2 June 2015

வயசுப் பொண்ணைக் கடையில் இருக்கச் சொல்லலாமா :)

            ''நான் பஜாருக்கு போய் சரக்கு வாங்கிட்டு வர்ற வரைக்கும் நீதானே  கடையைப் பார்த்துக்குவே ,இப்ப ஏன் முடியாதுன்னு சொல்றே ?''

                 ''நேற்று ஒரு காலிப் பய வந்து லிப் 'லாக் 'கிடைக்குமான்னு கேட்கிறாம்பா !''


பணம் இருந்தால்தான் மனதில் பலம் இருக்குமோ ?

        ''அவர் ,ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணம் போனதில் மனநிலை பாதிக்கப் பட்டிருக்காரா ,எப்படி ?''
          ''ஷேர்  ஆட்டோவில்கூட ஏறமாட்டேன்னு  சொல்றாரே  !''

வாத்தியார் ரொம்ப விவரம்தான் !

                    ''நீங்க வாத்தியாரா இருக்கிற பள்ளியில்தான் , 

  +2வில் மாநிலஅளவில் முதல் இடம் பிடித்த  உங்க பொண்ணும் 

படிக்குதா ?''

            ''இல்லே ,வேற ஸ்கூல் ! ''

          ''அதானே பார்த்தேன் ,நல்லா  சொல்லி தர்றதுக்கு 


உங்க  ஸ்கூல்லே யாரும் இல்லையே !''



தூளி அசைந்தால் தாயின் தூக்கம் ?

தூளியில் தூங்கும் குழந்தை 
தாய்க்கு தந்தது ...
ஒரு துளி தூக்கம் !
  1. திண்டுக்கல் தனபாலன்Mon Jun 02, 07:34:00 a.m.
    ஷேர் சே...?




    1. ஹர்சத் மேஹ்தாவை பற்றி கேள்விபட்டபவர்களுக்கு ஷேர் மார்க்கெட் சேச் சே மார்க்கெட்தான் !
    2.  Mythily kasthuri renganMon Jun 02, 05:08:00 p.m.
    3. 1. :)))) 2. :((( 3. !!!!!!!
    4. 1.ஷேரில் பணம் போடாததால் இந்த சிரிப்பா ?
      2.டீச்சர் என்பதால் இந்த முகச்சுளிப்பா ?
      3.இது எனக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியமா இருக்கா ?


23 comments:

  1. 01. இப்படியுமா கேட்பான்
    02. சேர்ல உட்கார வச்சு கரண்டு ஷாக் கொடுத்துப்பார்த்தால் சரியாகிடும்னு நினைக்கிறேன்.
    03. நானும் இதத்தான் நினைச்சேன்
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
  2. தூ (து) ளித் தூக்கம் சூப்பர்.

    ReplyDelete
  3. ரசித்தேன்...தம 1

    ReplyDelete
  4. தூளி அசைந்தால் - ஒரு
    துளி தூக்கமாவது
    தாயிற்கு!

    ஷேர் லாக்
    லிப் லாக்
    நல்லாயிருக்கே

    ReplyDelete
  5. ஹை!! இனிக்கும் என் கமென்ட் வந்திருக்கே!!

    லிப் லாக்கா , அந்த பொண்ணுக்கு தில்லு பத்தல கொடுக்குற குடுல அவன் ஹிப் பிரேக் ஆகிருக்கவேணாம்!

    ReplyDelete
  6. Mythily kasthuri rengan ji >>
    ஆமாம் அது என்னைக்கும் இனிக்கும் உங்க கமெண்ட்தான் :)

    சரி ,அதுதான் வேணாம் ,ஒரு மிளகாய் பொடி பாக்கெட்டைஅவன் கண்ணில் தூவியிருக்க வேண்டாமா ?இந்த காலத்தில் இப்படியா அஞ்சுவது :)

    ReplyDelete
  7. ஸ்ரீராம். ஜி >>
    இந்த லாக்கை அப்பன்காரனிடம் கேட்டிருக்க வேண்டியதுதானே :)

    ReplyDelete
  8. யாழ் பாவாணன் ஜி >>
    ஷேர் லாக்
    லிப் லாக்
    நல்லாயிருக்கே
    உண்மையைச் சொல்லுங்க ,அதைவிட இதுதானே நல்லாயிருக்கு :)

    ReplyDelete
  9. லாக்குக்கு அனுப்ப வேண்டியது தான்...!

    ReplyDelete
  10. சுவைத்தேன்!

    ReplyDelete
  11. வயசுப் பொண்ணைக் கடையில் இருக்கச் சொன்னா வியா...பாரமும்கூடும் அதோடு.லிப் 'லாக் ' கேட்பதும் நடக்கும்.தானே.........

    ReplyDelete
  12. லிப் லாக்கும் வாங்கக் கிடைக்கும் என்று அவர் ஏன் நினைக்கவேண்டும் ?

    ReplyDelete
  13. G.M Balasubramaniam ஜி>>
    தனியாய் பொண்ணைப்பார்த்ததும் அவன் வயசுதான் அப்படி நினைக்க வைத்திருக்கும் :)

    ReplyDelete
  14. திண்டுக்கல் தனபாலன் ஜி >>
    அவன் கேட்டதோ லிப்லாக் ,கிடைத்ததோ லாக் அப் .....இந்த டயலாக் நல்லாயிருக்கே :)

    ReplyDelete
  15. அப்படி ஒரு ப்ராண்ட் லாக் இருக்கும்னு அந்தப் பையன் நினைச்சுட்டானோ என்னமோ....லிப் லாக்...ஹஹஹ

    ஷேர் மார்க்கெட்-ஷேர் ஆட்டோ...ஹஹஹ் நல்ல வார்த்தை விளையாட்டு!!!!

    ஸ்கூல் டீச்சர்...ஹஹஹ் ஆனா நம்ம வலைல நிறைய நல்ல டீச்சர்ஸ் இருக்காங்க ஜி! ஆனா அவங்ககிட்டதான் கேக்கணும் அவங்க பசங்க எங்க படிக்கறாங்கனு....ஹ்ஹ்ஹ்


    ReplyDelete
  16. லாக்கப் என்று சொல்லலாம் என்று பார்த்தால் முன்பே பின்னூட்டத்தில் போட்டுவிட்டீர்களே!


    அருமை பகவானே! ( லாக்கப்பில் போட்டது அல்ல)

    ReplyDelete
  17. வணக்கம்
    ஜீ
    அனைத்தும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. உமையாள் காயத்ரி ஜி >>
    தாயின் தூக்கம் அப்படித்தானே :)

    ReplyDelete
  19. வெட்டிப்பேச்சு>>>
    நீங்கள் போட்டிருப்பதும் போட்டும் கவிதை எழுதலாமோ :)

    ReplyDelete
  20. KILLERGEE>>
    இந்த தைரியம் வரக் காரணம் ,கல்லாவில் அப்பன்காரன் இல்லாததுதான் :)

    பயம் மட்டுமா போகும் :)

    நீங்க நினைச்சதை நான் நினைச்சேனா:)

    துளி தூக்கம் என்றாலுமா :)

    ReplyDelete
  21. துளசிதரன் ஜி >>
    அப்படி ஒரு ப்ராண்ட் லாக் இருக்கும்னு அந்தப் பையன் நினைச்சிருந்தா,அப்பன்காரனிடம் கேட்டிருக்கலாமே :)

    ReplyDelete
  22. ஊமைக் கனவுகள் விஜூ ஜி >>
    பேக் அப் செய்து விட வேண்டியதுதானே :)

    ReplyDelete
  23. சிறப்பு பகிர்வுக்கு வந்து சிறப்பித்தமைக்கு நன்றி :)

    ReplyDelete