3 August 2014

க ம லின் 'உ த் த ம வி ல் ல ன் ' ரிலீசில் சிக்கலா ?

    அன்பான வலையுலக உறவுகளுக்கு 'உலக நட்பு தின 'வாழ்த்துக்கள் !

          --------------------------------------------------------

  ''கமலின் 'உத்தம வில்லன் 'பட ரிலீஸ் தேதியை மாற்றச் சொல்லி போராட்டமா ,ஏன் ?''

                         ''வருகிற அக்டோபர்  2ல் ரிலீஸாம்,அது உத்தமர் காந்தி பிறந்த நாளாச்சே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! 

என்றும் 16 தானா நடிகைக்கு ?

'' பேரன் பேத்தியைப் பார்த்த பிறகும் அந்த நடிகை ,இந்த வருஷம் தனக்கு பதினாறாவது பிறந்த நாள்தான் என்று அடிச்சுச் சொல்றாங்களே ,எப்படி ?''
''பிப்ரவரி 29லே பிறந்தனாலே நாலு வருசத்துக்கு ஒருமுறைதானே பிறந்த நாள் வருது ?''



'சிரி'கவிதை! 

சைட் அடிக்கும் இடம் இதுவல்ல !

பெண் பாடகி சபாக் கச்சேரியில் ...
உச்ச ஸ்தாயியில் பாடும்போது 
'பார்க்கச் சகிக்கலே 'என்பவன் ...
ரசனைக் கெட்ட ஜென்மம் !


28 comments:

  1. வணக்கம்
    எல்லாம் இரசிக்கவைக்கும் நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடித்தது உத்தமரா ,உத்தம வில்லனா ?
      நன்றி

      Delete
    2. உத்தமன் சிவாஜி படம். வில்லன் அஜித் படம். சத்யராஜ் கூட அப்படி ஒரு பெயருள்ள படத்தில் நடித்திருக்கிறாரோ...

      Delete
    3. அப்படி என்றால் உத்தமவில்லன் டூவா?
      நன்றி

      Delete
  2. Replies
    1. நடிகை வயசை தெரிந்து கொள்ள வாய்ப்பாடு தெரிய வேண்டியிருக்கே !
      நன்றி

      Delete
  3. உ.வி அக்டோபர் இரண்டா ரிலீஸ் தேதி? நிஜமா இல்லை நகைச்சுவைக்காகவா? எப்படி ஆயினும் ஒரு ஹா... ஹா... ஹா...

    அப்போ 64 வயசா... நாங்கள்லாம் கணக்குல கில்லாடி தெரியுமில்ல...!

    கேட்கச் சகிக்கவில்லை என்றிருக்க வேண்டுமோ...!


    ReplyDelete
    Replies
    1. இவ்வார டைம் பாஸ் இதழில் , அந்த தேதியில் உ வி ரிலீஸாக இருப்பதால் செய்தியைப் படித்ததால்தான் இது எனக்கு கிளிக் ஆனது !

      கில்லாடிதான் இல்லைன்னா ,நாலாம் வாய்ப்பாடு வரை தெரிந்து வாய்ப்பில்லையே !

      அப்படியும் இருக்கலாம் ,நான் எழுதியது ...குரலை ரசிக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் !
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹா....

    நாங்க எப்பவுமே ஸ்வீட் 16 தானுங்க!!

    ReplyDelete
    Replies
    1. இருந்துட்டு போங்க ,பார்க்கிறதுக்கு எங்களுக்கு ஸ்வீட்டா இல்லையே !
      நன்றி

      Delete
  5. அய்யா,
    எப்படி இப்படி...................?
    நகைச்சுவைகள் நீங்களே உருவாக்கியதா ? பகிர்வா?
    எதுவானாலும் பிரமித்து நிற்கிறேன்!
    ரசித்துச் சிரித்தேன்!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ,இனிப்பு கடையில் ..தனி நெய்யினால் செய்யப் பட்டவை என்று போட்டு இருப்பதைப் போன்று ...ஜோக்காளி தளத்தில் வருபவை அனைத்தும் என் தனி மூளையில் உதித்தவை என்று போட்டால்தான் நம்புவீர்களா ?
      இதுக்கே பிரமித்தால் எப்படி ?நம்மைப் போன்றவர்கள் மூளையை பத்து சதவீதம் கூட பயன்படுத்திக் கொள்வதில்லை என்று ஆய்வுகள் சொல்லுகின்றன !மீதி தொண்ணூறு சதவீதத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறேன் !
      சிந்தித்தால் சிரிப்பு வராமலாப் போய்விடும் ?
      நன்றி

      Delete
  6. வழக்கம் போலவே கலகல ஜீ !

    நடிகை ஜோக்கை படித்த போது அப்பா வயது சூப்பருடன் டூயட் பாடிய நடிகையின் ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா அந்த மயிலை மறக்கலே ?

      படிப்பதுதானே என் வேலை ,கருத்தை சொல்கிறேன் !
      நன்றி

      Delete
  7. படத்தோட பெயரை உத்தம நாயகன்னு வச்சிருந்தா ? பிரட்சினை வந்திருக்காது.
    நல்லவேளை என்னைப்போல பிப்ரவரி 30 துல பிறக்கலை...
    அவன் கேட்டு இருக்கமாட்டான், பார்த்து இருப்பான்.

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிடச் சொல்லிடலாமா ?
      முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்க வேண்டியவராச்சே நீங்க ?
      கேட்டு ரசிக்க வேண்டியதை பார்த்து ரசிக்கக் கூடாதுன்னுதான் சொல்லவந்தேன் !
      நன்றி

      Delete
  8. அவரின் எல்லா படத்திற்கும் இப்படி விளம்பரம்! :)

    ஸ்வீட் 16 - ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த விளம்பரத்தை கமல்கூட எதிர்பார்த்து இருக்கமாட்டார் !

      நாலு மடங்கு ஸ்வீட்டையுமா?
      நன்றி

      Delete
  9. கமல் என்றாலே சர்ச்சைதானோ? அதுசரி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எந்தப் பிரச்சினையும் வராது ,ஏனென்றால் கமலின்' ஹே ராம் 'படத்தைக் கூட எத்தனை பேர் ரசித்தார்கள் ?ரூபாய் நோட்டில் மட்டும்தான் காந்திஜி வாழ்ந்துகிட்டு இருக்கார் !
      நன்றி

      Delete
  10. உத்தமர் பொறந்த நாள்ல உத்தம வில்லன வெளியிட்டால் காந்தி உத்தம கதாநாயகனா ஆயிருவான்னு பயப்படுறாங்களோ... என்னவோ......

    ReplyDelete
    Replies
    1. இப்போ ,அவர் உத்தம கதாநாயகன் இல்லையா ?
      நன்றி

      Delete
  11. ரசித்தேன்.
    இனிய நட்பு த் தின வாழ்த்து. Happy friendship day wishes,,,
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அந்த கால பேனா நட்பின் நீட்சிதான் வலையுலக நட்பு போலிருக்கே !
      நன்றி

      Delete
  12. சினிமா காமெடி........?

    ReplyDelete
    Replies
    1. காமெடி இல்லை ,உ வி காந்தி ஜெயந்தியன்று வெளியிடப் படலாம் என்று சித்து வந்துள்ளதே !
      நன்றி !

      Delete
  13. ஐயோ சாமி, எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ!!!!

    உங்களுடைய கற்பனை திறனை நினைத்து மிகவும் பொறாமையாக உள்ளது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பொறாமையா ,ஹா ஹா ))
      நன்றி

      Delete