இங்கே எல்லோரும் ஓரினம்தான் :)
''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும் பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு எப்படிச் சொல்றீங்க ?''
''ரயிலைப் பிடிக்கணும்ன்னா வேற வழியில்லையே !''
ஜொள்ளும் சொல்லுமோ செல்லும் இடத்தை ?
''கண்டக்டர் ,நான் இறங்கப் போற இடத்தை சொல்லவே இல்லை,ஆனால் சரியா எட்டு ரூபாய் டிக்கெட் கொடுக்கிறீங்களே ,எப்படி ?''
''முன்னாடி நிற்கிற சுடிதார் போட்ட பொண்ணை நீ பார்க்கிறப் பார்வையிலேயே தெரிஞ்சிப் போச்சே !''
அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாமா ?
''ஏன் டாக்டர் ,ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட்ன்னு சொல்றீங்க ?''
''ஆபரேஷனில பொழச்சுக்கிட்டவரு.பில்லைப்
பார்த்ததும் போய் சேர்ந்து விட்டாரே !''
சிறிய வயதில் காது குத்திய போது ...
தோடு வாங்கித் தராமல்
'வெளக்கமாத்து 'குச்சி குத்தி
ஏமாற்றிய அப்பாதான் ...
திருமணத்தின் போது...
மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும்
மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !
தோடு வாங்கித் தராமல்
'வெளக்கமாத்து 'குச்சி குத்தி
ஏமாற்றிய அப்பாதான் ...
திருமணத்தின் போது...
மகளுக்கு தொண்ணூறு பவுன் நகையும்
மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் ,செயின் ,
பிரெஸ்லெட்டும் போட்டு அழகு பார்க்கிறார் !
- King RajWed Sep 10, 09:59:00 p.m.கடைசி 3 ன்றயும் நல்லா கவனித்தீரா?
என்ன?
மூணுக்குமே கணக்கு சம்பந்தம் உள்ளதை.
|
|
Tweet |
ஹிஹி... ஹிஹி...
ReplyDeleteசரிதானே ஜி ,இங்கே வந்துதானே ஆகணும் :)
Deleteஎன்னதான் கட்டடம் ஸ்டாராங்க இருந்தாலும் பேஸ்மட்டம் மட்டம்தான்னு சொல்லுங்க...! ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறுங்கிறது சரியாத்தான் போச்சு...! எல்லோருமே பிளாட்பாரம் டிக்கட்டுதான்... ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமாடா...’
ReplyDeleteநாங்கல்லாம் பார்வையிலே கண்டுபிடிச்சிருவோம்மில்ல... நாங்க‘ கண்...’ டக்டர் தெரியுமுல்ல... ஒங்கள மாதரி எத்தனை பேர பாக்கிறோம்... தெரியுமா...?
“மொதல்முறையா ... ஒங்க ஆபரேசன்ல்ல... ஒருத்தர் உயிர் பிழைச்சுக்கிட்டான்னு ... சுவிட் கொடுக்கலாமுன்னு பார்த்தேன்....!
என்னங்க டாக்டர் ... இப்படி கொண்ணுட்டீங்களே...!”
“சந்தோஷத்தில... அவரும் ‘நான் செத்துப் பொழச்சவன்டா...’-ன்னு பாடுனாரு... நானும் அவசரமா... பில்ல காண்பிச்சிட்டேன்...தப்புப் பண்ணிட்டேன்னு இப்பத்தான் ரொம்ப பீல் பண்றேன்...”
“ரொம்பத்தான் பீல் பண்ணாதீங்க... எப்பவாவது சரியா எதையாவது பண்ணியிருக்கீங்கலான்னு யோசிச்சுப் பாருங்க...!”
அப்போ வளரும் நாடு... இப்ப வளர்ந்த நாடாயிடுச்சு... வல்லர ‘சாகப்’ போவுதுல்ல... அத்‘தோடு’ விட்டாரே... வௌக்கமாத்த எடுக்காம...!”
த.ம.1
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும்இடங்களில் இதுவும் ஒன்று :)
Deleteகண் டாக்டருக்கு கூட இருக்குமா இந்த மோப்ப சக்தி :)
அநியாயமா ஒரு உயிரைக் கொன்னுட்டாரே:)
வெளக்கமாத்த எடுத்தா ,விவகாரம் இத் 'தோடு 'முடியாதே :)
தோடு நகைச்சுவை, நகைச்சுவையோடு யதார்த்தத்தை உணர்த்தியது.
ReplyDeleteபெண் பிள்ளைங்க மேலேதான் தகப்பன்மார்களுக்கு பாசம் அதிகமாய் இருக்கும் போலிருக்கே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteநன்றி
தம 4
ரசித்தது, வெளக்குமாறு காதணியைதானே :)
Deleteவணக்கம்,
ReplyDeleteடிக்கெட் கொடுத்தது உங்களிடம் தான் என்று,,,,,,,,,,,,,
அனைத்தும் அருமை,,,
ஊரில் பேசிக்கொள்வார்கள் ஆயிரத்தை :)
Delete/ கடைசி 3 ன்றயும் நல்லா கவனித்தீரா?
ReplyDeleteஎன்ன?
மூணுக்குமே கணக்கு சம்பந்தம் உள்ளதை/ எழுதியவர் எண்ணாததையும் வாசிப்பவர் நினைக்கின்றனர்.டாக்டருக்குப் பணம் வந்தால்தானே ஆப்பரேஷன் சக்சஸ்.
உரை எழுதுபவர்களின் ரசனையே தனிதான் :)
Deleteபணத்தை வாங்காமல் பொணத்தை தரமாட்டாரே :)
ரசித்தேன் அனைத்தையும்!
ReplyDeleteபடமும் ஜோர்தான் இல்லையா :)
Deleteஹாஹாஹா! அட்டகாசமான ஜோக்ஸ்!
ReplyDeleteநான் தோடு விடுவதை ரசிக்க முடியுதா :)
Deleteசத்திர சிகிச்சை (ஆபரேஷன் சக்சஸ்) வெற்றி
ReplyDeleteஆனால்
சிட்டையைப் (பில்லைப்) பார்த்ததும்
ஆளோ
போய் சேர்ந்து விட்டாரே!
இது
மருத்துவரின் சாதனையா?
சுத்தத் தமிழில் எழுதினால் கவிதை போலிருக்கே :)
Delete01. அடடே சமத்துவபுரம்
ReplyDelete02. கண்டக்டர் கணக்கு சரிதான்.
03. இதுக்கு டாக்டர் பொருப்பாளி இல்லையே அவர் தன் கடமையை செய்துட்டார்.
04. எவ்வளவு காலம்தாண் ஏமாற்ற முடியும் ஜி
சமத்துவ புரத்தில் நுழைய கட்டணம்தான் ஜாஸ்தி :)
Deleteஅது அவருக்கு மனக் கணக்காச்சே :)
இதுக்கு அடித்தே கொன்று இருக்கலாம் :)
ஏமாறவும் பிள்ளைங்க தயாராய் இல்லையே:)
கணக்காய் டிக்கெட் கொடுப்பவரின் அனுபவம் பேசுகிறது...
ReplyDeleteஅவரும் ஒரு காலத்தில் 'கணக்கு ;பண்ணியவர்தானே :)
Deleteவணக்கம் சார், புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி
ReplyDeleteவருகையை பதிவு செய்யாதவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுங்கள் ,அதில் நியாயம் இருக்கும் ,உங்களுக்கும் நேரம் மிச்சமாகும் :)
Deleteஜொள்ளும்,ஜொள்ளும்!
ReplyDeleteகூடவே ஜொள்ளனும்:)
Deleteரசித்தோம் அனைத்தையும்...
ReplyDeleteநடத்துனரின் அனுபவம் உண்மைதானே :)
Deleteவெளக்குமாத்து குச்சி உண்மை .
ReplyDeleteவெளக்குமாத்து குச்சி உண்மை,அது மாறியதும் உண்மைதானே :)
Delete