4 August 2014

ஜொள்ளு விட,ஓடும் ரயிலை நிறுத்தலாமா ?

---------------------------------------------------------------------------------

நீதி தேவதை சிலை சொல்லும் நீதி ?


                  ''ரெண்டு பக்க நியாயத்தையும் 


ஆராய்ந்து தீர்ப்பு  சொல்லணும்னு  


நீதிதேவதையின் வலது கை  தராசு சொல்லுது 


சரி  , இடது கையிலே   இருக்கிற கூர் வாள்


என்ன  சொல்லுது ?''


               ''நியாயமா தீர்ப்பு சொல்முடியலைன்னா 

குத்திகிட்டு செத்துப் போயிடணும்னுதான் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! 

ஜொள்ளு விட,ஓடும் ரயிலை நிறுத்தலாமா ?

''இந்த ஆற்றுப் பாலம் மேல் புதுசா ரயில் விட்டாங்க சரி ,கீழே ஆத்துலே பொம்பளைங்க குளிக்கத்  
தடையாமே , ஏன்?''
''ரயில் இங்கே வரும் போது,ஜொள்ளுப் பார்ட்டிங்க  அடிக்கடி செயினை இழுத்து நிறுத்தி விடுகிறாங்களாமே !''
சிரி'கவிதை! 

படித்த டாக்டர்களே சூது செய்யலாமா ?

பெரும்பாலான கொள்ளைக்காரர்களுக்கு 
முன் எச்சரிக்கையோடு கொள்ளை அடிக்கத் தெரியவில்லை !
ஒருசிலர்தான் டாக்டர்களைப்போல் 
முகமூடி ,கையுறை அணிந்து கொள்ளை அடிக்கிறார்கள் !
  

26 comments:

  1. ஹா...ஹா...ஹா...

    ஐயோ... ஹா...ஹா..

    ஹா...ஹா...மருத்துவர்கள் எதிர்க்கப்போகிரார்கள்..மருத்துவ சம்பந்தமாக இன்னொரு ஜோக் (உங்களுக்கும் தெரிந்திருக்கும். தெரியாமல் இருக்குமா?) "சினிமாத் தியேட்டருக்கும் ஆபரேஷன் தியேட்டருக்கும் என்ன வித்தியாசம்?" ஜோக்.


    ReplyDelete
    Replies
    1. சமீபத்திய சில தீர்ப்புகள் இப்படி எண்ணத் தோணுதே !

      இப்படியே நடந்த அந்த ரயிலேயே கட் பண்ணிடுவாங்களோ?

      அறுவை தானே ?

      நன்றி

      Delete
    2. ஹாஹாஹா....ஜோக்.....சூப்பர் நல்லா அறுக்கறாங்கனு.....

      Delete
    3. தியேட்டர்ல அறுபட்டா பரவாயில்லை ஏதோ நொந்து நூடுல்ஸாவது வெளில வரலாம்...ஆனா ஆபரேஷன் தியேட்டர்ல நல்லாவே அறுத்துட்டாங்கனா....அவ்வளவுதான் வெளில பொணமாத்தான் வரணும்.....

      Delete
    4. தியேட்டர் என்றால் போகாதீங்க அடுத்தவங்களை தடுக்கலாம் ,ஆபரேசன் தியேட்டர் என்றால் உயிர் போறதைக்கூட தடுக்க முடியாதே
      நன்றி

      Delete
  2. ''..''நியாயமா தீர்ப்பு சொல்முடியலைன்னா


    குத்திகிட்டு செத்துப் போயிடணும்னுதான் !'' இப்படி நடந்தால் தான் உலகே திருந்துமே!

    ''...''ரயில் இங்கே வரும் போது,ஜொள்ளுப் பார்ட்டிங்க அடிக்கடி செயினை இழுத்து நிறுத்தி விடுகிறாங்களாமே !''...ha!....ha!.....
    இனிய வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நீதி தேவதையின் தராசிலும் லஞ்சப் பணம் எடைப் போடப் படுவது தான் வேதனையின் உச்சக்கட்டம் !
      இந்த இழிசெயலுக்கு செயினை இழுப்பவர்களிடம் ரெண்டு மடங்கு அபராதம் விதித்தால் திருந்துவார்களோ ?
      நன்றி

      Delete
  3. எனக்கு இப்படி தோணுது ஜீ---நியாயமா தீர்ப்பு சொல்முடியலைன்னா --நீதி கேட்கிறவனின் அடப்புல குத்தனும்...............

    ReplyDelete
    Replies
    1. இப்ப நடக்குறது அதுதானே ?
      நன்றி

      Delete
  4. கண்ணைத்தான் கட்டியாச்சே!

    ReplyDelete
    Replies
    1. கண்ணைக் கட்டிக்கிட்டு தராசை எப்படி நிறுத்திப் பார்க்க முடியும் ?
      நன்றி

      Delete
  5. யாரை குத்தனும் ?

    இதுக்கு ஏன் குளிக்கதடை போடணும் ? ரயில்வே வழியை மாற்றிப்போட்டா ? ரயில்வே மந்திரிக்காவது ''ஏதாவது'' கிடைக்க வழி உண்டே...

    டாக்டருங்க யுனிவர்சிட்டியிலே படிச்சுட்டு வந்தாங்க... மத்தவங்களுக்கும் யுனிவர்சிட்டி கட்ட சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. யார் லாபம் அடைகின்றார்களோ அவர்களை !

      அவரே அந்த வழித்தடத்தில் அடிக்கடி செல்வதாக கேள்வி !

      கொள்ளை அடித்து கட்டின கல்லூரியில் படிச்சு வர்றவங்களும் கொள்ளைதான் அடிப்பார்களா ?
      நன்றி

      Delete
  6. வணக்கம்
    தலைவா
    நகைச்சுவையை .ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  7. அய்யா,
    தங்களைப் பற்றித் தெரியாதைய்யா!
    சுத்தமான நெய்தான்!
    எல்லாத்தையும் சந்தேகப் பட்றதே எனக்கு வேலையாப் போச்சு!
    எனக்கெல்லாம் சொந்த சரக்குக் கொஞ்சம் தான் சாமி!
    அடுத்தவங்களைக் காட்டி காட்டியே வண்டி ஓடுது!
    முடிஞ்சவன் சாதிக்கிறான்!
    முடியாதவன் போதிக்கிறான் கிற மாதிரி!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அய்யா தெரியாதையா இவ்வளவு விவரமும் ...சுத்தமான நெய் மட்டுமல்ல சுத்த கொம்புத் தேன்கூட !
      சாதிக்க நினைத்தால் நீங்களும் சாதிக்கலாம் !போதனையை எவன் கேட்கிறான் இந்தக் காலத்திலே ?
      நன்றி

      Delete
  8. நீதி தேவதை விளக்கம் அருமை! ஜோக் கலகல! கவிதை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் நடக்கணும்னுநாம ஆசைப் படலாம் ,நடக்கவா போவுது ?
      நன்றி

      Delete
  9. நீதி தேவதை - சரி தான். பலரை அப்படி குத்த வேண்டியிருக்கும்.....

    ரயில் - குளிக்கத் தடை - நல்லது!

    ReplyDelete
    Replies
    1. நீதி தேவதை கண்ணைத் திறந்து பார்க்கிறதா என்றே தெரியவில்லை !

      ரயிலில் இதையும் மீறி செயினை இழுத்தால் ரயில் தடத்தையே நிறுத்திவிட வேண்டியதான் ,வேறு வழியில்லை !
      நன்றி

      Delete
  10. நீதி தேவதையின் விளக்கப்படி, யார் இன்று தீர்ப்பு சொல்கிறார்கள்???

    அட கடவுளே, பெண்கள் சுதந்திரமாக குளிக்க கூட முடியாதா?

    அப்ப மருத்துவர்களை கொள்ளைக்காரர்கள்ன்னு சொல்றீங்களா?

    ReplyDelete
    Replies
    1. இப்படியே போனால் மக்களுக்கு எப்படித்தான் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வரும் ?

      நேரிலே பார்க்கிறான் ,ரகசிய காமெராவிலே பார்க்கிறான் ,பெண்கள் ஜாக்கிரதையா இருக்கணும் !

      நான் வேற தனியா சொல்லணுமா?
      நன்றி

      Delete
  11. நீதி தேவதையே கண்ணைக் கட்டித்தானே இருக்குதுங்க ஜி!...ஆமா எதுக்கு கண்ணக் கட்டி இருக்காங்க?!!! பாக்கக் கூடாதுன்னா..!!!!

    மற்ற இரண்டும்...ஹாஹஹஹஹஹ

    ReplyDelete
    Replies
    1. சாட்சிகளை நேரில் பார்த்தால் பச்சாதாபப் பட்டு விடலாம் என்பதற்கு கண்ணைக் கட்டி இருப்பார்கள் !
      நன்றி

      Delete
  12. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete