6 September 2015

என்று தீரும் இந்த செல்பி மோகம் :)

   

           ''என்னங்க சொல்றீங்க ,என்னை மாதிரியே என் பொண்ணுமா?''

                        ''ஆமா ,கண்ணாடியில்  நீ அடிக்கடி பார்த்துக்கிற மாதிரி ,உன் பொண்ணு செல்பியில் பார்த்துக்கிறாளே!''




  தூங்கு மூஞ்சி மரம்னா  தப்பாவே ஏன் நினைக்கணும் ?  
?''
              ''தூங்கு மூஞ்சி மரத்தை, உதாரணமாய்  எடுத்துகிட்டு வேலை செய்யணும்னு  வங்கி மேலாளர் சொல்றாரே ,ஏன் ?''
              ''அந்த மரத்தின் இலைகள் பகல்லே தூங்காதாமே ?''

வலைப்பூ நட்பு காதலாகி ,கல்யாணமானால் ...?

            ''அவங்களை ஏன் மனமொத்த  தம்பதி 'வர் 'கள்னு சொல்றீங்க ?''
             ''பதிவர்கள் அவங்க ரெண்டு பேரும் ,காதலிச்சு கல்யாணம்   பண்ணிகிட்டவங்களாச்சே  !'' 
   

என்னமா யோசிக்கிறாங்கையா இந்த கிரிமினல்கள் !

நடிகர்ஜெய்சங்கரை தென்னகத்துஜேம்ஸ்பாண்ட் என்று சொல்வார்கள் !
ரிஸ்க் எடுப்பது  ரஸ்க் சாப்பிடுறமாதிரி ,கர்நாடக சிறையில் இருந்த கிரிமினல் கைதி ஜெய்சங்கரும் தப்பித்து விட்டார் ...
24மணி நேர காவல் ,CCTVகாமெரா ,மின்சார வேலி, 30அடிஉயரச்சுற்றுச்சுவர் அனைத்தையும் தாண்டி தப்பித்து விட்ட இவனல்லவோ 
உண்மையான ஜேம்ஸ்பாண்ட் ?


  1. megneash k thirumuruganSun Sep 07, 08:54:00 p.m.
    அண்ணே !! நீங்க தம்பதி'வர்' ஆ ? இல்ல தம்பதியரா ? ஹி ஹி
    ReplyDelete

    Replies


    1. இருவரில் ஒருவர் பிளாக்கராய் இருந்தால் மட்டுமே வீடு உருப்படும் என்பதால்,நாங்கள் தம்பதியர் தான் !
      நான் மட்டுமே தினமும் தம் கட்டி எழுதிக் கொண்டிருக்கும் தம்பதிவர் !

  2. Thulasidharan V ThillaiakathuTue Sep 09, 02:17:00 p.m.
    அப்ப நைட் ஷிஃப்ட்னா ஆந்தையா?

    ஹாஹாஹா.....வலையிலேயே வலையா?!!!!! அதான் சிக்கிட்டாங்க போல.....




    1. அப்படியும் சொல்லலாமே !

      மீனுக்குள்ளே முள் இருந்தாலும் .இன்னொரு முள்ளிடம் மீன் மாட்டிக்கிற மாதிரிதானே இதுவும் ?

23 comments:

  1. Replies
    1. கண்ணாடி இருந்த இடத்தில் இப்போ செல்பி ,இதுதான் தலைமுறை இடைவெளியா ,நாகேந்திர பாரதி ஜி:)

      Delete
  2. Replies
    1. செல்பி மோகத்தைத் தானே :)

      Delete
  3. Replies
    1. எந்த மோகமும் சில நாள் தான் ஜி...

      Delete
    2. மோகம் அடுத்த தலைமுறைக்குத் தாவி விடுமோ :)

      Delete
  4. அது சரி...! யார் முகத்தோடு சேர்த்து வச்சுப் பாக்கிறாங்கிறத மொதல்ல பாருங்க...! செல்.... பி கேர்புள்...!


    எங்க மேனேஜர் எப்பவுமே அப்படித்தான்... அவருக்கு ஏத்ததத்தா உவமையா சொல்லுவாரு...! இதுல தூங்க மூஞ்சி மரத்த எடுத்துட்டு தூங்க மூஞ்சிய மட்டும் பாத்துத்தான் வேலை செய்வேன்...நானெல்லாம் மறத்தமிழனாக்கும்...!


    மனம் கொத்தி பறவையைப் போல ...மனம் கொத்தி தம்பதி 'வர் 'கள்னு சொல்றீங்க ? மனமொத்த தம்பதி‘கள்’ன்னு சொல்லுங்க... ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்த மனசுல நிறுத்தி வள்ளுவரும் வாசுகியும் போல் வாழ்க!


    என்ன பேருன்னு யோசிச்சு பாருங்க......பேரப் பாத்தாலே தெரியல...ஜேம்ஸ்..... பாண்ட்... மாஸ்டர்ன்னு இப்பவாவது தெரிஞ்சுக்கங்க...! ஆமா... சொல்லிப்புட்டேன்...!


    த.ம. 2.

    ReplyDelete
    Replies
    1. அதில் ரொம்ப தெளிவா இருக்காளே பொண்ணு ,தப்பா எதுவுமே கண்ணுலே படலையே :)

      மரத் தமிழனா :)

      பதிவர்களுக்கு போதை வலைப்பூவில்தானே :)

      ஓஹோ ,அந்த ஜேம்ஸ் உங்களுக்கும் தெரிந்தவர்தானா :)

      Delete
  5. நேற்று கண்ணாடி
    இன்று செல்பி
    நாளை
    எதில் தங்கட முகம் காண
    இருக்கிறாங்க...

    ReplyDelete
    Replies
    1. எதில் என்று காலம் பதில் சொல்லும் :)

      Delete
  6. திருமணத்துக்குப் பின் பதிவகளான தம்ப்தி”வர்கள்” பதிவுலகில் உண்டு. இரண்டுமே இருக்கும் அழகைக் கூட்டிக்காண்பிக்காதே.

    ReplyDelete
    Replies
    1. இருந்தால் பிரச்சினை இல்லை ,இல்லையென்றால் அவஸ்தைதான் :)
      அழகைக் கூட்டுவதோ,குறைப்பதோ அவரவர் பையை ,அதிலுள்ள பைசாவைப் பொறுத்தது:)

      Delete
  7. தம்"பதிவர் அருமை...ஹஹஹ்

    அட எங்கள் கமென்டும்...

    எல்லாம் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்க நூறாண்டு தம்பதிவர் :)

      ரசிக்க வைக்கிறதே :)



      Delete
  8. அனைத்தும் அருமை,
    கையில் போன் ம்ம்,,,

    ReplyDelete
    Replies
    1. பேச மட்டுமே இருந்த போன் எப்படியெல்லாம் மாறிவிட்டது :)

      Delete
  9. மோகம் இருக்கிறவரையில் செல்ஃபியும் இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. அதான் எத்தனை நாளைக்கு :)

      Delete
  10. 01. நூலைப்போல சேலை
    02. அப்படீனாக்கா ? மற்ற மரங்களின் இலைகள் தூங்குமா ?
    03. ‘’தம்’’ பதிவர் ‘’கள்’’ அடிச்சுக்காமல் குடும்பம் நடத்தினால் சரிதான் ஜி
    04. 100க்கு100 உண்மையே...

    ReplyDelete
    Replies
    1. ரசித்தேன் ஜி...
      அதுவும் இருவரில் ஒருவர் பதிவராய் இருந்தால்தான் வீடு உருப்படும்... ஹா.. ஹா... போட்டு ஓடச்சிட்டீங்க போங்க...

      கருத்துப்பெட்டி வராத காரணத்தால் கில்லர்'ஜி' அண்ணாவின் பதிவுக்கு கீழே பகவான்'ஜி'க்கு கருத்து....

      Delete
    2. 1.சுடிதாரும் தான் :)
      2.தூங்கு மரத்தின் இலைகள் தூங்குவது இல்லை ,அதான் விஷயம் :)
      3.கல்லாலும் அடித்துக் கொள்ள மாட்டார்கள் :)
      4.கொள்ளைக்கும் ஒரு அளவில்லை :)

      Delete
    3. குமார்ஜி >>.
      நம்ம வெங்கட் ஜி கோவிச்சுக்கப் போறார் :)

      Delete