''நான் செய்றது எல்லாமே தலைக்கீழா இருக்கா ,என்ன மாமா சொல்றீங்க ?''
'' என் பொண்ணு முழுகாம இருந்தா பரவாயில்லை,போட்ட நகைங்க எல்லாம் அடகு வச்சு முழுகிப் போச்சுன்னு சொல்றீங்களே !''
மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்:)
''என்னங்க ,பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச் சொல்றீங்க ?''
''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''
காலம் செய்த கோலமடி !
ஆட்டோமேடிக் வாட்ச் வந்ததால் ...
ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !
செல் போனில் டயம் தெரிவதால் ...
வாட்ச் வாங்குவதே நின்று போனது !
- காமக்கிழத்தன்Thu Jun 26, 12:41:00 p.m.பணத்தை எடுத்துட்டே இருந்தா, பவித்ரா ‘தரித்திரா’ ஆயிடுமே. அது தெரியாதா அவங்களுக்கு?
|
|
Tweet |
ஜீ...உண்மையாலுமே கவிதை சூப்பர்ஜீ..
ReplyDeleteஉங்களோட கவிதை மற்றும் தத்துவம் டைமன்ஷன் என்னை ரொம்ம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு...
God Bless YOU
உண்மையாவா சொல்றீங்க ,இது 'வெட்டிப் பேச்சு' கிடையாதே :)
Deleteசேச்சே... உண்மையாலுமே ஜீ....
Deleteநீங்க ஜோக்காளி மட்டும் கிடையாது. வாழ்க்கையை அழகாக தெரிந்து வைத்துக் கொண்டு உங்களது humour sense ஆல ரொம்ப லாவகமாக நடத்திச் சென்றுகொண்டிருக்கும் ஒரு சீரியஸ் பர்ஸன் நீங்க..
இன்னும் என்னவெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்கன்னு தெரியலை.
ஏதோ ஒன்னு ரெண்டு கவிதை தத்துவம் அகஸ்மாத்தா சொல்லப்போய் அது எனக்கு ரொம்பப் பிடிச்சு எங்கரேஜ் பன்னதாலே உங்களுக்குள்ள இருக்கிற இத்தனை 'பெரிய மனுஷன்' வெளி வந்திருக்கார்னு நினைக்கிறேன். நான் முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை.
நல்ல criticism ஒரு எழுத்தாளனை வளரவைக்கும் என்பது என் கருத்து.
ஆல் த பெஸ்ட் ஜீ..
God Bless You
நீங்கள் தந்திருக்கும் இந்த ஊக்க மருந்து நன்றாக வேலை செய்யும் என்று உணர முடிகிறது,நன்றி :)
Deleteபேரை மாற்றிட வேண்டியது தான்! :)
ReplyDeleteரசித்தேன்.
த.ம. 1
பெயர் மாறினாலும் குணம் மாறுமா :)
Deleteபெரும்பாலோர் கையில் இப்போது கடிகாரம் இல்லை. அதுபோல் வீட்டிலும் அலாரம் கடிகாரம் இல்லை. அந்த வேலையைத்தான் கைபேசி செய்து விடுகிறதே.
ReplyDeleteவிஞ்ஞான முன்னேற்றத்தால் வந்த செல் ஒரு வரப்பிரச்சாதம்தான்,சாதம் உள்ளே போகும்போதுகூட இடது கையில் இருந்து இறங்க மாட்டேங்குதே :)
Deleteமாப்பிள்ளைக்கு என்ன தொழில்...?
ReplyDeleteதொழில் கிடக்கட்டும் .செய்ய வேண்டியதை விட்டுட்டு ,செய்யக்கூடாததை எல்லாம் செய்துகிட்டு இருக்காரே :)
Deleteஉணவிற்கு பதில் மாத்திரையும் வரும் காலத்தில் வந்துவிடும்...
ReplyDeleteஇப்போதே ,விண்வெளி வீரர்கள் மட்டும் பயன்படுத்துகிறார்களே:)
Deleteவணக்கம் ஜீ,
ReplyDeleteஅப்ப மாப்பிள்ளையால் எதுவும் முடியாது என்று சொல்லுங்கள்,
அனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள். நன்றி.
எதுவும் முடியாது என்றால் தாம்பத்யம் விரைவில் முடிவுக்கு வந்து விடுமே :)
Deleteமனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்....கண்டிப்பா....
ReplyDeleteநாம எடுக்க வேண்டியது இல்லை ,அவங்களே எடுத்துப்பாங்க :)
Deleteமாப்பிள்ளைக்கு முடிந்ததையும் முடியாததையும்தான் சொல்லி விட்டீர்களே பேரிலேயே வித்ரா இருக்கும் போது ஏன் மாற்றணும்
ReplyDeleteஇனி அவர் பாடு ,அவர் மனைவி பாடு :)
Deleteபெயரில் இருக்கலாம் ,பணம் பாங்கில் இருக்கணுமே :)
மூழ்கிப் போன ஜோக்கில் மூழ்கிப்போனேன்! கவிதை கலக்கல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரொம்பத்தான் மூழ்கி விட்டீர்கள் போலிருக்கு ...நீங்களும், உங்கள் தளத்தில் போட்டிருக்கும் ,மூழ்கிப் போன ஜோக்கை நானும் ரசித்தேன் :)
Deleteகாலம் செய்த கோலம்! வாழைப்பழத்தில் ஊசி!
ReplyDeleteஐயையோ,!தாய்க்குலம் அனுபவிக்கும் நவீன வசதிகளை நான் சொல்லலைங்கோ :)
Deleteகவிதை கலக்கல்!
ReplyDeleteநம்புறேன் ,முதலில் வந்த கருத்தும் இதையே சொல்வதால் :)
Delete