9 June 2015

பெண்டாட்டி கிளி மாதிரி இல்லாட்டி :)

             ''கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒருத்தியை வச்சுக்கிறது தப்புதானே ?''

             ''இதிலே என்ன சந்தேகம் ?''
             
       ''எனக்கு அமைஞ்சவளே குரங்கு மாதிரி 

இருக்கிறா  ,நான் கிளி மாதிரி ஒருத்தியை 

வச்சுக்கிறதில் தப்பிருக்கா ?''

ஜெயிக்கப் போறது யாரு :)

            ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
         ''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''




கிரிக்கெட்டை விட சியர்ஸ் கேர்ள்களின் டான்ஸ் பெட்டர் :)

கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான் ...
நாட்டுக்காக விளையாட வேண்டியவர்கள்தான் ...
நோட்டுக்காக விளையாட ஆரம்பித்து விட்டார்கள் !


  1. KILLERGEE DevakottaiTue Jun 10, 07:08:00 p.m.
    உண்மைதான் பகவான்ஜீ ஆனால் அவர்கள் நோட்டுக்காக ஆடும் சந்தர்ப்பத்தை கொடுத்தது யார் ? அறியைமைவாதிகளால்தானே Facebookகில் சமீபத்தில் ஒருகவிதை படித்தேன் யாரோ ஒரு நண்பர் எழுதியது ''60 வயதாகியும் வேலைக்கு செல்லும் தந்தையைப்பற்றி கவலைப்படாமல் 37 வயதில் ஓய்வுபெறும் சச்சினுக்காக வருந்துபவன் இந்தியன்'' என்று உண்மைதானே... அந்தக்கவிதையைபோல இதுவும் ஒரு சவுக்''கடி''தான் சபாஷ் !

24 comments:

  1. அட, மாத்தி யோசிக்கிறாருங்க இவரு!

    சூப்பர் மாப்பிள்ளை!

    என்னவோ பண்ணிட்டுப் போகட்டும் விடுங்க!

    ReplyDelete
    Replies
    1. மாத்தி யோசிக்கிற இவருக்கு நிச்சயமா மாத்து உண்டு :)

      பொழைச்சுக்குவார் அப்படித்தானே :)

      நாம சியர்ஸ் கேர்ள்களின் டான்ஸ் ரசிச்சிட்டு போவோம் :)


      Delete
  2. Replies
    1. அருமை ,மாத்தி யோசிப்பதா :)

      Delete
  3. கில்லரின் பின்னூட்டம் அருமை ..
    நகைப்பணி தொடரட்டும்
    தம +

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜீயின் பின்னூட்டம் என் மனதையும் கிள்ளியது :)

      Delete
  4. 2) வாய்க்கு கை சேவகம் செய்வதைத்தானே நாம்பொதுவாகவே பார்க்கிறோம்! இந்த தத்துவம் எப்படி பகவான் ஜிக்கு மாறியது?
    3)நோட்டுக்கு விளையாடி நாட்டை விலைபேசும் ஜென் டீல் மேன் விளையாட்டு
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கை நீளுமா ,சேவகம் செய்யுமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும் :)
      இதுவும் நல்ல ஜென் 'டீலா ' தெரியுதே :

      Delete
  5. Replies
    1. தொல்லைக்கும் ஒரு எல்லை இல்லாமல் போயிடுச்சே :)

      Delete
  6. ஆக மொத்தம் வச்சிக்கறது தப்பா ரைட்டா.?ஜாடிக்கேத்தமூடி.

    ReplyDelete
    Replies
    1. மொத்தமா வச்சுக்கிறதில் தப்பேயில்லை ,தாலி கட்டாம தவணை முறையில் வச்சுக்கிறதுதான் தப்பு :)

      Delete
  7. எங்க ஜீ ! தத்துவத்தைக் காணோம்?

    ஓகோகோ... முதல் ஜோக்கே தத்துவம் தான...?

    ReplyDelete
    Replies
    1. யார் சொன்னது ,தத்துவம் எப்போதும் கடைசியில்தான் வருமென்று ?

      Delete
  8. 01. ஜி இந்தப்பதிவை வீட்ல உட்கார்ந்து சத்தமாக படித்தால் என்ன நடக்கும் ?
    02. அப்படீனாக்கா ? மாமனார் விரைவில் வாய்தாவுக்கு அலைய வேண்டியதிருக்கும்னு சொல்றீங்களா ?
    03. அன்று சொன்னதே இன்றும்.

    ReplyDelete
    Replies
    1. 1.தைரியம் உள்ளவன் படித்தால் வார்த்தைகள் வரும் ,இல்லையெனில் வாயில் இருந்து காற்றுதான் வரும் :)
      2..கணவன்தான் வாயே பரவாயில்லை என்று கையை மடக்கிக்கப் போறான் :)
      3.அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை என்பதாலா :)

      Delete
  9. முதல் ஜோக் தர்க்க வாதம் சரிதான்!

    ReplyDelete
    Replies
    1. வாதத்திற்கு சரிதான் ,விவாகத்துக்கு சரியில்லை ,அப்படித்தானே :)

      Delete
  10. படனும்னு விதியை கூப்பிடா...அது அவன் செளகர்யம்...ஹிஹிஹி....

    ஏட்டிக்கு போட்டி.....சரியான ஜோடி...

    கிரிக்கெட்...பார்ப்பது இல்லை....

    தம +1

    ReplyDelete
    Replies
    1. வேலியில் போவதை மடியில் கட்டிக்கிற மாதிரியா :)

      கையா ,வாயா வெல்லப் போவது :)

      பார்ப்பதில்லை என்றாலும் பரவாயில்லை ,தெரிந்து கொள்வதில் தவறேயில்லை :)

      Delete
  11. பொருத்தமான மாப்பிள்ளை!

    ReplyDelete
    Replies
    1. இந்த பொருத்தம் எங்கே போய்விடுமோ ? பொறுத்திருந்து பார்ப்போம் :)

      Delete
  12. கிளி குரங்கு........கை..கால் செம ரகளை.....

    கிரிக்கெட் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.....

    ReplyDelete
    Replies
    1. குரங்கு கையில பூமாலை தம்பதியரை ஒப்பிடலாமா :)

      கிரிக் 'கெட்டு' போச்சு :)

      Delete