28 August 2014

சைட் அடிக்கவா மனைவி அழைப்பாள்?

              ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லிட்டு ,இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
           ''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறாரே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா இப்படித்தான் !              ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
   ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரு!''

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !

துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள்சொன்னால் ...
மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !

14 comments:

  1. ஹாஹாஹா ஜி நளபாகம் தானே ஃபேமஸ்!!!!

    ஹாஹாஹாஅ.....

    துணி துவைக்க மட்டுமா? குளிக்கவும் சில நட்சத்திரங்கள் அதைத்தான் பயன் படுத்துவதாக எங்கேயோ வாசித்ததாக நினைவு!

    ReplyDelete
    Replies
    1. இதிலும் நளபாகம் என்று ஆணாத்திக்கம் தானா ?
      நன்றி

      Delete
  2. 1. மனைவி எதற்கு அழைத்தால் என்ன? நம் கடமை....!! :))))))

    2. ஜோக்கடிக்கறதா நிஐச்சு புளங்காகிதம் அடைஞ்சுட்டார் போல!! :)))))

    3. அதென்னங்க குறிப்பாக ஒரு பாய்ண்ட் சொல்லிச் சொல்றீங்க!!!

    ReplyDelete
    Replies
    1. 1 ,என்னது கடமையா ?என் வீட்டுக் காரியே பரவாயில்லே போலிருக்கே ))))))

      2.ஜோக் 'கடி 'ச்சுட்டார்ன்னு தான் சொல்லணும் !

      3.பெரும்பாலான பெண்களுக்கு இந்த தண்ணிஆசை விடமாட்டேங்குதே ,அதான் !

      Delete
  3. அடடா இதுக்குத்தானா......சரி....இவர் சைட் அடிக்கா முடியவிட்டாலும் ,இவரை மற்றவர்கள் சைட் அடிக்காமலா இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கோணத்தில் அந்த அம்மா யோசிக்கலையே !
      நன்றி

      Delete
  4. தலைக்கு மேல வேலை ஜோக் அருமை சார்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் தலைக்கு மேலே நிறைய வேலை இருந்தாலும் கருத்துரைத்ததற்கு நன்றி

      Delete
  5. அட ! நம்மையும் வல்லுனராக்கி பாக்க ஆசைப்படுறாங்க... அதைபோயி தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.....
    இதையே பெண்கள் கேட்டா...?
    தலைவர்களுக்கு புரிந்து இருக்கும் பெண்ணை ஆள்வதைவிட நாட்டை ஆள்வது சுலபமென்று.

    ReplyDelete
    Replies
    1. அந்த 5 ஸ்டார் ஹோட்டல் வல்லுனர்கூட வீட்டிலே சமைக்க மாட்டார் போலிருக்கே !
      அப்பரெண்டு மூணு கட்டின தலைவர்கள் எல்லாம் சிறந்த நிர்வாகிகளா ?
      நன்றி

      Delete
  6. 01. இதுக்காவது கூட்டிக்கிட்டு போறாங்களே.....
    02. அப்படீனாக்கா ? திருப்பதிக்கு போயிட்டு வந்து லீவு கேட்டா ?
    03. இதுதான் காரணமா ? இது தெரியாம, நான்.......

    ReplyDelete
    Replies
    1. 1.நமக்கு அந்த சான்ஸும் இல்லை என்பது உண்மைதான் !
      2.போயிட்டு வந்து லீவா ?loss of pay தான் ,உண்டியலில் போட்டதா நினைச்சுக்க வேண்டியதுதான் !
      3.மனைவிக்கு (ம் ) தொண்டனாவே இருக்கீங்களா ?
      நன்றி

      Delete
  7. என்னோட கமென்ட் எங்க போச்சு:(((

    ReplyDelete
    Replies
    1. கூகுள் ஆண்டவருக்கே வெளிச்சம் !))))
      நன்றி

      Delete