21 June 2015

மனைவியும் மனோரஞ்சிதப் பூதான் :)

 -----------------------------------------------------------------------------------------

 இந்த பையன் பரீச்சையிலும்  'முட்டை' தான் எடுப்பான் :)

             ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா, என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
         ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

நாய் வாலை நறுக்கி ,நாய்க்கே சூப்பு வைக்கலாமா ?

              '' கப்புலே வைச்ச சூப்பை ஒருசொட்டு விடாமே நக்கி நக்கி குடிக்கிற அந்த நாய்க்கு, உண்மை தெரிஞ்சா ...உன்னைக் கடிச்சே கொன்னுடுமா ,ஏன் ?''

                ''அதோட வாலை நறுக்கி வச்ச சூப் ஆச்சே !''




மனைவியும் மனோரஞ்சிதப் பூதான் !

காதலி மனைவியானதும் புரிந்தது ...
அவள் மனோரஞ்சிதப்பூவின் ஜாதியென்று !
தள்ளி நின்று ரசித்தபோது ...மணந்தாள் !
மணமான நெருக்கத்தில் தந்தாள் ...
தலைச்சுற்றலையும் மயக்கத்தையும் !

  1. Jeevalingam KasirajalingamThu Jun 26, 12:39:00 p.m.
    நாய் வால் சூப்பு
    ஆளை நறுக்குமோ!




    1. உண்மை தெரிஞ்சா நறுக்கத் தானே செய்யும் ?



35 comments:

  1. டபிள் ஓகே .மறுமொழி பட்டன் வேலை செய்கிறது :)

    ReplyDelete
  2. 01. முட்டையாலே பொது அறிவுக்கு பங்கம்தான்.
    02. அடுத்து கால் சூப்பா ?
    03. கவிதை ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. 1.இந்த முட்டையை முதலில் கண்டு பிடிச்சது நம் இந்தியா தானாமே ,நாடு முன்னேற்றமும் அப்படித்தான் இருக்கு :)
      2.ஆட்டுக்குதான் கால் சூப் :)
      3.நீங்களும் மயங்கி இருப்பீர்கள் போலிருக்கே :)

      Delete
  3. அடப்பாவமே... இப்படி வேற சோதனையா!

    ச்சே....பாவங்க...

    ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. இந்த கருவைக் கலைக்க யாரும் அஞ்சுவதே இல்லை :)

      ருசிச்சு சாப்பிடுது ,பாவமா :)

      தேடி போய் மயங்குவது ,சொந்தக் காசில் சூனியம் வச்சுக்கிற மாதிரிதானே :)

      Delete
  4. மறுமொழி பட்டன் வேலை செய்கிறது சரிதான். ஆனால் பெயர் சொல்லி, பிறகு அதற்கு பதில் சொன்னால்தான் இன்பாக்ஸிலேயே பதில்களைப் படிக்கும்போது யாருக்கு பதில் சொல்லப் பட்டிருக்கிறது என்பது தெரிகிறது!

    ReplyDelete
  5. ஆம் ஜி... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மாறுகிறது...

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை. மனோரஞ்சிதம் மனதில் நின்றது.

    ReplyDelete
    Replies
    1. நிற்காதா பின்னே ,மணம் அப்படியிருக்கே :)

      Delete
  7. முட்டை !இரசித்தேன் !

    ReplyDelete
    Replies
    1. முட்டை எப்படி மாறினாலும் சுவைதானே :)

      Delete
  8. மனோரஞ்சிதப் பூ சூப்பர்! மற்றதெல்லாம் ஓகே!
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. மகிழம்பூவின் வாசம் பாம்பை அழைக்கும்னு சொல்வாங்க ,மனோரஞ்சிதப் பூவின் வாசத்திற்கு வேறு குணம் இருக்கும் போலிருக்கே :)

      Delete
  9. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாசம் போலும்......மனம் வீசட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அது இயற்கையான மணம்தானா என்று மதுரை தமிழ் சங்கத்தில் விவாதம் செய்ய வேண்டியதில்லையே ?:)

      Delete
  10. எப்படியோ முட்டை பொறிச்சாச்சு!
    உங்கள் மனம் விரும்பும் மணத்தைத் தரும் மலரல்லவா மனைவி!

    ReplyDelete
    Replies
    1. ரசனை.

      தொடர்கிறேன் ஜி.

      Delete
    2. சென்னை பித்தன்Sun Jun 21, 01:06:00 p.m.
      எப்படியோ முட்டை பொறிச்சாச்சு!
      உங்கள் மனம் விரும்பும் மணத்தைத் தரும் மலரல்லவா மனைவி!
      Reply>>.
      அது பொறிந்த நேரமோ என்னவோ தெரியவில்லை ,என் மறுமொழி பட்டன் காணாமல் போயிடுச்சே :)
      சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டுன்னு நம்ம வைரமுத்து சொன்னது இதைத்தானா :)

      Delete
    3. ஊமைக்கனவுகள்.Sun Jun 21, 06:38:00 p.m.
      ரசனை.

      தொடர்கிறேன் ஜி.
      Reply>>.
      ரசித்து மெய் மறந்து விட்டீர்கள் போலிருக்கே ....அய்யா சென்னைப் பித்தன் அவர்களின் கருத்துக்கு ,நீங்கள் மறுமொழி பட்டனில் கருத்து போட்டு இருக்கீங்களே :)

      Delete
  11. முட்டைப் பொரியல் நல்லா இருக்குதா :)

    ReplyDelete
  12. இது மாறுவதெப்போ ,தீருவதெப்போ இது நம்ம ..இல்லை ,இல்லை ..என் கவலை :)

    ReplyDelete
  13. சூப்பர் ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பூவின் வாசம் உங்களுக்கும் பிடித்ததா :)

      Delete
  14. வாசம் அருமை,,ஜீ,,,,,,,,,,,,, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த வாசம் என்றும் மோசம் செய்யாது என்று உறுதியாய் நம்பலாம் :)

      Delete
  15. அடுத்த முறை சூப்பு வைக்கும்போது நாக்கை அறுத்து வச்சி சூப்பாக்கிட்டா போச்சு!
    பகவான் ஜி
    த ம 11
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. சப்பு கொட்டிக் குடிக்க முடியாது ,பாவமில்லையா :)

      Delete
  16. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அதிகம் பிடித்தது நாய் சூப்பா ,மனோரஞ்சிதப் பூவின் வாசமா ,ரூபன் ஜி :)

      Delete
  17. ஹஹஹ் முட்டை வாங்குறவனுக்கே தெரியலையா...
    (இரண்டு முட்டைகளுக்கும் வித்தியாசம் உண்டு .இல்லையா ஜி?!!!..பொரிக்கும் முட்டை வேறு.... குஞ்சு பொரிக்கும் முட்டை வேறு....கடைகளுக்கு வரும் முட்டைகளை பொரிக்கலாம் ஆனால் குஞ்சு பொரிக்க முடியாது. அதில் கரு முட்டை அல்ல...
    மனோரஞ்சிதம் சூப்பர் நல்லாவே மணக்குது....

    அனைத்தையும் ரசித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. நாட்டு முட்டை அல்லவா அவன் சாப்பிட்டான் :)

      மயக்கம் வரவில்லை என்றால் சரிதான் :)

      Delete
  18. என்ன ஜி இதற்கு முந்திய மிஸ் ஆன இடுகைகளில் எல்லாம் கருத்துப் பெட்டி ஓபன் ஆக மாட்டேங்குது? .நம்ம அரசியல் வாதிங்க இங்கயும் ஆட்டையப் போட்டுட்டாங்களா?!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க ?நீங்களே பார்த்து இருப்பீங்களே .சில நாட்கள் reply பட்டன் வேலை செய்யாமல் போகிறது ..கூகுள் ஆண்டவரிடம் நேர்ந்துக் கொண்டிருக்கிறேன் ,சரியானால் 108 மௌஸ் மாலை போடுகிறேன் என்று ..பார்ப்போம் :)

      Delete
  19. முட்டை, மனோரஞ்சிதம் இரண்டும் அருமை.

    God Bless you

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் மணக்கிற சமாச்சாரமாச்சே :)

      Delete