வட இந்திய டூர் - பாகம் 1
அண்மையில் வட இந்தியச் சுற்றுலா சென்றபோது, நம் நாட்டையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோடுஅமைந்து இருக்கும் ஊரான வாகா பார்டர் போய் பார்க்கலாமே என்று டெல்லியில் இருந்து கிளம்பினோம் .அங்கே என்ன விசேசம் என்றால்...எல்லைப் பாதுகாப்பு படையினர் தினசரி நடத்தும் கொடியிறக்க நிகழ்ச்சிதான் !
எங்கள் வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டோல் கேட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது,பின்னால் அவசர கால சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது ஒரு கார் ..அது கடந்து செல்ல அங்கிருந்த காவல் துறையினர் டோல் கேட்டில் ஒரு வழியை ஏற்படுத்தினார்கள் .யாரோ ஒரு VIP செல்கிறார் போலிருக்கிறது நினைத்து பார்த்தால் .அந்த எஸ்கார்ட் வண்டிக்கு பின் ஒரு வால்வோ பஸ்,அதற்கு பின்னாலும் ஒரு எஸ்கார்ட் கார் .இவ்வளவு பாதுகாப்பும் அந்த பஸ்சிற்கு! ஏனென்றால் ,அது டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு செல்லும் பஸ்!இடையில் அந்த பஸ் எங்கேயும் நிற்காதாம்!வாகா கேட்டில் இறக்கி விடப்படும் பயணிகள் ,அங்கு தயாராக இருக்கும் பாகிஸ்தான் பஸ்ஸில் லாகூர் செல்வார்களாம்!
நாங்கள் கொடிஇறக்க நிகழ்ச்சி நடைபெறும் வாகா பார்டர் சென்று சேர்ந்தோம்.அங்கே பார்த்தால் ஒரு ஊரே திரண்டது போல் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது .நாலரை மணி வாக்கில் கேட்டை திறந்தார்கள் .ஒரு ஒழுங்கு இல்லாமல் மக்கள் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் .மெடல் டிடெக்டர் செக் அப் முடிந்த பின் ,பார்வையாளர் மாடத்தில் போய் அமரலாம் என்று பார்த்தால் முடிய வில்லை .சுமார் இருபதாயிரம் பேரை கொள்ளக்கூடிய இடத்தில் முப்பதாயிரம் பேருக்கு மேற்பட்டோர் கூடி இருந்தனர் !
எல்லைப் பாதுகாப்பு படையினர் அங்கே வரும் மக்களை ஆரம்பத்தில் இருந்தே வரிசையாக ஒழுங்குபடுத்தி அமரவைத்தால் நல்லது .இல்லையென்றால் எதிர்காலத்தில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் ,இந்த விசயத்தில் BSFஅதிக கவனம் செலுத்தினால் நல்லது !
பார்வையாளர் மாடம் முழுவதும் ஆர்வத்துடன் மனித தலைகள் .நிகழ்ச்சி தொடங்கியது .மாடத்தின் முன் உள்ள இடத்தில் ,பெண் குழந்தைகளை அழைத்து நமது தேசீயக் கொடியை அவர்கள் கையில் கொடுத்து சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஓடச் சொன்னார்கள் .பெருமை பொங்க கொடியை பறக்க விட்டு கொண்டே ஓடினார்கள் ,ஓடினார்கள் ,நம் தேசத்தின் எல்லைக்கே ஓடினார்கள் !
பிறகு தேசபக்தி பாடல்கள் முழங்கியது ,விரும்பமுள்ள பெண்கள் ,குழந்தைகள் ஆடலாம் என்று அனுமதிக்கப் பட்டார்கள் .துள்ளல் இசையுடன் வந்த பாட்டிற்கு பெண்கள் ஆடினார்கள் ,ஆடினார்கள் ,சினிமா குத்து ஆட்டம்கூட தோற்றுவிடும் அப்படி ஆட்டம் போட்டார்கள் !அதைப் பார்த்த எனக்கே இடுப்பு சுளுக்கிக் கொண்டு விடும் போலிருந்தது ! ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் !
ஒலி பரப்பான தேசபக்தி பாடல்கள் எல்லாமே ஹிந்தி பாடல்கள்தான் .இந்திய நாடு என் வீடு என்று தொடங்கும் நம் பாடலைப் போட்டால் நன்றாய் இருக்குமே என்று எனக்கு பட்டது .அது இந்த 'ஹிந்தி'ய 'நாட்டில் எங்கே நிறைவேறப் போகிறது ?
பிறகு ,BSF படை வீரர்கள் உரத்த கமென்டுடன்,கம்பீர நடை போட்டார்கள் கொடி மரத்தை நோக்கி !தலைக்கு மேலே காலை தூக்கி அவர்கள் கொடி வணக்கம் செலுத்தியது நன்றாய் இருந்தது ! பாரத் மாதாக்கி ஜெய் என்று நம் மக்கள் உணர்ச்சி பெருக்குடன் கோஷம்போட்டு தங்களின் தேச பக்தியை நிரூபித்தார்கள் !
இந்தியா என்று பெயர் பொறிக்கப்பட்டு அழகாய் காட்சி தரும் கேட் திறக்கப் பட்டு ,அங்கு ஏற்றப் பட்டிருக்கும் நமது மூவர்ணக் கொடி,தேசீயக் கீதம் முழங்க இறககப் படுகிறது ,இதே போன்று பாகிஸ்தான் தரப்பிலும் நிகழ்ச்சி நடத்தப் பட்டு இருநாட்டு கொடிகளும் ஒரே நேரத்தில் கொடிஇறக்கம் நடத்தப்படுகிறது . நம் நாட்டுதரப்பில், பார்வையாளர்கள் கூட்டத்தால் மாடங்கள் நிரம்பி வழிகின்றன .ஆனால் .பாகிஸ்தான் தரப்பில் பார்வையாளர்கள் நூறு பேர்கள் கூட இல்லை ,இதை பெருமை பொங்க சொல்லிக் கொண்டு நம்மவர்கள் தங்களின் தேச பக்தியை வெளிப் படுத்தினார்கள் .தீவிர தேச பக்தர்கள் வந்தே மாதரம் என்ற போது மற்றவர்களும் அதை திருப்பி சொன்னார்கள் .பாகிஸ்தான் டவுன் டவுன் என்று ஒருவர் கோஷம் போட்டபோது, யாரும் அதை திருப்பி சொல்லாதது எனக்கு மகிழ்ச்சியை தந்தது !
அங்கே எடுக்கப் பட்ட சில புகைப் படங்கள் ,இதோ உங்கள் பார்வைக்கு ......(படத்தைக் கிளிக் செய்து பார்ப்பது கண்களுக்கு நல்லது :)
பயணம் தொடரும் ....
நன்றி மறக்காத டாக்டர் !
''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லாம் யாரு ?''
'' டாக்டரிடம் ஆப்ரேசன் பண்ணிக்க காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவர்கள் !''
தொப்பைக்கு 'goodbye 'எப்போது ?
தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின்
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !
அது எப்படி ? பகவான்ஜீ ஆட்டத்தை பார்த்தாகூட இடுப்பு சுளுக்குமா ?
விநாயகர் கவிதை அருமை.