17 June 2015

வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி:)

               ''ஆபீசுக்கு போகும்போது , ஏண்டா என் கையிலே வெங்காய வெடியை கொடுக்கிறே ?''

               ''புது மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்கதானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

ஜாக்கிரதை 'ஃபூல் 'ஆகாதீங்க !

            ''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
         ''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் 
பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''



மருந்து கால் ,நம்பிக்கை முக்கால் !

போலி மருந்தினாலும்  நோய் குணமாகும்  ...
நம்பிக்கை  நெஞ்சில் இருந்தால் !


  1. Chokkan SubramanianTue Jun 17, 07:32:00 a.m.
    உங்கள் விட்டு வாசலில் என்ன போர்டு மாட்டியிருக்கீங்க?




    1. L போர்டு மாட்டி இருக்கிறேன் ,உங்களைப் போன்றவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கே !

24 comments:

  1. 01. இது அப்பாவுக்கு வேட்டு மா3 தெரியுதே...
    02. வர்றவனுக்கு வெட்டி வேலை மிச்சம்தான்.
    03. மருந்தில் நஞ்சிருந்தாலுமா ?

    ReplyDelete
    Replies
    1. 1.கேடு நினைத்தவருக்கு கேடு வரும்தானே :)
      2.யாருக்கெல்லாம் சலுகை பண்ண வேண்டியிருக்கு பாருங்க :)
      3.நம் உணவிலே இல்லாத நஞ்சா :)

      Delete
  2. உண்மையில் அப்படி ஒரு அறிவிப்பு வைப்பது இந்தக் காலத்தில் அவசியமாக இருக்கிறது ..\தம +

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை,நாளைக்கு வருகிறோம் ,பத்து லட்ச ரூபாய் எடுத்து வைக்கவும் இல்லை கொலை விழும் என்று கொள்ளைக் காரர்கள் பதிலுக்கு எழுதினால் என்னாகும் :)

      Delete
    2. பரவாயில்லை,நாளைக்கு வருகிறோம் ,பத்து லட்ச ரூபாய் எடுத்து வைக்கவும் இல்லை கொலை விழும் என்று கொள்ளைக் காரர்கள் பதிலுக்கு எழுதினால் என்னாகும் :)
      இது மிக நல்லாயிருக்கு...

      Delete
    3. பாட்டுக்கு எதிர்ப் பாட்டா :)

      Delete
  3. வெங்காயவெடியில் வேட்டா. கையில் வாங்கியே மானேஜர் வெடித்து விட்டால்.....எங்கப்பன் குதிருக்குள்... என்பதுபோலத் தோன்றவில்லை.?எதிலெல்லாமோ நம்பிக்கை வைக்கிறார்கள். .....!

    ReplyDelete
    Replies
    1. கையிலே வாங்கினேன் பையிலே போடலே வேட்டுபோன இடம் தெரியலைன்னு சொல்வாரோ :)
      நம்பிக்கை நெஞ்சில் இருந்தால் கத்தியின் முனையில்கூட ஏறி நிற்கலாம்னு சொல்றாங்களே :)

      Delete
  4. நல்ல பையன்... வாழ்க நலம்... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அப்பனுக்கு தப்பாம பிறந்த பிள்ளை ,வாழ்க வாழ்க :)

      Delete
  5. அனைத்தும் ரசனை ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி :)

      Delete
  6. ஹாஹாஹா! பையன் அப்பா வேலைக்கு வேட்டு வெச்சுடுவான் போலிருக்கே! முன் ஜாக்கிரதை பேர்வழிகளை பார்த்து இருக்கிறேன் இப்படிப்பட்டவர்களை பார்த்தது இல்லை! நம்பிக்கை இருப்பின் எல்லாம் குணமாகும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வேட்டு வைக்க நினைச்சா வேதனைவரத்தானே செய்யும் :)
      முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுக்கு குருவாய் இருப்பாரோ :)
      மருந்தே தேவையில்லை அப்படித்தானே :)

      Delete
  7. அனைத்தும் சூப்பர் ஜீ,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி :)

      Delete
  8. நம்பிக்கை எங்கிருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மனம் செய்யாததா மருந்து செய்துவிடும் :)

      Delete
  9. வெஙுகாய வெடி!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு கொள்ளி வைக்கவேண்டியதில்லை என்பதால் நீங்கள் புள்ளி வைக்கலையோ:)

      Delete
  10. 2) வீட்டில் ஏமாற்றம் ஆனால்,
    பேங்க்கில் கொண்டாட்டம்! அப்படித்தானே பகவான் ஜி!
    த ம 10
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. மொத்தமாய் கிடைக்கும் என்றால் கசக்கவா செய்யும் :)

      Delete