20 September 2015

இப்பவுமா துணை வருவாள் துணைவி :)


  நமது முன்னோர் சொன்னது அர்த்தமுள்ளது :)      
         '
            'இமய மலைக்கு போயிட்டு வந்தீங்களே ,என்ன தெரிஞ்சிகிட்டீங்க ?''
            ''அவ்வளவு உயரத்திலும் தவளை இருக்கிறதைப் பார்த்தேன் ,நம்மாளுங்க 'கிணற்றுத் தவளையாய் இருக்காதே 'ன்னு  சொல்லி இருக்கிறது சரிதான் !''


நொந்து நூடுல்ஸ் ஆனவர், ,நூடுல்ஸ் ஸ்டால் போடலாமே:)                                                                              

            ''புத்தகத் திருவிழாவில் ,அந்த பதிப்பாளர் போட்ட புத்தகம் விற்கலைன்னு எப்படி சொல்றே ?''
           ''அடுத்த வருடம் புத்தக ஸ்டாலுக்கு பதில் டெல்லி அப்பள ஸ்டால் போடப் போறேன்னு சொல்றாரே !''
இப்பவுமா  துணை வருவாள் துணைவி  :)
            ''உங்க வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
         ''சனி பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது 
இது நீதித் துறையின் அடிப்படை அம்சம் !
காவல் துறையில் உள்ள கறுப்பாடுகள் இதை சுயநலத்திற்காக வேறுவிதமாக புரிந்து கொண்டு செயல் படுவார்களோ ?
ஆயிரம் குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
மாட்டிக் கொண்ட ஒரு குற்றவாளியை தப்பிக்க வைத்தால் என்ன குடிமுழுகியா போய்விடும் என நினைத்து  ...
கிரிமினல்களையும் ,பயங்கரவாதிகளையும்  தப்ப விடுகிறார்களோ !



  1. 01. வியாபாரம் சூடுபுடிச்சு பறக்குறதுக்கா ?

    02. டாக்டர் மேல இவ்வளவு நம்பிக்கையா ?

    03. மாற்று சிந்தனையை வரவேற்போம்.




    1. 1.நம்ம ஊர்லே எழுதி ,பதிப்பித்து சம்பாதிப்பதே விட டெல்லி அப்பளம் சுட்டு நிறையவே சம்பாதித்து விடலாம் போலிருக்கே :)
      2.இருக்காதா பின்னே ,கைராசியான டாக்டராச்சே ?:)
      3.நல்லவேளை மாமூலை வரவேற்போம் என்று சொல்லலே :)

31 comments:

  1. "
    ''உங்க வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
    ''சனி பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''
    " என்று என் பெண்டாட்டி சொல்லேல்ல
    அதற்காக
    அடுத்தவர் பெண்டாட்டி சொல்லமாட்டாள்
    என்று நான் சொல்ல மாட்டேன்!

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    ReplyDelete
  2. Nagendra Bharathiji>>.
    சனி பிணம் இப்படி செய்யும் என்பதை நம்ப முடியுதா ?

    ReplyDelete
  3. ‘கிணற்றுத் தவளையாய் இருக்காதே 'ன்னு சொன்னது கேட்டிடுச்சு போல இருக்கு... சொன்னபடி கேட்டு மலையேறிடுச்சு...அந்த காலம் மலையேறிப் போயிடுச்சு... மொத மொதல்ல எவெரெஸ்ட்ட தொட்டது நம்ம தவளையாருன்னு சொல்லுங்க...! ‘தண்ணீ கருத்திருக்கு... தவளை சத்தம் கேட்டிடுச்சு...’

    நூல் வித்து பிழைக்க முடியாதுங்கிறதுதான்... சின்ன பிள்ள கேட்டாலும் தெரியுமே...! ஆளும் வளந்தா மட்டும் போதுமா......? கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா...? டில்லி அப்பளமா... ?அப்புறம் அமெரிக்கா அப்பளமுன்னு போட்ட நல்லா விற்கும்...!


    “சனியன் பிடிச்சிருச்சுன்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல...டாக்டர்...!‘‘
    ‘‘இதுல ‘சதி’ ஒன்னும் இப்ப இல்லையேம்மா... ஒன்ன யாரும் உடன்கட்டை நெருப்புல தூக்கி போட்டிட முடியாதில்ல...பயப்படாதம்மா... நா இருக்கேன்...!‘‘
    “நீங்கதான் பயத்துக்கு காரணமே...!”


    இனிமே ஆயிரத்தொரு குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...ஒரு குற்றவாளியும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது ...இது நீதித் துறையின் அடிப்படை அம்சமுன்னு மாத்திட வேண்டியதுதானே !

    த.ம.4






    ReplyDelete
  4. வெங்கட் நாகராஜ் ஜி >>.
    நீங்கள் டெல்லியில் இருப்பதால் டெல்லி அப்பளம் பிடித்து இருக்குமே :)

    ReplyDelete
  5. manavai james ஜி >>.
    தவளைக்கு புரியுது ,மனுஷனுக்கு புரிய மாட்டேங்குதே:)

    தையல் நூலைக் கூட விற்றுப் பிழைத்து விடலாம் ,ஆனால் ....:)

    இந்த பயம் இருக்கணும் :)

    அப்படித்தான் மாறிகிட்டு வருது ,நீதி பரிபாலனம் :)

    ReplyDelete
  6. அனைத்தும் நன்று. சனிக்கிழமை துணைக்கு அழைக்கும் நகைச்சுவை மிக அருமை.

    ReplyDelete
  7. Jeevalingam Yarlpavanan Kasirajalingam ஜி >.>.
    உங்க தன்னிலை விளக்கம் அருமையோ அருமை :)

    ReplyDelete
  8. Dr B Jambulingam ஜி >>
    இன்னிக்கு ஞாயிறு ,அவங்க நேற்று செத்திருந்தா ,இன்னைக்கு பால் ஊற்றி இருப்பார்கள் :)

    ReplyDelete
  9. னவர் விட்டுச் செல்லும் பணிகளை செய்ய மனைவியைத்தவிர யார் இருக்கா.... இதிலிருந்தே தெரிய வேணாம் பாசமுள்ள மனைவி என்று..

    ReplyDelete
  10. கிணறு அல்லது இமயமலை.?அப்பளம் வாங்குவோருக்கு புத்தகம் இனாம் அல்லது புத்தகம் வாங்குவோருக்கு அப்பளம் இனாம் என்றால் இரண்டுமே வித்து போகலாம். ஆபரேஷன் என்றால் சாவுதானா. பயமுறுத்துகிறீர்களே. மாட்டிக் கொண்டவன் குற்ற வாளி என்று நிரூபிக்க வேண்டுமே.

    ReplyDelete
  11. அனைத்தும் அருமை,,,
    பெண் இல்லன உங்களுக்கு ஜோக்கே இல்லை, இல்லையா ஜீ,,,,,,,,,

    ReplyDelete
  12. 01. புல்லரிக்குது ஜி
    02. பிழைக்கத் தெரிந்தவர்..
    03. முடிவே பண்ணிட்டாளோ...
    04. நல்லதுதான்.

    ReplyDelete
  13. வலிப்போக்கன் ஜி >>.
    இது புருசனுக்கு தெரிய மாட்டேங்குதே :)

    ReplyDelete
  14. G.M Balasubramaniam ஜி >>.
    ஆமாம் அடி முதல் முடி வரை :)
    நல்ல யோசனை :)
    நேற்றும் இப்படித்தான் சொல்லி இருந்தீர்கள் ,பயத்தைக் கில்லி எறியுங்கள் :)
    நானில்லை குற்றவாளி என்றுதானே நிரூபிக்கணும் :)

    ReplyDelete
  15. mageswari balachandran ஜி >>.
    என்னில் பாதி இல்லாமல் நான் முழுமை அடைய முடியாதே :)

    ReplyDelete
  16. ‘தளிர்’ சுரேஷ் ஜி >>
    டெல்லி அப்பளம் போலவா :)

    ReplyDelete
  17. தவளை நாயர் டீக்கடை போல!

    ஜோக் இல்லை, எல்லாப் புத்தகங்களையும் விட அதிகம் விற்பது சமையல் புத்தகங்கள்தானாம்.

    என்னவொரு நல்லெண்ணம், என்னவொரு எதிர்பார்ப்பு!

    மாத்தி யோசிக்கிறாய்ங்க போல!

    ReplyDelete
  18. சனி பிணம் தனியா போகாதா என்னழ இதில் உண்மை இருக்கா பகவான்ஜி?

    ReplyDelete
  19. மருத்துவர் மீது எவ்வளவு நம்பிக்கை!
    அட்டகாசம்

    ReplyDelete
  20. KILLERGEE ஜி >>
    ஃபுல்லாவா அரிக்குது :)
    அப்பளம் விற்றாவது ,அப்படித்தானே :)
    எதிர்ப்பார்க்கிற முடிவுதானே :)
    நல்லதுதான் ,நடக்க மாட்டேங்குதே:)

    ReplyDelete
  21. ஸ்ரீராம்ஜி>>
    அதான் அந்த உயரத்திலும் இருக்கோ :)

    தமிழுக்கு வந்த சோதனையா இது :)

    நம்பிக்கைன்னா இப்படியில்லே இருக்கணும் :)

    சட்டத்தை ஏமாற்றி யோசிக்கிறாங்க :)

    ReplyDelete
  22. கவிப்ரியன் ஜி >>
    இதெல்லாம் கப்ஸா,உண்மைன்னா வெட்டியான் டபிள் டூட்டியில்லே பார்க்கணும் :)

    ReplyDelete
  23. சென்னை பித்தன் ஜி >>
    திட்டமிட்டே அந்த மருத்துவரைத் தேடி வந்திருக்கலாம் போலிருக்கே :)

    ReplyDelete
  24. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன் ஜி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  25. அட! தவளை ஃப்ரம் கேரளாவோ?!!!

    அதென்னவோ உண்மைதான் ஜி புத்தகத் திருவிழாவுல சாப்பாட்டுக் கடைகள் போடு போடுன்னு போடுது....அதுக்காகவே அதுவும் இந்த அப்பளத்துக்காகவெ கும்பல் வரும் போல...அது போல சமையல் புத்தகங்களும்...

    ReplyDelete
  26. ரூபன் ஜி >>>
    உங்க நூல் எப்படி ,நல்ல விற்பனைதானா :)

    ReplyDelete
  27. Thulasidharan ஜி >>
    நாயரைதான் எங்கும் பார்க்கலாம் ,தவளையுமா :)

    ReplyDelete