30 September 2015

சமந்தான்னு சொல்லலாம் சமோஸா கூடாதா :)

  அருகம் புல் சாறு  குடிச்சா உடம்பு மெலியுமாமே :)        
           '' தலைவர் ஊளைச் சதையைக் குறைக்கணும்னு தொண்டர்கள் சிம்பாளிக்கா  சொல்றாங்களா ,எப்படி ?''
             ''அருகம் பூ மாலையைப்  போட்டுத்தான் !''


படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைதானே ?                                           
                  ''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா  இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?'' 
                    ''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே !''



மகளுக்கு வைத்த பெயர்  சரிதான்  :)

                   ''அவருக்கு செய்ற தொழில் மேல் அதிக  பக்தின்னு ஏன் சொல்றே ?''
             ''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''



ஆளைக் கொல்வது கூலிப் படைக்கு மட்டும்தான் சொந்தமா ?

வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து 
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும் 
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?

எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?


555 என்றால் என்ன ?
555 என்பது வெளிநாட்டு சிகரெட் ஒன்றின் பெயர் ...
555 என்பது சமீபத்தில் வெளியான தமிழ்ப் பட டைட்டில் ஒன்றின் பெயர் ...
555 என்பது நண்பர் வெங்கட் நாகராஜ்அவர்களின் இன்றைய பதிவின் தலைப்பு
   இவைகளைப்பற்றி அல்ல ,இந்த பதிவு !
555 என்பது  2013ம் ஆண்டில் 'ஜோக்காளி'யில் வெளியாகி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை தான் !
ஓராண்டு நிறைவு அடைவதற்குள் குட்டி குட்டி பதிவுகளை போட்டு அடைந்து இருக்கும் உயரம் இது !
தினசரி இரண்டு ,மூன்று படிகள் முன்னேறி தமிழ் மண ரேங்க் 64வது இடத்தை அடைய ஊக்கப் படுத்தியவர்களுக்கும் ,
ஜோக்காளியை தினசரி படித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] இருப்பவர்களுக்கும் என் நன்றி !
தொடர்ந்து உங்கள் ஆதரவை விரும்பும் ...
ஜோக்காளி.

2013 ம் வருடம் 555 பதிவுகள் வெளியான நிலையில் 64வது இடத்தில் இருந்த ஜோக்காளியை    குறுகிய காலத்தில் கடந்த 7.7.14 அன்று, முதல் இடத்திற்கு வர உதவிய வலையுலக உறவுகளுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி !

34 comments:

  1. வாழ்த்துக்கள் இன்னும் உயரம் தொட நம்மை சிரிக்க வைக்கவும் தொடர்ந்து))))

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து சொன்ன உங்களை தனிமரமாய் நினைக்கத் தோணலே :)

      Delete
  2. இப்படி சிம்பாலிக்கா ஒரு அர்த்தம் எடுத்துக்கணுமா? ஹா... ஹா...

    ஹா.... ஹா... சைபருக்கு இப்படி ஒரு உபயோகமா?

    ஹா... ஹா... பார்த்துங்க சாப்டுறப் போறாங்க!

    எங்கள் பாராட்டுகள் - ம.மாக்கு!

    555 விவரம் ஜோர்!

    ReplyDelete
    Replies
    1. இப்பவும் தலைவர் புரிஞ்சிக்கலைன்னா அருகம் புல் சாறு கொடுத்து புரிய வைக்கணும் :)

      இருக்காதா ,சைபரைக் கண்டு பிடித்தது நம் முப்பாட்டனாராச்சே:)

      கடிக்கிற மாதிரி இருந்தா அதுதானே நடக்கும் :)

      கடந்த வருடம் பரபரப்பான செய்திகளுக்கு பெயர் வாங்கியது ம மா :)

      எனக்கு தெம்பு தந்த 555:)


      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன். அருகம்புல்லை சற்றே அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பது மட்டுமல்ல,அருகம் புல்லை ருசிப்பதும் நல்லதே :)

      Delete
  4. தல... ‘ஆல் போல் தழைத்து... அருகு போல் வாழ்’ என்று வாழ்த்துறாங்க... தனாடாவிட்டாலும் தன் தசை ஆடுங்கிறது இதுதானோ...?


    பூஜ்ஜியத்துக்குள்ளே இராஜ்சியத்தை ஆண்டு கொண்டே இருப்பான்... சைபருக்கும் இன்னா வேல்யூ இருக்கு... அத எங்குட்டு போடுறமுன்னுதான் பார்க்கனுமோ?


    சீக்கிரம் ‘பப்ஸ்’ போடட்டும்... ‘அப்ஸ்’ அடுத்ததுக்கு ‘பப்ஸ்’ன்னு பேரு வக்கனுமுல்ல?.



    இவுங்க உயிரோட இருந்து ஒரு பிரயோசனும் இல்லன்னு சிம்பாளிக்கா சொல்றாங்களோ...?


    தமிழ்மனக் கட்சியின் நிரந்தரத் தலைவரே! தமிழ்மணக்கட்டும்! அதிக ஓட்டுகள் வாங்கி முதல்வராக வாழ்த்துகள்!

    த.ம.4


    ReplyDelete
    Replies
    1. அருகு தருமோ உடலுக்கு மெருகு :)

      oo7 என்றாலும் கூடுதல் மைப்பு இருக்கத்தானே செய்கிறது :)

      பப்ஸ் பேக்கரி ஐட்டமாச்சே போக்கிரி பயபிள்ளே பொறந்தா என்ன செய்றது :)

      எதிர்க்கட்சிக் காரங்கதானே போகட்டும் :)

      உங்கள் வாழ்த்து பலிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை :)

      Delete
  5. தன் தொழில் பக்தியை மகள் மூலமா வெளிப்படுத்தகிறார் நல்ல விசயம்தான்...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பொண்ணுக்கு சாயா என்று கூட பெயர் வைக்கலாம் :)

      Delete
  6. சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா? - அவர்
    எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே!''
    படிப்புக்கு ஏற்ற தொழிலா - அதை
    நம்ப முடியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. நம்ப முடிவது நகைச்சுவை ஆகாதே:)

      Delete
  7. மிக நல்ல நகைச்சவைகள்
    ரசித்தேன்.
    மிக்க நன்றி சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. சமோஸா,உங்களுக்கும் பிடிக்குமா :)

      Delete
  8. சூடான ’சமோசா’ என்றால் இளைஞர்கள் ரசிப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஏன் ,வயதானவர்களுக்குப் பிடிக்காதா :)

      Delete
  9. நல்ல பெயர் தானே,,,,,,,
    555 மறக்கமுடியாத ஒன்று,,,,,, நீங்க சொன்னதில்லப்பா,,,,,,,,
    அனைத்தும் அருமை ஜீ,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. சொல்லும் போதே நாக்குலே எச்சி ஊறுதே :)

      Delete
  10. 01. பார்த்து கறுக்கல் அருவாளை போட்டுறாமல்..
    02. நல்ல பொருத்தம்
    03. போண்டா கடைக்காரரோ...
    04. வாழ்க சனநாயகம்
    05. வாழ்த்துகள் ஜி விரைவில் முதலிடம் பிடிக்க,,,,

    ReplyDelete
    Replies
    1. ?..........உங்க பெரியப்பாவுக்கு அருகம் பூ மாலையைப் போடும் காரணம் புரிந்ததா :)
      ஆனால் எத்தனைப் பேருக்கு இதில் வருத்தம் :)
      போண்டா மணிக்கு சொந்தக்காரர் :)
      பிணநாயகம் ?:)
      முதலிடம் ,மாய மான் அல்லவே :)


      Delete
  11. வாழ்த்துக்கள் ஜோக்காளி அவர்களே. சிரித்து மகிழ வைக்கும் உங்கள் பணி தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. பாரதியின் வாக்கு பலிக்கும்:)

      Delete
  12. சென்னை பித்தன் ஐயா சொல்கிறமாதிரி சூடான ’சமோசா’ என்றால் இளைஞர்கள் ரசிப்பார்கள்.
    அப்படி சூடு இல்லாத சமோசாவையும் இளைஞர்கள் ரசிப்பார்கள். நல்ல சமோசா கிடைக்காமல் அவன் அவன் சாகிறான். சூடு இல்லாவிட்டாலும் சமோசா கிடைத்தால் சூடாக்கிவிடுவான் தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. #நல்ல சமோசா கிடைக்காமல் அவன் அவன் சாகிறான்#
      நீங்க எந்த சமோசாவைச் சொல்றீங்க :)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. சொன்னாரஎன்னங்க நீங்க! நான் சொன்னது, சென்னைப்பித்தன் சொன்ன சூடான ’சமோசா’ வைத்தான்.. மற்றபடி சமொசாவுக்கும் எனக்கும் நொம்ப தூராம். நான் முழுக்க முழுக்க சைவைமல்லோ! கேட்டோ!

      Delete
    5. காதலில் இரண்டு வகை உண்டு ,சமோஸாவிலுமா:)

      Delete
  13. நாளும் உயர நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாளும் தவறாமல் மொக்கை போட்டாலும் உயர்வு, தேடி வரும்தானே அய்யா :)

      Delete
  14. பெண்ணின் பெயர் சமோசா...ஐயையோ வீட்டார் கவனமாக இருக்கணுமே...

    செத்த பொணம் ஓட்டுப் போடுமே !! "அது" மட்டும் இந்த நாட்டுக் குடிமகன்/குடிமகள் இல்லையா உரிமை இல்லையா அப்படினு எழுந்து வந்து ஆவி ரூபத்துல எல்லா அரசியல் வாதிகளையும் ஒரு கை பார்த்துச்சுனா எப்படி இருக்கும் ஜி???!!!!!!

    ReplyDelete
    Replies
    1. எவனாவது கடிச்சிடுவானா :)

      பணம் என்றால் பிணமும் கேட்குமே:)

      Delete
  15. ரசித்தேன்!

    அட இன்னிக்கும் இங்கே நான்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் போட்ட பதிவுதானே ,நான் இந்த மொக்கை போட காரணம் :)

      Delete