13 June 2015

அப்படியா ,அய்யாவுக்கு இருக்கு ஆப்பு :)

-----------------------------------------------------------------------------

தமிழ் மணத்தில் சிகரத்தை மீண்டும்  தொட உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஜோக்காளியின்  நன்றி :)

 அது மல்டி ஸ்பெசாலிட்டி  ஆஸ்பத்திரியா இருக்குமோ :)           


                    ''அந்த கண்டக்டருக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தியா ,ஏன் ?''

                    ''லட்ச லட்சமா வச்சுகிட்டு இருக்கிறவங்க ,இந்த ஆஸ்பத்திரி ஸ்டாப்பிலே இறங்குங்கன்னு சொல்றாரே !''

அய்யாவுக்கு இருக்கு ஆப்பு !


                      ''அம்மா .நம்ம வேலைக்காரி பெயர் சித்ராதானே ?''

                    ''ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேட்குறே ?''

                 ''சித்தின்னு சுருக்கமா கூப்பிட்டா  போதும்னு அப்பா ஏன் 

சொல்றாரு ?''

மனைவி மட்டுமில்லே ,லைப் பார்ட்னர்  !

மனித உடம்பில் இதயம் மட்டுமே 

லைப் லாங் கியாரண்டி...
முதலில் உருவாகி கடைசியில் நிற்பது !
அதன் கியாரண்டி காலம் கூடுவதும் குறைவதும் ...
லைப் பார்ட்னரைப் பொறுத்து !

    1. KILLERGEE DevakottaiFri Jun 13, 12:12:00 a.m.
      சிலநேரங்களில் ரகசியம் தானாக வெளியாகி விடுவது உண்மையே....




      1. தானாட விட்டாலும் தசையாடும் என்பது இதைத்தானோ?
    திண்டுக்கல் தனபாலன்Fri Jun 13, 03:52:00 p.m.
    விவரமான அப்பா...!




    1. அம்பாளடியாள் வலைத்தளம்Fri Jun 13, 04:45:00 p.m.
      இல்ல இல்ல விவகாரமான அப்பா :))
    2. வில்லங்கமான அப்பாவும்தான் !

30 comments:


  1. லட்ச லட்சமா வச்சுகிட்டு இருக்கிறவங்க
    பக்கம் பார்த்துத் தான்
    நோய்களும் நாடுதோ...

    கருவறையில் முதலில் உருவாவது
    ஆண்/பெண் உறுப்புத் தான்...
    ஈற்றில் இதயம் நிற்பது
    மூளைக்குக் குருதி செல்லாமையே...
    லைப் பார்ட்னரைப் பொறுத்து என்றால்
    அன்பை வழங்கி
    உள்ளம் நிறைவடையச் செய்தால்
    நீண்ட ஆயுள் தான்!

    அப்பாக்காரன் அப்படியான ஆளோ
    அதனாலே
    அய்யாவுக்கு இருக்கு ஆப்பு!

    ReplyDelete
  2. ஹா...ஹா...ஹா... .. ஜி ஹெச் ஸ்டாப் வரும்போது என்ன சொல்வாரோ!

    ஹா...ஹா...ஹா... அனௌன்ஸே பண்ணிடறாரா?

    ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  3. வணக்கம்
    தரிப்பிடத்துக்கு பெயர் போன இடம் போல......நல்ல பையன்...போல... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. தனியார் மருத்துவமனைகள் பணம் பறிப்பதை ஜோக்காக சொன்னாலும் உண்மையும் அதுதான்

    ReplyDelete
  5. முதலிடத்தில் மறுபடியும். வாழ்த்துக்கள். எங்களை மகிழ்விக்க வைக்கும் தங்களை மகிழ்விக்கும் செய்தி.

    ReplyDelete
  6. கண்டக்டர் சரியாகத் தான் சொல்லியுள்ளார்...!

    வாழ்த்துகள் ஜி...

    ReplyDelete
  7. 1)கோடியில் (கே) கால் போனவங்க எல்லாரும் டாஸ்மார்க் ஸ்டாப்ல இறங்குங்கன்னு சொல்லாம விட்டாரே? பகவான் ஜி!
    2) அடுத்தமுறை கேட்டார்னா சொல்லு:த்தின்னுஅவள் பெயர் சுசித்ரான்னு! அப்பவும் சுத்தின்னு சொல்லிக்கிட்டு சுத்தி வந்தார்னா தலையிலே சுத்தியாலே ரெண்டு போடு போடு அடங்கிடுவாரு!
    3) லைப் பார்ட்னர் யாரு?
    சுகரா? சால்ட்டா?
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  8. ஜீ... இதயத்தைப் பற்றிய தத்துவம் மிகவும் உண்மையானது.

    ரசித்தேன்.. நீங்கள் இரு வரிக் கவிதைகள் போல சொல்லிச் செல்லும் தத்துவங்கள் அருமை.

    God bless You

    ReplyDelete
  9. 01. ஏற்கனவே பாதிக்கப்பட்டவரோ ?
    02. ரா வுக்கும், தி க்கும் வித்தியாசம் இவ்வளவா ?
    03. உண்மை

    மனமார்ந்த வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
  10. அப்பா சித்தி ஜோக் மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  11. சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. அனைத்தும் நன்று!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்! ஜி!!

    ReplyDelete
  14. யாழ் பாவாணன் அவர்களே >>>
    நோய்க்கு ஏது பொருளாதார ஏற்றத் தாழ்வு எல்லாம் ?எல்லாம் எல்லோருக்கும் வரத்தானே செய்கிறது :)

    நீண்ட ஆயுள் வாழ தம்பதிக்குள் ஒற்றுமை இருக்கிறதா :)

    ஆப்புக்கு பயந்து மனுஷன் ஃஹாப் அடிக்க போயிருப்பாரோ :)

    ReplyDelete
  15. ஸ்ரீ ராம் ஜி >>
    த .அ (தலையெழுத்து அவ்வளவுதான் ) மாத்திரை வாங்கப் போறவங்க எல்லோரும் இறங்குங்க என்பாரோ :)

    மறைமுகமா சொல்லிட்டாரே :)

    இதென்ன சார் ,இல்லாளின் கேள்விக்கு பதில் சொல்ற மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  16. ஆஸ்பத்திரி ஜோக்கும், சித்ரா சித்தி ஜோக்கும் வயிறு வலிக்க வைத்தது.
    த ம 11

    ReplyDelete
  17. செந்தில் குமார் ஜி >>>
    வயிறு வலி குறைய வெந்தயம் நாலு சாப்பிடுங்க :)

    ReplyDelete
  18. அ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜி >>.
    கலக்கல்ல்ல் உடன் ஸ் சேர்த்தா சரியாக இருக்கும் :)

    ReplyDelete
  19. ரூபன்ஜி >>
    காசிருந்தால் டாக்டரின் உருவில் தெய்வத்தையே காணலாமே :)

    அப்பனைக் காட்டிக் கொடுக்கிற இவனா நல்ல பிள்ளை :)

    ReplyDelete
  20. ஜம்புலிங்கம் ஜி >>.
    கை நழுவி போன முதலிடத்தை மீண்டும் ஆறு மாதத்திற்குள் பிடிக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே :)

    ReplyDelete
  21. திண்டுக்கல் தனபாலன்ஜி >>>
    கண்டக்டர் சொல்வது எப்படி சரியாகும் ,லட்சக்கணக்கில் பணம் இருந்தால் பஸ்ஸில் ஏன் வருகிறார்கள் ?:)

    ReplyDelete
  22. யாதவன் நம்பி ஜி >>.
    டாஸ்மாக் , கேடிக்கு மட்டுமே சொந்தமா இருந்ததெல்லாம் ஒரு காலம் ,இப்போ பொம்பளையும் குடிக்கிற காலமா போச்சே :)

    சுத்தியால் இவ்வளவு நல்ல காரியமும் நடக்குமா :)

    சுகர் பலருக்கும் ,சால்ட் சிலருக்கும் லைப் பார்ட்னர் :)

    ReplyDelete
  23. வெட்டிப்பேச்சு>>>
    எப்போதாவது பிறந்தால்தானே தத்துவம் :)

    ReplyDelete
  24. கில்லர் ஜி >>>
    1.பாதிக்கப் பட்டவரின் எச்சரிக்கை சரிதானே :)
    2.ரா வுக்கும், தி க்கும் உள்ள வித்தியாசம்,ராத்திரிக்கும் பகலுக்கும் உள்ள வித்தியாசம்தான் :)
    3.உண்மையென்று நீங்கள் சொல்வதை மனைவிமார்கள் ஒப்புக்கொள்வார்களா :)
    வாழ்த்துக்கு நன்றி :)

    ReplyDelete
  25. G.M.பாலசுப்ரமணியம் ஜி >>>
    அப்பா ,சித்தின்னு சொல்லச் சொன்னதில் தப்பா எதுவும் இருக்காதுன்னு பையனின் எண்ணம் :)

    ReplyDelete
  26. ‘தளிர்’ சுரேஷ் ஜி >>
    சிந்திக்க வைக்கும் உங்கள் கருத்துரைக்கு நன்றி :)

    ReplyDelete
  27. புலவர் இராமாநுஜம் ஜி >>
    அய்யாவுக்கு இருக்கு ஆப்பு ...தலைப்புமா உங்களுக்கு பிடித்தது :)

    ReplyDelete
  28. வலிப்போக்கன் >>
    த ம வில் முன்னேறிவரும் உங்களுக்கும் வாழ்த்துகள்:)

    ReplyDelete
  29. முரளிதரன் ஜி >>.
    சிரிக்கும் விதமா சொல்லி கண்டக்டர் புரிய வச்சுட்டாரே :)

    ReplyDelete