18 June 2015

சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் :)

---------------------------------------------------------------------------------

இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் ?

             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''

            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நம்புகிறவன் நான்  !''


எளனியிலே நிறைய தண்ணி இருக்கணும்னு ஆர்டர் ,ஏன் ?

            ''நம்ம கணேஷ் வழுக்கை தலையால் நமக்கு ஒரு வகையிலே  லாபமா ,எப்படி ?''

          ''இளநீர் குடிக்கப் போனா 'நல்ல வழுக்கையா வெட்டுங்க 'ன்னு  சொல்ல விடாமல் , அவனே ஆர்டர் பண்ணிடுறானே !''





சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் !

வேறெந்த நிறத்தைவிட ...
வெகுதூரத்திலும்  தெரியும் 'மஞ்சள் 'மகிமை யை ...
நமது முன்னோர்கள் உணர்ந்துதான் 
தாலிக் கயிறில்  மஞ்சள் பூசினார்களோ ?


  1. KILLERGEE DevakottaiWed Jun 18, 09:09:00 p.m.
    இதைப்படிக்கிற வழுக்கை தலைக்காரர்கள் இளநீர் கடைபோனால் தங்களது ஞாபகம் கண்டிப்பாக வரும்.




    1. யாரையும் புண் படுத்துவது என் நோக்கமல்ல ..just fun ,pl.take it easy!

23 comments:

  1. 01. ஒரு கை இல்லாதவங்க என்ன செய்யிறது
    02. இனி கணேஷைத்தான் பிடிக்கனும்
    03. உங்கள் தளம் கூட இந்த நிறம்தானே,,,

    ReplyDelete
    Replies
    1. எந்தக் கை என்று சொல்லுங்கள் ,யோசிக்கலாம் :)

      உங்க ஊர்லதான் எளனி பேக்கிங்கில் கிடைக்குமாமே :)

      என் தளத்திற்கு இரண்டு நிறம் :)

      Delete
  2. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு என்றால் உதவி செய்வோர்
    உதவி செய்த பின்
    உதவி செய்தேன் உதவி செய்தேன் என்று
    சொல்லிக்காட்டக்கூடாது என்பதே!

    தங்கள் தளம்
    http://tamilsites.doomby.com/ இல்
    இணைக்கப்பட்டு விட்டது!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா,சரியான விளக்கம் சொன்ன யாழ்பாவணனுக்கு ,எல்லோர் சார்பிலும் ஓ :)

      Delete
  3. என்ன கொள்கைப் பிடிப்பு!

    என்ன ஒரு முன் எச்சரிக்கை!

    ம்.........

    ReplyDelete
    Replies
    1. உங்களையும் வியக்க வைத்து விட்டாரா :)

      பீரோ கூட உடையக் கூடாது என்பதாலா இந்த எச்சரிக்கை :)

      மூன்றாவது எப்போதும் நீங்கள் ம்....மட்டுமே சொல்லும் படியாய் அமைந்து விடுகிறதே :)

      Delete
  4. மஞ்சளுக்கு இப்படி ஒரு செய்தி உள்ளதோ?

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள்நிறம் வெகு தூரத்திலும் தெரிவதால் தானே பள்ளி ,கல்லூரி பேருந்துகளிலும் அடிக்கப் படுகிறது :)

      Delete
  5. Replies
    1. கலியுக கண்ணன் :)

      Delete
  6. வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது. இடது கையும் பிச்சை போட முன்வந்துட்டா என்ன பண்றது.ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. தாராள மனதை வரவேற்கலாம் :)

      Delete
  7. தங்கள் தொல்லை சாரி தொலைநோக்கு பார்வை அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாத்துக்கு, சாரி.. வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  8. அனைத்தும் பிடித்தன!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ரசனைக்கு நன்றி:)

      Delete
  9. Replies
    1. உங்களின் ரசனைக்கு நன்றி:)

      Delete
  10. நல்ல கொள்கை தான்.. ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. உயிரோடு இருக்கும் வரை அந்த கொள்கையை அவர் கடைப் பிடிக்கட்டும் :)

      Delete
  11. மஞ்சளைவிட சிவப்பு நிறமே வெகு தொலைவுக்கு தெரியும். அதனால் தான் அபாயமானவைகளுக்கு சிவப்பு நிறத்தை கொடுத்தார்கள். சிக்கனலில் சிவப்பு விளக்கை வைத்ததும் இதற்காககதான் ஜி! இது விஞ்ஞானம்.
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. வறுமையின் நிறம் சிகப்பு என்றும் சொல்கிறார்கள் :)

      Delete
  12. ''..'மஞ்சள் 'மகிமை யை ...
    நமது முன்னோர்கள் உணர்ந்துதான்
    தாலிக் கயிறில் மஞ்சள் பூசினார்களோ ?....
    சைட் அடிக்காதே ...எச்சரிக்கும் நிறம் !
    இது நல்லாயிருக்கு
    பிடித்திருக்கு....

    ReplyDelete