2 September 2015

மாமியாருக்கு அடின்னா ,தாங்கிக்க முடியாத மருமகள் :)

 பழக்க தோஷம் விடாது :)     

            '' தற்காலிக வேலை நீக்கம் பண்ணின பிறகும் , தினசரி ஆபீசுக்கு  ஏன் வர்றீங்க ?''

              ''வீட்டிலே தூக்கம் வர மாட்டேங்குதே !''

மாமியாருக்கு அடின்னா ,தாங்கிக்க முடியாத மருமகள் :)

            ''அங்கே  லாரியில் அடிபட்டு கிடக்குறது உன் மாமியார் போலிருக்குன்னு ,போய் பார்னு சொன்னா ...என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்றீயே ,அவங்க மேலே அவ்வளவு பாசமா ?''
             ''அட நீ வேற ,அவங்க என் மாமியாரா இல்லேன்னா ,வர்ற ஏமாற்றத்தை என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் !''
 கணக்கு உதைக்குதுன்னா எதுக்குத்தான் லாயக்கு ? 
               

                             ''என் பையனை கழுதை மேய்க்கக் கூட லாயக்கில்லைன்னு ,ஏன் சொல்றீங்க சார் ?''
                      ''இப்ப கணக்கு உதைக்குதுன்னு சொல்றவன், அப்பவும் கழுதை உதைக்குதுன்னு சொல்வான் போலிருக்கே !''
கொசுக்களுக்கும் விசுவாசமில்லை !                                                                                
கொசுக்கடியில் இருந்து மீள 
காசிருந்தால் ஆயிரம் வழிகள்..
 அடிக்க மனமுமின்றி 
ஒழிக்க பணமுமின்றி வாழும் ஏழை ஜனங்களின்
இரத்தத்தையும் விடுவதில்லையே ... 
ஆதிக்க சக்திகளின் வாரிசுகளா கொசுக்கள் !

  1. என்றைக்கு தீரும் இந்த மாமியார் மருமகள் பிரச்சனை.
    வாத்தியார் சொன்னா சரியாகத்தானே இருக்கும்..
    ஆதிக்க சக்திகளோடு கொசுக்களை ஒப்பிட்டு - ஒரு புதிய சிந்தனையை தூண்டியிருக்கிறீர்கள். 
    ReplyDelete

    Replies


    1. என்று தீரும் இந்தச் சுதந்திர தாகம் என்று கேட்ட காலம் போய் ,நீங்கள் சொல்வதுபோல் கேட்கும் காலமாகிப் போச்சு !

      தீர்க்கதரிசி வாத்தியாரோ ?
      உழைப்பாளிகளை ஒரு நொடிகூட ஒய்வெடுக்கவிடாமல் முதலாளிகளின் கங்காணியாக இருக்கிறதே கொசு !

20 comments:

  1. தற்காலிக வேலை நீக்கம் தானே...! தலைமகனுக்கு தலைசாய்யக்க ஒரு இடம் இல்லையா...? ஒன்னுமே புரியல ஒலகத்தில...!


    என்னடி சொல்றாய்...? லாரியில் அடிபட்டு கிடக்குறது என் மாமியார் போலிருக்கா...! நல்லா பாத்தியா....? நெசமாத்தா சொல்லுறியா... ? எ மாமியாரன்னு...? செத்துப் பேயிட்டாங்களா... இல்லய்யா...? என்ன இல்லய்யா...!? அய்ய்ய்யோ...!



    கழுதை கெட்டா குட்டிச் சுவரு...! அப்ப உதைபட்ட கழுதைன்னு சொல்லுங்க...!


    “நெத்தியில என்னாங்கரே பிளாஸ்திரி...?”
    “அது கொசுக்கடி... ஆதி சக்திதான்...நம்மல அந்தம் ஆக்கமா விடாது போல இருக்கே...!“

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. தண்டனையால் தூக்கம் வரலையோன்னு நினைச்சேன் :)

      உங்க வசனம் அருமை ,கொன்னுட்டீங்க :)

      உதைக்கும் கழுதை தெரியும் ,இவன் ...:)

      ஆதி சக்திதான் அங்கம் முழுதும் சோதிக்குதோ:)

      Delete
  2. Replies
    1. அருமைக்கு நன்றி :)

      Delete
  3. அருமை . வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அருமை ,வாழ்த்துக்கு இரட்டிப்பு நன்றி :)

      Delete
  4. எப்புடி இந்த யோசனையெல்லாம் உங்களுக்கு வருகுது ?..:))))
    வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. ரூம் போட்டு யோசிக்கிறேன் :)

      Delete
  5. ஹ்ஹஹஹ் ஆஃபீசுக்குப் போறதே தூங்கறதுக்குத்தானோ...

    மாமியார் மரும்கள் பிரச்சனை தீர்வே கிடையாது அது நம்ம தண்ணிப் பிரச்சனை போலத்தான்....

    கொசுக்கடிக்கு இப்படி ஒரு கருத்தா ஹஹ

    ReplyDelete
    Replies
    1. வேலைக்கு நேரம் போதாதவர்கள் இருக்கும் ஆபீஸில்,இப்படி தூங்கு மூஞ்சிகளும் இருக்கிறார்கள் :)

      பல யுகத்திலும் தொடரும் :)

      சரிதானே :)

      Delete
  6. அனைத்தும் சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. இப்போதுள்ள சூழ்நிலையில் யாருமே ஆபீஸில் தூங்க முடியாதே :)

      Delete
  7. வணக்கம்,
    கொசுக்கள் கூட ஏழையைத் தான் படுத்துக்கின்றன அதிகமாக,
    அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கொசுத் தொல்லை தாங்க முடியாமல் தான் பலர் டாஸ்மாக் அடிமை ஆகிவிட்டார்களோ :)

      Delete
  8. ஆமாங்க இடம் மாறி தூங்கினா தூக்கம் எப்படி வரும்..
    எல்லாம் ரசிக்கும் படியாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. பணி ஓய்வு பெற்றால் என்ன செய்வாரோ :)

      Delete
  9. 01. இதுக்கு(ம்) சம்பளம் வருமா ?
    02. உள்ளதுதானே எதிர்பார்ப்போடு போயி ஏமாறக்கூடாதுனு முன்னெச்சரிக்கை.
    03. உதையாலே இப்படியும் பிரட்சினையா ?
    04. போன ஜென்மத்து ராஜாக்கள்மார்களோ...

    ReplyDelete
    Replies
    1. பாதி சம்பளம் வரத்தானே செய்யும் :)
      இதுக்காக மாமியார் மண்டையைப் போடணுமா :)
      உதைக்கு அஞ்சினால் வாழ்க்கையில் உருப்பட முடியாதே :)
      குடி மக்களை இப்படித்தான் பிடுங்கி எடுத்து இருப்பார்களோ :)

      Delete
  10. அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மருமகள் எதிர்பார்ப்பு சரிதானா ,ஜி :)

      Delete