்கள்! அந்தப் பொண்டாட்டிகளும் இதையெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக்கொள்ளப் போகிறார்களோ!

    ReplyDelete
    Replies
    1. பெண்டாட்டி மேல் சலிப்பு வரும் வரைதான் !
      நன்றி

      Delete
    2. யாருங்க அது ,சந்தடி சாக்கிலே சத்தமே இல்லாம வந்து சிரிக்கிறது ?
      நன்றி

      Delete
  3. ஒரு பாட்டு - அதை
    ஒருவர் கேட்டு
    காத்து கருப்பு ஓடுமா?
    நாலு பேர்
    நாலு விதமா சொல்லுவாங்க
    அதையெல்லாம் கண்டுக்காதீங்க...
    ஆனால்,
    நல்லதைப் பொறுக்கலாம் தானே!
    இனத்துரோகம் வேண்டாமுங்க...
    இப்படி
    என் மூளை வேலை செய்யுதே!

    ReplyDelete
    Replies
    1. சரியாத்தானே வேலை செய்யுது ,கவலையை விடுங்க !
      நன்றி

      Delete
  4. ''...என்னை ஏன் பாடச் சொல்றீங்க ?''
    ''காத்து கருப்பு எதுவும் இருந்தா பயந்து ஓடட்டும்ன்னுதான் !''.......hi...hi....
    hj!...

    ReplyDelete
    Replies
    1. இவர் பாடினால் பெண்டாட்டி ஓடிடுமோ என்ற பயமும் அவருக்கு இருக்கும் போலிருக்கு !
      நன்றி

      Delete
  5. //'காத்து கருப்பு எதுவும் இருந்தா பயந்து ஓடட்டும்ன்னுதான் !''//

    காத்து கருப்பு பயந்து ஓடுறதுக்கு, அந்தம்மா பாடணுமா என்ன? உருவத்தைப் பார்த்தாலே போதுமே!!!

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைக்கலையே ,பார்த்துட்டு நீங்க அரண்டு போன மாதிரி தெரியுதே!
      நன்றி

      Delete
  6. ஒரு சிலருக்கு மட்டும்தான் அழகா அமையுது......

    ReplyDelete
    Replies
    1. அமையலைன்னா இறைவன் கெடுத்த வரம்னு நினைச்சுப்பாங்களோ?
      நன்றி

      Delete
  7. ஒ! இதை தான் நாலு பேர் நாலு விதமாய் பேசுறதுன்னு சொல்றாங்களா?
    ஹா...ஹா...ஹ...
    தம ஆறு!

    ReplyDelete
    Replies
    1. நாலு மொழியில் வேறு கூறி கொல்கிறார்களே!
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    தலைவா.

    இரசித்துப்படித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கும்கி யானையின் கேள்வி சரிதானே ரூபன் ஜி ?
      நன்றி

      Delete
  9. இதைத் தான் 4 பேரு 4 விதமா பேசுவாங்கன்னு சொல்றதா!!!

    கும்கி யானை ரொம்பவே கேள்விக்கேக்குதே!!

    ReplyDelete