14 August 2014

இது மனைவியின் சந்தேகமா ,முன் எச்சரிக்கையா ?

---------------------------------------------------------------------------------
ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா?

          ''கர்நாடகாவிலே  எல்லா ஊர் பெயரும்  'ஹள்ளி'ன்னுதான்  முடியுமோ ?''
            ''ஊரை மட்டுமல்ல ,நம்ம ஊரு அல்லி ராணியைக் கூட   , அவங்க ஹள்ளி ராணின்னு தான் சொல்வாங்க ! ''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

இது மனைவியின் சந்தேகமா ,முன் எச்சரிக்கையா ?

''வேலைக் காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தப்போ ...நான்னு நினைச்சு அவளை  நீங்க  கட்டிப் பிடிச்சதை  மறந்துட்டீங்களா ?''




'சிரி'கவிதை!

முரண்பாடுகள் நிறைந்தது சினிமா இலக்கணம் !

எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் மாட்டியவர்கள் சிலநாள் அழகு ஹீரோயின்களாக   ...
இயற்கையாகவே அழகாய் இருப்பவர்கள் 
காலமெல்லாம் எக்ஸ்ட்ரா நடிகைகளாக ...


21 comments:

  1. வணக்கம்
    தலைவா.

    இரசித்தேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்க சொந்தத்திலே ஹள்ளி ராணி யாரும் பெங்களூரில் இருக்கிறார்களா ?
      நன்றி

      Delete
  2. அட! மணியவியின் மூளையே மூளை. கணவன் வேண்டுமென்றே தான் வேலைக்காரியை கட்டிப்பிடிட்த்தனோ?

    சினிமா உலகின் தர்மத்தை அருமையாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் அந்தக் கூத்தை கணவன் அரங்கேற்றி விடக்கூடாதுன்னுதான் மனைவிக்கு பயம் !

      நீங்கள் அடிக்கடி சினிமா படப் பிடிப்பில் கலந்து கொள்வதால் ,இதை நான் சொல்வதைவிட நீங்கள் சொன்னதே பொருத்தம் !
      நன்றி

      Delete
  3. கணவன் மேல நமபிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துட்டாங்கப்போல.

    ReplyDelete
    Replies
    1. இப்படி தீர்மானம் போட்டால் எப்படி இல்லறம் நல்லறமாகும் ?
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹ்ஹா.....சூப்பர் ஜி!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் எக்ஸ்டிரா நடிகைகள்தானே ?
      நன்றி

      Delete
  5. அடி ஹள்ளி.........ஹா.....ஹா.....ஹா..

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் அங்கே கொஞ்சுவார்களோ ?
      நன்றி

      Delete
  6. 01. நல்லவேளை வில்லி ராணினு சொல்லவில்லை.

    02. கண்டிப்பாக முன்னெச்சரிக்கைதான்.

    03. கவிதையில் 100க்கு100 உண்மையுடன் சோகமான வேதனையும் இருக்கிறது பகவான்ஜி, நான் பாடல் காட்சிகளில் லாலா லாலான்னு பாடுறவங்களை எப்போதுமே கவனிப்பேன் காரணம் அவர்களில் பெரும்பாலானோர் அழகிகளே,,, இதில் இன்னொரு வேதனை அவர்களில் 90 % பேர் தமிழச்சிகள், நீங்கள் சொன்னீர்களே ‘’எக்ஸ்ட்ரா’’ பிட்டிங் அவர்களில் 90 % பேர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா பெண்கள் இனி தாங்கள் கூர்ந்து கவனியுங்கள் புரியும்... ‘’எக்ஸ்ட்ரா’’ பிட்டிங் வரிசையில் தமிழச்சிகள் வராதது நமக்கு பெருமையே... ஆனால் லாலா லாலா வரிசையில் தமிழச்சிகள் வருவது பெருமையா ? அதேநேரம் இரண்டு இடத்திலுமே தமிழச்சிகள் வரவில்லையெனில் நமக்கு பெருமையே... சினிமா ஆசையால் வந்தவர்கள் சீரழிந்து போனவுடன் வேறு வழியின்றி இந்நிலைக்கு தள்ளப்பட்டவர்கள், இதற்க்கு பாமரப்பய தமிழ் ரசிகனும் ஒரு காரணமே... தமிழே தெரியாதவளைக்கூட தமிழ்க்கடவுளைக சித்தரிப்பான், இவர்களைப்பற்றிய சோகக்கதை ஒன்றை எழுதி வருகிறேன்... பகவான்ஜி அவர்களின் ஆசியுடன்.

    ReplyDelete
    Replies
    1. i.வில்லிவாக்கத்தில் வந்தால் வேண்டுமென்றால் சொல்லலாம் !

      2.புருசன்னு நினைச்சு அந்த அம்மாவும் ஏடாகூடமா செய்யாம இருக்கணும் !

      3.உங்கள் கதை எல்லோர் கண்ணிலும் ரத்தக் கண்ணீரை வரவழைக்கும் என்று நம்புகிறேன் !
      ஆசி வழங்கும் அளவிற்கு நான் 'ஆனந்தா 'ஆகவில்லையே ?
      நன்றி

      Delete
  7. தவறு புடவையில் இருந்தால் தானே மறுபடியும் நிகழாமல் தடுப்பதற்கு? ஹஹஹா

    ReplyDelete
    Replies
    1. தவறு உடையில் இல்லை ,உடையை மீறி உற்றுப்பார்க்கும் கண்களில் அல்லவா இருக்கிறது ?))))
      நன்றி

      Delete
  8. 1 --`Halli....Kalli.....mmm...

    2 ---..''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தப்போ ...நான்னு நினைச்சு அவளை நீங்க கட்டிப் பிடிச்சதை மறந்துட்டீங்களா ?''...ஐய்யோப்பா!..சிரிப்பான சிரிப்பு!.... உண்மை தானே!.....ஹஹ:ஹஹாhhh....
    அருமை...அருமையோ அருமை......
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. 1.நம்ம ஊர்லே பட்டின்னு முடியுறமாதிரி அங்கே ஹள்ளின்னு முடியுதோ ?
      2.இதுக்கு புருஷன் ,அதுசரி ,நான்னு நினைச்சு வேலைக்காரியை தொட்டு விடாதேன்னு என்றல்லவா சொல்லி இருக்கணும் ?
      3.ஹீரோயின்ஒரு படத்தில் சம்பாதிப்பதை ,வாழ்க்கை முழுதும் நடித்தாலும் சம்பாதிக்க முடியாத பாவப்பட்ட ஜென்மங்கள் ..!
      நன்றி

      Delete

  9. முத்தான மூன்று நகைச்சுவைகள்
    அத்தனையும் நன்று
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. முத்துக்கு முத்தாக கருத்து சொன்னதுக்கு நன்றி !

      Delete