6 August 2014

கேரளக் குட்டியை மணந்ததால் வந்த குழப்பம் !

---------------------------------------------------------------------------------
இவருக்கு பேய் பயம் இருக்கும் போலிருக்கே !

                     ''என்னங்க ,இந்த லாட்ஜிலே அறைகள் சுத்தமாத் தானே இருக்கு ...ஏன் இங்கே தங்கவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
                        ''எல்லா அறைகளிலும் சீலிங் ப்பேன்களைக் கழற்றிவிட்டு பெடஸ்டல் ப்பேன்களை மாட்டி இருக்கிறதைப் பார்த்தால் விபரீதமா ஏதோ நடந்த மாதிரி தோணுதே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! 

குட்டியை மணந்ததால் வந்த குழப்பம் !

''நான்  காதலிச்சு  கல்யாணம் செய்துக்கிட்டது  ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு 
பயோ டேட்டாவிலே எழுதி இருக்கானே !'



'சிரி'கவிதை!

தனிக் குடித்தனம் போகத் தடுக்கும் தாய்ப் பாசம் !

திருமணமானவுடன் ஆணின் வாழ்க்கை ...
வால் கிளாக் பெண்டுலம் போல் 
அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைகிறது ...
இரு பெண்களின் தயவால் !

22 comments:

  1. அடப்பாவிகளா, ஃபேன்களை வச்சு இப்படியெல்லாமா யோசிப்பாங்க!!!!

    தந்தை மொழி - இந்த பேர் கூட நல்லாயிருக்கே (பின்ன! எப்பப்பார்த்தாலும் தாய் மொழின்னு தானே சொல்றாங்க)

    கவிதையும், கவிதைக்கு ஏற்ற தலைப்பும் சூப்பரோ, சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கிற இடத்தை ,சிலபேர் தற்கொலை பண்ணிக்க ப்பேனில் தொங்கிற இடமா ஆக்கிட்டாங்க !!
      நன்றி

      Delete
  2. கேரள மாந்தீரிகத்தை வைத்தே குழப்பத்தை தீர்த்துடலாம் ஜீ

    ReplyDelete
    Replies
    1. இந்த ஏமாற்றுக்குஅந்த ஏமாற்று வைத்தியம் தான் சரி !
      நன்றி

      Delete
  3. சிறந்த நகைச்சுவை வெளியீடு
    தொடருங்கள்

    ReplyDelete
  4. - அவங்க முன் எச்சரிக்கையா இருக்காங்க... ஏன் பயப்படறீங்க?

    - தனித்தனியா மொழியா... பேஷ்! அப்புறம் தாத்தா மொழி, பாட்டி மொழி எல்லாம் வரும் போல! :))))

    - வெகு சீக்கிரமே ஒருபக்கமே நின்றும் விடுகிறது!!!!!!


    ReplyDelete
    Replies
    1. விசிறியைப் பார்த்தாலே இப்படி பயந்து சாகிறவரா முன் எச்சரிக்கை ஆசாமி ?

      கீப்பு மொழி உருவாகாமல் இருந்தால் சரிதான் !

      பெண்டுலம் ,இளம்பெண் பக்கம் சாய்ந்து ஆண்டுலம் ஆகிவிடுமா ?
      நன்றி

      Delete
    2. //ஆண்டுலம் ஆகிவிடுமா ?//

      ஹா..ஹா..ஹா...

      Delete
    3. வாழையடி வாழையாய் குலம் தொடர ,தான் ஆண் என்பதை உலகத்திற்கு காட்ட அந்த பக்கம் சாய்ந்து ஆண்டுலம் தானே ஆகணும் ?
      நன்றி

      Delete
  5. நியாயமான சந்தேகம்தான்! பையன் விவரமானவந்தான்! கவிதை உண்மை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பையன் விவரம் இல்லேன்னா இப்படி கேட்பானா ?
      நன்றி !

      Delete
  6. இப்ப எல்லா இடத்திலும் சென்ட்ரல் ஏசி போட்டு இருக்காங்களே....
    பொதுவுல அம்மையப்பன் மொழினு போடலாமே...
    ''பெண்டுலம்'' ஆண்களை இப்படியும் சொல்லாமோ....

    ReplyDelete
    Replies
    1. ஏசி அறை எடுக்கும் அளவிற்கு அவருக்கு வசதி இல்லைபோலிருக்கே !
      எது அம்மை மொழி ,எது அப்பன் மொழின்னு கிண்டல் பண்ணுவாங்களோ ?
      உளம் மகிழ்ந்து சொல்லலாமே?
      நன்றி

      Delete
  7. சில நாட்களாக இணையம் ஒத்துழைக்கவில்லை நண்பரே
    தற்பொழுது சரியாகிவிட்டது
    தங்களின் சில பதிவுகளை பார்க்காமல் விட்டிருப்பேன்
    இனி தொடர்வேன்
    தம 5

    ReplyDelete
    Replies
    1. இணையம் ஒத்துழைக்க வில்லை என்றால் பரவாயில்லை கரந்தையாரே ,என் நண்பர் ஒருவர் ,தாலி கட்டின பெண்டாட்டியே ஒத்துழைப்பதில்லை வருத்தப் படுகிறாரே !
      நன்றி

      Delete
  8. சரியான முன் ஜாக்கிரதை முத்தன்னவா இருப்பார் போலவே பாஸ் இவரு :)

    ReplyDelete
    Replies
    1. பேய் பயம்தான் அவரை இப்படி ஆக்கி விட்டதே!
      நன்றி

      Delete
  9. சென்ற வருட ஜோக்கை படிக்கும் போதுதான் தெரியுது நானும் ஒரு வருசமா படிக்கிறேன் போலவே!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஞாபகம் வந்திருச்சா ?ஓராண்டாக தொடர்வதற்கு நன்றி !

      Delete
  10. வணக்கம்
    தலைவா.

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete