12 September 2015

இப்படி சந்தேகப்பட்டா, கல்யாணம் கைகூடுமா :)

பொழைக்கத் தெரிந்த நண்பன் :)

          ''உன்னோட திருமண அழைப்பிதழில்  வங்கிக்கணக்கு எண்ணை எதுக்கு குறிப்பிட்டு இருக்கே ?''
            ''திருமணத்துக்கு வர முடியாட்டியும் பரவாயில்லை ,மறுமொய்யை வங்கிக் கணக்கில் போடவும்னு சொல்லி இருக்கேன் !''

பையனுக்கு இப்படியும் பாரதி நினைப்பு !         
          
          '' பாரதி பிறந்த நாள் வந்தாலே எனக்கு என் தமிழ் வாத்தியார் ஞாபகம்தான் வரும் !''
            ''பாரதியாரோட கவிதைகளை அவர் அவ்வளவு அழகா சொல்லி தருவாரா ?''
            ''ஊஹும் ,அவரோட பொண்ணுங்களுக்கு  மகா,கவி ,பாரதின்னு  பெயர் வச்சிருக்காரே !''

இப்படி சந்தேகப்பட்டா கல்யாணம் கைகூடுமா ?
              ''தீ அணைப்புத் துறையிலே வேலைப் பார்க்கிற வரனைப் பார்த்தா நல்லாத்தானே இருக்கு ,ஏண்டி வேணாங்கிறே ?''
                     ''வேகமா வந்து அணைப்பார்ங்கிற நம்பிக்கை வர மாட்டேங்குதே  !''

மனைவியால் நொந்தவரின் கேள்வி !

என் மாமனார் போனார் ...என் மாமியாருக்கு மகிழ்ச்சி !
என் அம்மா போனார்  ..என் மனைவிக்கு மகிழ்ச்சி !
எனக்கு மகிழ்ச்சி ...என் அம்மாவின் ஒரே மருமகள் போனால்தான்  வருமோ ?


வலிப் போக்கன்Sat Sep 13, 02:01:00 p.m.
அவர்கள் மணியாட்டி வருவதற்குள்ள முழுவதும் சாம்பலாகிவிடும் நிலையை இப்படி நாசூக்கா சொல்வது தங்களைத் தவிர யாருமில்லை ...தலைவரே........
ReplyDelete

Replies


  1. ஒருவேளை சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை எழுந்து வருமான்னு பார்க்க வருவார்களோ ?)))))

28 comments:

  1. 01. நல்ல ஐடியா இனி வரும் சந்ததிகளுக்கு உதவும்
    02. அவனுக்கு பாரதியார் இப்படி உதவுகிறார்
    03. நியாயமான கவலைதான்
    04. யார் யாருக்கு எப்போ எது வருமோ அதுதான் வரும்

    ReplyDelete
    Replies
    1. ஏன் நம் வாரிசுகள் கல்யாணத்துக்கு நமக்கும் உதவுமே :)
      பாரதி இருந்து இருந்தால் நொந்து இருப்பார் :)
      எறியும் போது அணைப்புதானே முக்கியம் :)
      அதானே ,சாவு என்ன சீனியாரிட்டி பார்த்தா வருது :)

      Delete
  2. நல்ல புலமை சார் உங்களுக்கு நாசுக்கா பேசுவதற்கு

    ஒரு முறை என் வகுப்பில் நான் என்னுடைய மை பேன் என்றேன் ஆசிரியர் இல்லை இது இங்க் பேன் என்றார் அது தான் இப்போது ஞாபகத்தில்

    ReplyDelete
    Replies
    1. இந்த புலமை பேசுவதில் வர மாட்டேன் என்கிறதே :)

      இங்க் பென்....இதுவும் ரசிக்கும் படி இருக்கே :)

      Delete
  3. மகா, கவி, பாரதி நல்லாவே யோசிக்கிறீங்க

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு நண்பர் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள் பத்மா ,ஸ்ரீ ,சிவாஜி ,கணேசன் :)

      Delete
  4. மகா, கவி, பாரதி - நல்லாத் தான் பேர் வைச்சாரு! :)

    அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பெயர் வைக்கணும்னே பிள்ளைகளைப் பெத்துகிட்டாரா :)

      Delete
  5. வங்கிக் கணக்கு ஐடியா... ஹா... ஹ....

    ReplyDelete
    Replies
    1. வங்கி வரவை டாலி பண்ணிட்டுதான் தாலியே கட்டுவாரோ:)

      Delete
  6. கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணுமுன்னு கண்டிசன்ல்லாம் இல்ல... வரலைன்னாலும் வாங்கிய மெய் வங்கிக்கணக்கிலயாவது டேலியாகணும்...! இல்லாட்டி வீட்டுக்கே வசூல் பண்ண வந்திடுவேன்... மனக்கணக்கு சரியா வரலைன்னாலும்... பணக் கண்க்குல சரியா இருப்பேன்...!


    தங்களுக்கு தமிழ் வாத்தியாரிடம் ரொம்பவே மக்கள் பற்று...! பா...ரதி...தேவி கவிபாடி மகானிடம் வந்தாளோ...!


    வேகமா வந்து அணைச்சா அவ்வளவுதான்... ! வெவரம் தெரியாம பேசாதே...! தீயா வேல செய்வாங்க...! மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே...! மாப்பிள ரொம்ப நல்லவருடி... நல்லாவே அணைப்பாரு...எங்க வீட்ல வந்து அவருதா அணைச்சாரு...!


    என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவள் போனாண்டி

    தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாள்.... போனாலும் திரும்பி ஆவியாக வந்தாலும் வரலாம்... ஜாக்கிரதை...!

    த.ம.3.


    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க பணக் கணக்குன்னா சசும்மாவா :)

      ரதி தேவி யாருமே தேடி வரலையே :)

      நீங்க கியாரண்டி தருவதால் யோசிக்கலாம் :)

      பாவி உயிரோடு இருக்கும் போதுதான் என்றால் ,ஆவியான பின்னாலுமா :)

      Delete
  7. ரசித்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மகா கவி பாரதியாரைத் தானே :)

      Delete
  8. அணைப்பு என்றால் இதுக்கும் பொருந்துமோ?

    ReplyDelete
    Replies
    1. அவசரத்தில் பொருந்தத் தானே செய்யும் :)

      Delete
  9. 1, இந்த ஐடியா கூட நல்லா தான் இருக்கு,
    2, அவன் கவலை அவனுக்கு,
    3, சரி தானே பகவானே,
    4, இன்னொன்று,,,,,,,,
    அருமை ஜீ,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. செயல் படுத்தி விட வேண்டியதுதானே :)
      அந்தந்த வயதில் வரும் கவலைதானே :)எப்படி அணைச்சா சரிதானா :)
      எப்படியோ அணைச்சா சரிதானா :)
      கணவன் போனால் மனைவிக்கு மகிழ்ச்சி ,அதுதானே :)

      Delete
  10. அட! மொய்க்கு வங்கிக் கணக்கு ஹஹஹஹஹ் செம ஐடியாவா இருக்கே ஜி!!!!

    ஹஹஹ்ஹ் மகா, கவி, பாரதி...செம ...ஜி!

    ம்ம்ம் சரிதானே ஜி தீயா வந்து பத்திக்கிச்சு......(அந்தப் பாடலும் நினைவுக்கு வருது...)அணைப்பார் தானே!!! பொண்ணுக்கு டிசைட் பண்ணத் தெரியலையோ...

    4. ஹஹஹஹ்

    அனைத்தும் அருமை!!! ஜி

    ReplyDelete
    Replies
    1. மொய் வங்கி ஒன்றைக் கூட ஆரம்பித்து விடலாம் :)
      மூணோட நிறுத்திக்கிட்டாரே:)
      இன்னும் இன்னும் வேகம் எதிர்ப்பார்க்கிறாரோ :)

      Delete
  11. இப்போது தீயணைக்கும் லாரி மணியாட்டிக் கொண்டு வருவதில்லையாம் தலைவரே..... சவுண்டு விட்டு வருதாம்....

    ReplyDelete
    Replies
    1. அதுவா முக்கியம் ,நீறு பூக்கும் முன்னால் வந்தால் சரிதான் :)

      Delete
  12. மகா,கவி,பாரதி......!சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. இவனல்லவா ,உண்மையில் பாரதிநேசன் :)

      Delete
  13. மகா கவி பாரதி - நல்ல சிந்தனை - ரசிக்க வைத்தது ஜி...
    அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. மகாகவி இருந்திருந்தால் நொந்திருப்பாரோ :)

      Delete
  14. வேகமாக வந்து அணைக்காவிட்டாலும் வந்தபின் நன்கு அணைத்தால் சரி. மகா, கவி, பாரதி நல்ல கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா ,நெருப்பை நம்பிடலாம் ,நீறு பூத்த நெருப்பு ஆபத்தாச்சே ,நன்கு அணைத்துவிடுவார்கள் :)

      மகாகவியை நினைத்தாலே , கற்பனை பொங்கி வழிய ஆரம்பித்து விடுகிறதே :)

      Delete