2 August 2014

மிஸ்ஸை சரியாய் கணக்கு போட்டு இருக்கானே !

------------------------------------------------------------------------------------------------------------
நன்றியுள்ள நாயாவது கைகொடுக்குமா ?

''நான் எந்த தொழிலைச் செய்தாலும் கையைக் 

கடிக்கிறது,அடுத்து என்ன செய்றதுன்னு புரியலே !''

''நாய் வியாபாரம் பண்ணிப் பாருங்க !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!  
மிஸ்ஸை சரியாய் கணக்கு போட்டு இருக்கானே !

                           ''இந்த காசை அமிலத்தில் போட்டா ,கரைஞ்சிரும்னு எப்படி சரியா கண்டுபிடிச்சே ?''
                             'உங்க கையிலே இருக்கிற செல்லாத நாலணாவைப் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் ,மேடம் !''

'சிரி'கவிதை!

ஒருவனுக்கு ஒருத்தி போதும் /போதாது /அதுவும் எதுக்கு ?

கிருஷ்ணர் பாமா ,ருக்மணியை மணந்திருந்தாலும் ...

'ஒருவனுக்கு ஒருத்தி 'நமது பண்பாடு என்பதால் 

கிருஷ்ணாயில் ,பாமாயில் என்று மட்டுமே 

பெயர் வைத்து போற்றுகிறார்கள் !

21 comments:

  1. ஏற்கனவே செருப்புகடை வச்சுருந்தாரோ ?
    நாலணாதான் செல்லாதே...
    கவிதை அருமை ஸூப்பரு....

    ReplyDelete
    Replies
    1. அதுகூட பரவாயில்லை செருப்பு வாங்கிறவங்க காலைத்தான் கடிக்கும் ?
      அதனால் தான் தைரியமா இந்த சோதனை செய்றாங்க ?
      ருக்மணி ஆயில் இல்லைதானே ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா...

    நன்றாக உள்ளது .ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம1வது வாக்கு
    வாருங்கள்....என்பக்கம்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிதைப் போட்டி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
  3. எல்லாம் முடிஞ்சு
    ஈற்றில்
    நாய் வியாபாரமா?
    தொடருங்கள்

    படியுங்கள் இணையுங்கள்
    தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
    http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச நாளில் ,நாய்ப்பய பிழைப்பா ஆகிப் போச்சேன்னு வருத்தப்படாமே இருந்தா சரிதான் !
      நன்றி

      Delete
  4. செருப்பு வியாபாரம் என்றால் காலைக் கடிக்குமோ!

    ஹா...ஹா... தஞ்சையில் எனக்கொரு ஆசிரியர் இருந்தார். அவர் அபராதம் விதிக்கும்போது இப்படித்தான் மூன்று செல்லாத நாலணா, இல்லவிட்டால் பழைய காலணா இரண்டு என்றெல்லாம் அபராதம் விதிப்பார்.

    ஹா...ஹா...ஹா...!

    ReplyDelete
    Replies
    1. செருப்பு வாங்கிறவங்க காலைக் கடித்தால் ஓனருக்கு நட்டமில்லையே !
      செல்லாத காசுக்கு எங்கே போறது ,கஷ்டமா இருக்குமே !
      உங்க ஆயில் ..தப்பு தப்பு ...ஆயுள் முழுவதும் இப்படியே சிரித்துக் கொண்டிருக்க வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. உடல் நலம் தேறி சிரிக்க வந்தமைக்கு நன்றி !

      Delete
  6. கையில் கடி வாங்கினது பத்தாதுன்னு .... கால் கடி வாங்க ஆசையா....??

    ReplyDelete
    Replies
    1. நல்லபடியா பால் வித்து நாலு காசு பார்க்கலாம்னு நினைச்சா முடியலையே ,கடி வாங்கியாவது நாய் வியாபாரம் பார்க்கலாம்ன்னு முடிவு செஞ்சுட்டார்!
      நன்றி

      Delete
  7. நாய் விற்ற காசு குலைக்குமா? :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அதனாலேதான் துணிஞ்சு இந்த தொழிலில் இறங்கிட்டார் !
      நன்றி

      Delete
  8. ஜோக்ஸ் எல்லாமே அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  9. நாய் பொழப்புன்றீங்க!

    சிரிகவிதை சூப்பரோ சூப்பர் ஜி!!!

    ReplyDelete
    Replies
    1. நடிகைகள் நிறைய பேர் குடியிருக்கும் இடத்தில் இந்த PET ஷாப்பை வைத்தால் பிழைத்துக் கொள்வார் !

      ருக்மணி இந்நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பாரோ ?
      நன்றி

      Delete
  10. தங்களின் அழைப்பிற்கு நன்றி பாரதி ஜி !

    ReplyDelete