கடவுளுக்கே பொறுக்காது என்பது சரிதான் :)
''என்னடி சொல்றே ' வரம் தா 'ங்கிற என் பாட்டைக் கேட்டு கடவுள் நிச்சயம் வருவாரா ?''
'' இனிமேல் வாய் திறந்து பாடமாட்டேன் என்று உன்னிடம் சத்தியம் வாங்கிட்டு போக அவர் வந்துதானே ஆகணும் !''
கடைக்காரர் செய்தது சரிதானே ?
''அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு ஏன் சொன்னார் ?''
'' ஒரிஜினல், ஜெராக்ஸ் இரண்டையும் படிச்சு , ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிட்டு காசு தர்றேன்னு சொன்னேன் ,தப்பா ?''
வாழ்க்கை தத்துவமே வெங்காயத்தில் அடங்கியிருக்கு !
உரிக்கும்போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்தான் ...
நாவிற்கு சுவை !
வாழ்க்கையும் அப்படித்தான் ...
கஷ்டத்தில் கண்ணீரும்
கடந்த பின் மகிழ்ச்சியும் தருகிறது !
நாவிற்கு சுவை !
வாழ்க்கையும் அப்படித்தான் ...
கஷ்டத்தில் கண்ணீரும்
கடந்த பின் மகிழ்ச்சியும் தருகிறது !
- வலிப் போக்கன்Sat Sep 13, 01:53:00 p.m.அவரு போடின்னு சொல்ல....அவுக போடான்னு சொல்ல.... இரண்டு பேருமே சமமா இருக்கும்போது...ஊடால எதுக்கு நரி......!!
|
|
Tweet |
அடடா! கடவுளுக்கும் கஷ்டகாலம்
ReplyDeleteகடவுளே வந்து வரம் வாங்கிட்டு போவார் போலிருக்கு :)
Delete‘வரன் தா....’ என்று மாற்றிப் பாடச் சொல்வாறோ?
ReplyDeleteசெக்கிங் இன்பெக்டர் புள்ளன்னு நிருபிக்க வேண்டாமா?
‘போடா...போடி...’ன்னு சொல்றதுதான் இப்பல்லாம் பேஷன்..!போடா டே...போயிவேற வேலையிருந்தா வேலையப் பாருங்கடா..!
கஷ்ட காலம்... கண்ணீரில் மிதக்க வைத்தாய்...!
த.ம.3
வரனை கேட்க வேண்டியதே இல்லையே,அவங்களே தேடிக்குவாங்க :)
Deleteஅதுக்காக நகலையுமா:)
பிள்ள குட்டிங்கள படிக்க வைக்கிற வழியைப் பாருங்கடா :)
அதை மறக்க தண்ணியில் மிதக்காமல் போனால் சரிதான் :)
அப்படியே... அச்சு அசலா...தேவர் மகன் கமல் பேசுறாப்புளயே இருக்கு...!
Deleteகமல் சொன்னது சரி ,அதை நீங்க சொல்றது தப்பா போய்விடும் போலிருக்கே :)
Deleteவெங்காய நெடி தாங்க முடியலையா :)
ReplyDeleteவெங்காயத்தின் தத்துவம் அருமை ஜீ,,,,,,,,,,
ReplyDelete'வெங்'காயமே இது பொய்யடான்னு சொல்லமுடியலே :)
Deleteவாடி..போடி...யும் அக்கம்பக்கத்தில்தானே இருக்கிறது
ReplyDeleteகம்பம் பக்கத்திலே போடி மட்டும்தானே இருக்கு :)
Deleteவாழ்க்கை என்ற பயணத்தில்
ReplyDeleteவெங்காயம் என்பது வழிகாட்டி!
என்றே
சொல்ல விரும்புகிறேன்
http://www.ypvnpubs.com/
சில் நேரங்களில் வழிகாட்டியின் விலைதான் ,மக்களை விழிபிதுங்க வைத்து விடுகிறது :)
Deleteஎப்படி ஜி இப்படி...?
ReplyDeleteபப்ளிஷ் நேரத்தைப் பார்த்தீர்களா ,ராத்திரி பூரா உட்கார்ந்து யோச்சிச்சது :)
Deleteஇந்த வாடி போடி அழைப்பு நம் அண்டை மாநிலத்தில் சகஜம் ஜெராக்ஸ் கடைக்காரர் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவிடம் தோற்று விட்டாரா.
ReplyDeleteநீங்கள் இருப்பது பெங்களூருவில் ,நான் இருப்பது மதுரையில்,நீங்கள் சொலவது கடவுளின் தேசத்தையா :)
Deleteகடையை மூடி விட்டு சென்றுவிட்டதாக தகவல் :)
01. தெய்வீக குரலோ ?
ReplyDelete02. உண்மைதானே பேங்ல பணம் எடுத்தால் சரியா இருக்கானு செக் பண்ணுறது இல்லையா ?
03. இது இப்போ ஃபேஷனாகிப்போச்சு காரணம் சினிமாக்காரன்தான்.
04. எவ்வளோ விஞ்ஞானம் வளர்ந்தும் வெங்காயத்தை உரிக்காமல் பவுடராக தயாரிக்க மாட்றாங்கே..
இல்லைன்னா தெய்வமே வருமா :)
Deleteatmல் எடுத்தாலும் கூட :)
வாடி போடின்னே பட டைட்டில் வேற :)
இப்போதானே ஜிஞ்சர் பேஸ்ட் வந்திருக்கு ,நீங்க சொல்றதும் வந்திடும் :)
போடா..போடி... சரியாப் போச்சு
ReplyDeleteஅதுசரி .இளம் தம்பதிக்குள் இதெல்லாம் சகஜம் தானே :)
Deleteகடவுளை வரவழைக்க நல்ல ஐடியாவா இருக்கே.... :)
ReplyDeleteவந்தாலும் ,அவரில்லே வரம் வாங்கிட்டு போகணும் போலிருக்கு :)
Delete