3 September 2015

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை:)

---------------------------------------------------------------------------------------------------------

 கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியிருக்குமா :)           

           ''என்னடி சொல்றே ,குண்டான உன்னை உன் வீட்டுக்காரர் கிண்டல் பண்றாரா ,எப்படி ?''

           ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''

இவர்  நல்லபடியா டிஸ்சார்ஜ் ஆவாரா ?

          ''டாக்டர் ,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு !''

         ''எது ?''
                      
        ''நர்ஸை நீங்க மட்டும் சிஸ்டர்னு கூப்பிட 

மாட்டேங்கிறீங்களே !''

தலைவருக்கு தெரிஞ்சதெல்லாம் அவர் கட்சிக் கொடிதான் !

             ''கோவில் விழாக் கொடியேற்ற ,அரசியல்வாதியைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ,கேட்டீங்களா ? ''
          ''என்னாச்சு ?''
             ''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்கார் !''

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை !

காவல் இல்லையென்றால் ...
காய்ச்ச மரம்கூட கல்லடி படும் 
கன்னிப்பெண் கண்ணடி படுவாள் !

KILLERGEE DevakottaiWed Sep 03, 12:11:00 a.m.

  1. 01. அந்த பேசண்டோட கடைசி ஆசையை நிறைவேத்தி வைக்கச்சொல்லுங்க... டாக்டரை இப்படி கேட்கலாமா ?

    02.கொடி காத்த குமரன் பரம்பரையில வந்தவரோ...

    03.இப்ப உள்ளபெண்ணு கல்லு எடுத்து அடிக்கிறாளே...
    1. டாக்டர் நர்சை பெண்டாட்டியைக் கூப்பிடுற மாதிரி நோயாளிக்கு தோணுதே !

      கேடு கேட்ட பரம்பரையில் வந்தவராய் இருக்கும் !

      அதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும் என்று வாங்கிக் கொள்கிறார்களே !
      நன்றி

30 comments:

  1. ''ரூபாவதிங்கிற அவ பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !
    அவ மானம்.... அவமானமா போச்சு...!”

    “கூப்பிட வேண்டாம்... நர்ஸ்ன்னு கூப்பிடட்டும்...யார் வேண்டான்னது...! டாக்டர் நா சென்னேன்னு அவர்ட்ட சொல்லுங்க சிஸ்டர்.”
    “என்னங்க டாக்டர் அவரு ஒரு பேச்சுக்குத்தான் சொன்னாரு... அதுக்காக ஏ... என்ன சிஸ்டர்ன்னு கூப்பிடுறீங்க... எ இதயமே ஒரு நிமிஷம் நின்னு போனதுமாதரி ஆயிடுச்சு... போங்க டாக்டர் நீங்க ரொம்பத்தான்.......!”

    வாதத்துக்கு மருந்து இருக்கு... பிடிவாதத்துக்கு மருந்து இருக்கா...? இருந்தா தலைவருக்கு ஊத்திவிடுங்க...!

    அடிமேல் அடிவிழுங்கிறது இதுதானோ...? கல்லடிக்கு தப்பிச்சிடலாம்... கண்ணடிக்கு தப்ப முடியாதில்ல...! ரொம்ப கவலையாத்தா இருக்கு...!

    நன்றி.
    த.ம. 1.

    ReplyDelete
  2. ஹா...ஹா...ஹா...

    ஹா...ஹா...ஹா...

    ஹா...ஹா...ஹா...

    ம்ம்ம்....

    ReplyDelete
  3. வணக்கம்
    ஜி
    நல்ல சொல் வினையாட்டு இரசித்தேன்.. த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஹஹஹஹ ரசித்தோம் அனைத்தும்

    கட்சிக் கொடிதான் எல்லா இடத்துலயும்..ஹும்..

    ReplyDelete
  5. ஜி நீங்க எங்கயோ போயிற்றீங்க போங்க நகைச் சுவை சிற்பி என்று பட்டம்
    வழங்கிக் கௌரவிக்கின்றென் வாழ்த்துக்கள் :)))))))))))))))))))

    ReplyDelete
  6. அந்த பெண்ணே அந்த உடலை வைத்துக்கொண்டு அவதி தான் பட்டிருக்கும். இதில இவர்வேற வெந்த புண்ணில் வேலை பாச்சுறார்:((

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை. சிஸ்டர் நகைச்சுவை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  8. கல்லடி பட்டாலும். சொல்லடி பட்டாலும் வலி என்னவோ அந்தப்பெண்ணுக்குத்தான்...

    ReplyDelete
  9. ரூபாவதி ரூப அவதியாகக் காரணம் கர்ப்ப(அ)வதியாகி விட்டாரோ.
    நர்ஸை எப்படி கூப்பிடுகிறார்.?கோவில் விழாவுக்கு ஏதாவது சாமியாரை அல்லவா கூப்பிட்டிருக்கவேண்டும் சீக்கிரமே கல்யாணம் செய்து காவல் ஏற்பாடு செய்து விடவேண்டும் இருந்தும் கண்ணடி படுவதைத் தவிர்க்க முடியுமா.?

    ReplyDelete
  10. Nagendra BharathiThu Sep 03, 04:25:00 a.m.
    அருமை
    Reply>>>>
    அருமை ,ரூபாவதிங்கிற பெயர்தானே :)

    ReplyDelete
  11. manavai jamesThu Sep 03, 06:20:00 a.m.
    ''ரூபாவதிங்கிற அவ பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !
    அவ மானம்.... அவமானமா போச்சு...!”

    “கூப்பிட வேண்டாம்... நர்ஸ்ன்னு கூப்பிடட்டும்...யார் வேண்டான்னது...! டாக்டர் நா சென்னேன்னு அவர்ட்ட சொல்லுங்க சிஸ்டர்.”
    “என்னங்க டாக்டர் அவரு ஒரு பேச்சுக்குத்தான் சொன்னாரு... அதுக்காக ஏ... என்ன சிஸ்டர்ன்னு கூப்பிடுறீங்க... எ இதயமே ஒரு நிமிஷம் நின்னு போனதுமாதரி ஆயிடுச்சு... போங்க டாக்டர் நீங்க ரொம்பத்தான்.......!”

    வாதத்துக்கு மருந்து இருக்கு... பிடிவாதத்துக்கு மருந்து இருக்கா...? இருந்தா தலைவருக்கு ஊத்திவிடுங்க...!

    அடிமேல் அடிவிழுங்கிறது இதுதானோ...? கல்லடிக்கு தப்பிச்சிடலாம்... கண்ணடிக்கு தப்ப முடியாதில்ல...! ரொம்ப கவலையாத்தா இருக்கு...!
    Reply>>
    இதற்கேன் அவ மானம் போகும் :)
    ஒரு பேச்சுக்கு கூட சொல்ல விடமாட்டியே கள்ளி :)
    தலைவருக்கு ஊத்தி விட்டா சரியா போயிடுமா :)
    நேருக்கு நேரா பார்த்தா தானே கண்ணடி விழும் :)

    ReplyDelete
  12. 01. இவள் ரூபவாணி அப்படினு பெயர் வச்சு இருக்கலாம் ரூபா வா நீ அப்படினு செல்லமா கூப்பிட்டு இருப்பாரு...
    02. எனக்கும் இந்த சந்தேகம் 1947 லிருந்தே இருக்குது ஜி.
    03. நல்லவேளை தர்ஹாவுக்கு கூப்பிடலை.
    04. இப்ப கன்னிப்பையன்தான் கல்லடி வாங்குறான்.

    ReplyDelete
  13. KILLERGEE DevakottaiThu Sep 03, 05:20:00 p.m.
    01. இவள் ரூபவாணி அப்படினு பெயர் வச்சு இருக்கலாம் ரூபா வா நீ அப்படினு செல்லமா கூப்பிட்டு இருப்பாரு:)
    02. எனக்கும் இந்த சந்தேகம் 1947 லிருந்தே இருக்குது ஜி.:
    03. நல்லவேளை தர்ஹாவுக்கு கூப்பிடலை.
    04. இப்ப கன்னிப்பையன்தான் கல்லடி வாங்குறான்.
    Reply>>
    இனி மேல் கெஜட்டில் பெயரைத் திருத்திக்கலாமோ :)
    அதென்ன ,1947:)
    அங்கே போய் ,பச்சைக் கொடி ஏற்ற மாட்டேன் என்பாரோ :)
    செய்த காரியத்துக்கு வாங்கித்தானே ஆகணும் :)

    ReplyDelete
  14. ஸ்ரீராம்.Thu Sep 03, 06:28:00 a.m.
    ஹா...ஹா...ஹா...

    ஹா...ஹா...ஹா...

    ஹா...ஹா...ஹா...

    ம்ம்ம்....

    Reply>>>

    அதென்ன கடைசியில் மட்டும் :)

    ReplyDelete
  15. ரூபன்Thu Sep 03, 06:34:00 a.m.
    வணக்கம்
    ஜி
    நல்ல சொல் வினையாட்டு இரசித்தேன்.. த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-
    Reply>>>
    செல் விளையாட்டும் கூட :)

    ReplyDelete
  16. கரந்தை ஜெயக்குமார்Thu Sep 03, 07:09:00 a.m.
    ரசித்தேன் நண்பரே
    தம +1
    Reply>>.
    ரூபாவதியின் பிரமாண்ட ரூபம் தெரியுதா :)

    ReplyDelete
  17. இப்படி பெயரைக் குறிப்பிட்டு பதில் சொன்னால்தான் நமது இன்பாக்ஸிலேயே பதில்களைப் பெறும்போது, இது நமக்கான பதில் என்று தெரிகிறது!

    முதல் மூன்றை ஜோக்ஸாகவும், நான்காவதை நல்லதொரு சிந்தனையாகவும் பார்ப்பேன். அதை ஆமோதிக்கும் வகையில் 'ம்ம்ம்' கொட்டுவேன்!

    ReplyDelete
  18. இப்படி பெயரைக் குறிப்பிட்டு பதில் சொன்னால்தான் நமது இன்பாக்ஸிலேயே பதில்களைப் பெறும்போது, இது நமக்கான பதில் என்று தெரிகிறது!

    முதல் மூன்றை ஜோக்ஸாகவும், நான்காவதை நல்லதொரு சிந்தனையாகவும் பார்ப்பேன். அதை ஆமோதிக்கும் வகையில் 'ம்ம்ம்' கொட்டுவேன்!

    ReplyDelete
  19. இப்படி பெயரைக் குறிப்பிட்டு பதில் சொன்னால்தான் நமது இன்பாக்ஸிலேயே பதில்களைப் பெறும்போது, இது நமக்கான பதில் என்று தெரிகிறது!

    முதல் மூன்றை ஜோக்ஸாகவும், நான்காவதை நல்லதொரு சிந்தனையாகவும் பார்ப்பேன். அதை ஆமோதிக்கும் வகையில் 'ம்ம்ம்' கொட்டுவேன்!

    ReplyDelete
  20. Thulasidharan V ThillaiakathuThu Sep 03, 09:32:00 a.m.
    ஹஹஹஹ ரசித்தோம் அனைத்தும்

    கட்சிக் கொடிதான் எல்லா இடத்துலயும்..ஹும்..
    Reply>>
    அவர் பொழப்பே அதிலேதானே ஓடுது :)

    ReplyDelete
  21. அம்பாளடியாள்Thu Sep 03, 10:16:00 a.m.
    ஜி நீங்க எங்கயோ போயிற்றீங்க போங்க நகைச் சுவை சிற்பி என்று பட்டம்
    வழங்கிக் கௌரவிக்கின்றென் வாழ்த்துக்கள் :)))))))))))))))))))
    Reply>>>
    வர்ற வலைப் பதிவர் விழாவில் வைத்து தந்தால் பட்டத்தை ஏத்துக்குறேன் :)

    ReplyDelete
  22. Mythily kasthuri renganThu Sep 03, 10:37:00 a.m.
    அந்த பெண்ணே அந்த உடலை வைத்துக்கொண்டு அவதி தான் பட்டிருக்கும். இதில இவர்வேற வெந்த புண்ணில் வேலை பாச்சுறார்:((
    Reply>>
    நோகடித்தால் ,உடம்பு துரும்பா இளைத்துவிடும்னு நினைக்கிறாரோ :)

    ReplyDelete
  23. Dr B JambulingamThu Sep 03, 10:48:00 a.m.
    அனைத்தும் அருமை. சிஸ்டர் நகைச்சுவை அதிகம் ரசித்தேன்.
    Reply>>.
    கவனித்து இருக்கிறீர்களா ,டாக்டர்கள் நாம் விஷ் செய்தாலும் திரும்பச் செய்ய மாட்டார்கள் :)

    ReplyDelete
  24. வலிப்போக்கன் -Thu Sep 03, 12:34:00 p.m.
    கல்லடி பட்டாலும். சொல்லடி பட்டாலும் வலி என்னவோ அந்தப்பெண்ணுக்குத்தான்...
    Reply>>>
    முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான் என்று சொல்லி இருக்கிறார்களே :)

    ReplyDelete
  25. G.M BalasubramaniamThu Sep 03, 02:57:00 p.m.
    ரூபாவதி ரூப அவதியாகக் காரணம் கர்ப்ப(அ)வதியாகி விட்டாரோ.
    நர்ஸை எப்படி கூப்பிடுகிறார்.?கோவில் விழாவுக்கு ஏதாவது சாமியாரை அல்லவா கூப்பிட்டிருக்கவேண்டும் சீக்கிரமே கல்யாணம் செய்து காவல் ஏற்பாடு செய்து விடவேண்டும் இருந்தும் கண்ணடி படுவதைத் தவிர்க்க முடியுமா.?
    Reply>>.
    அழகை தியாகம் செய்து பிள்ளையை வளர்க்கும் மனைவியை போற்றுவதை விட்டு விட்டு ,கோளாறு சொல்றானே இவனெல்லாம் கணவனா :)
    ஷ் ஷ் ன்னு கூப்பிடுவாரோ :)
    அரசியல்வாதிகளை அழைத்து தர்ம கர்த்தாக்கள் வாழ்கிறார்கள் :)
    வேலையில் கருத்தாய் இருந்தால் கண்ணடி என்ன செய்துவிடும் :)

    ReplyDelete
  26. ஸ்ரீராம்.Fri Sep 04, 11:03:00 a.m.
    இப்படி பெயரைக் குறிப்பிட்டு பதில் சொன்னால்தான் நமது இன்பாக்ஸிலேயே பதில்களைப் பெறும்போது, இது நமக்கான பதில் என்று தெரிகிறது!

    முதல் மூன்றை ஜோக்ஸாகவும், நான்காவதை நல்லதொரு சிந்தனையாகவும் பார்ப்பேன். அதை ஆமோதிக்கும் வகையில் 'ம்ம்ம்' கொட்டுவேன்!
    Reply>>>
    மூன்று ம் மை நீங்க ஓர் தடவை சொன்னால் கூட மூன்று தரம் விளக்கமாய் வருதே ,புரிந்தது ஸ்ரீ ராம் ஜி :)

    ReplyDelete
  27. இப்படி பெயரைக் குறிப்பிட்டு பதில் சொன்னால்தான் நமது இன்பாக்ஸிலேயே பதில்களைப் பெறும்போது, இது நமக்கான பதில் என்று தெரிகிறது!

    முதல் மூன்றை ஜோக்ஸாகவும், நான்காவதை நல்லதொரு சிந்தனையாகவும் பார்ப்பேன். அதை ஆமோதிக்கும் வகையில் 'ம்ம்ம்' கொட்டுவேன்!

    ReplyDelete
  28. :ம் ம் .நடக்கட்டும் :)

    ReplyDelete