ஆறடி நிலமே சொந்தமடா :)
''உங்க வீட்டுக் கோழி செத்துப் போச்சா ,அதைப் புதைக்கவா இவ்வளோ பெரிய குழி வெட்டுறீங்க ?''
இந்த டயலாக்கில் எனக்கு உடன்பாடில்லை :)
'' 'பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும்
'டயலாக் நடிகை சோனம் கபூருக்கு ரொம்ப பிடிக்கும்
போலிருக்கா ,ஏன் ?''
''தனக்கு வர்ற கணவன் தனுஷ் மாதிரி
இருக்கணும்னு சொல்லி இருக்காங்களே !''
'டயலாக் நடிகை சோனம் கபூருக்கு ரொம்ப பிடிக்கும்
போலிருக்கா ,ஏன் ?''
''தனக்கு வர்ற கணவன் தனுஷ் மாதிரி
இருக்கணும்னு சொல்லி இருக்காங்களே !''
சினிமா கவர்ச்சி யாரை விட்டது ?
சினிமாவின் வலிமை அபரிமிதமானது ...
'திரைப் படச் சுருளை தீக்குச்சிகளுக்கு தின்னக் கொடுப்போம் 'என்ற
கோபக்கார கவிஞனைக் கூட பாடல் எழுதவைத்து
தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் !
ஜெ பாண்டியன்Mon Jun 09, 11:57:00 p.m.
உண்மைதான்...அதே கவிஞர் சமீபத்தில் எழுதிய பாடல் வரிகள்...
"" இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்க்கை டவ்வு""
ஆயிரம் தயாரிப்பாளர்கள் துரத்தியிருந்தால் பாரதி கூட
""லவ்வுன்னா லவ்வு
மண்ணண்ண ஸ்டவ்வு "" ன்னு எழுதியிருப்பார்னு எங்கயோ படிச்சா ஞாபகம்..
"" இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்க்கை டவ்வு""
ஆயிரம் தயாரிப்பாளர்கள் துரத்தியிருந்தால் பாரதி கூட
""லவ்வுன்னா லவ்வு
மண்ணண்ண ஸ்டவ்வு "" ன்னு எழுதியிருப்பார்னு எங்கயோ படிச்சா ஞாபகம்..
Bagawanjee KA ன் இன்றைய மறுமொழி ..
மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை ,மனிதன் மீது மண்ணுக்கு ஆசை ,மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது என்று தத்துவம் சொன்னவரும் அவர்தான் :)
|
|
Tweet |
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஜீ :)
ReplyDeleteஆறடி நிலம் என்றாலே சிந்திக்க வைத்துவிடுகிறதே:)
Deleteசினிமா பாடல்கள்... - காசே தான் கடவுளடா!
ReplyDeleteகாசேதான் கடவுளடா என்பதில் தவறில்லை .....அது கடவுளுக்கும் இது தெரியுமடா என்று கேலி பேசும் அளவிற்கு ,இருப்பவனுக்கு அருகிலும் ,காசில்லாதவனுக்கு தூரத்திலும் காட்சிஅளிப்பது கடவுளுக்கு நியாயமா :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
கோழி சாப்பிட்டால் இதுதான் விதி போல.... .. மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திருட்டுக் கோழிதான் ருசி என்று வாழ்பவர்களுக்கு இந்த விதிதான் பொருந்தும் :)
Delete1. ஐயோ... ப்ளேடு தாங்கலையே... சாப்பிட்டவர் என்ன அகத்தியரா, கோழிதான் என்ன வாதாபியா!
ReplyDelete2. அவ்வளவு ஒல்லியா ஒரு ஆளை ஏன் ஹெடறாங்க?
3. ஓஹோ.... அப்படியா? சரி, யாரந்தக் கவிஞர்?
1.கோழியே வெளியே வா என்றால் நடக்கப் போவதில்லை ,அதான் இப்படி :)
Delete2.தமிழ் பட வாய்ப்புக்கு இப்படி ஐஸா :)
3.இன்னுமா தெரியலே :)
1. கொலை...?
ReplyDeleteஇந்த கொலையில் எனக்கு முற்றிலும் எனக்கு உடன்பாடு :)
Deleteமண்ணும் மனிதனும்! உண்மைதானே!
ReplyDeleteஉண்மைதான் ,ஆனால் எழுதியவர் புரிந்து கொண்ட மாதிரி தெரியலியே :)
Deleteகடைசி டாப்
ReplyDeleteகடைசி கருத்துரைதானே :)
Delete01.கோழியைத் தின்னதுக்கு கொலையா ? இது எந்த ஊருல நடக்குது இந்த (அ)நியாயம் ?
ReplyDelete02. இவளுக்கு யாரைப்புடிச்சு என்ன ஆகப்போகுது ஒரு வருஷத்துக்கு எதுக்கு இதெல்லாம் ?
03. ஜெ. பாண்டியனின் கருத்துரை உய்யலாலா
1 திருட்டுக்கு இந்த தண்டனைக் கொடுக்கலாமே :)
Delete2 ஒரு வருஷம் கூட தாக்கு பிடித்தால் மகிழ்ச்சிதான் :)
3 வேண்டி நின்ற ஜோக்காளிக்கும் உய்யலாலா :)
அய்யோடா, என்ன கொடுமை சாமி, ஒரு சின்ன கோழிக்கா,,,,,
ReplyDeleteஅனைத்தும் அருமை. நன்றி.
ஒரு சின்ன கோழிக்கா,,,எவ்வளவு பெரிய குழி :)
Deleteசூப்பர் நகைச்சுவைகள்! அருமை!
ReplyDeleteவலை தடைக் காலம் முடிந்தபின் , வந்து கருத்து சொன்னதற்கு நன்றி :)
Deleteமுதல் ஜோக்க படிச்சதுக்கப்பறம் கோழி சாப்டவெ பயமா இருக்கு ஜீ...
ReplyDeleteகவிஞரப்பத்தி சொல்லியிருக்கீங்க.. இதுதான் காலத்தின் கட்டாயம்.
Nice.
God Bless You
திருட்டுக் கோழியை அவனவன் ரசிச்சு சாப்பிடுறான் ,நீங்க என்னடான்னா :)
Deleteநாய் விற்ற காசு குரைக்காது ...இப்பவாவது புரிஞ்சுதே :)
அருமை லவ்வு டவ்வுதானே :)
ReplyDeleteஹஹாஹ் ஜோக் அருமைனா அந்தப் பின்னூட்டம் சூப்பர்!
ReplyDeleteஅந்த பெருமைக்குரிய ஜெ.பாண்டியன் ஜி எங்கே போனார் ?உடன் மேடைக்கு வரவும் :)
Delete