25 September 2015

ஜோதிடவியலை அவசியம் யார் படிக்கணும் :)

             ''  வங்கி மேலாளர்களுக்கு ஜோதிடமும் பார்க்கத் தெரியணுமா, ஏன்  ?''

                  ''யார் கடனை திருப்பி கட்டுவார்கள் என்று ஜாதகத்தைப்  பார்த்து , கடனைக் கொடுக்க உதவுமே !''



எழுத்தாள கணவனை மனைவியே  இப்படி அவமானப் படுத்தலாமா :)

                   ''பாத்திரக் கடைக்கு மனைவியோட  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
             ''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு  பிரயோசனம் இல்லையேன்னு  குத்திக் காட்டுறாளே !''

கல்யாண மொய் ,மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே:)
            ''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னு  வருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
      ''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு முப்பது வாழ்த்து தந்தி வந்தது ... இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''


டயாபெடிக்சுக்கு உணவு பழக்க வழக்கம் :)

'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி  ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'


அம்பாளடியாள் வலைத்தளம்Fri Sep 26, 11:01:00 a.m.
கேப்பக் கஞ்சி உடம்புக்கு ரொம்ப நல்லம் என்று யாரும் சொல்லாம
விட்டுட்டாங்களே ச்சே ...இன்றிலிருந்து வெறும் கேப்பக் கஞ்சி
குடியுங்க சகோதரா :)))))))))))))




  1. கேப்பக் கஞ்சி மட்டுமே குடித்து உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக்க உலகியற்றியான் :)

27 comments:


  1. ஆண்டவன் படைச்சான், எங்கிட்ட கொடுத்தான்... அனுபவி ராஜான்னு, அனுப்பி வச்சேன்... கடனாளிக்கு சாதகமாக மேனேஜரு பாட்டுப் பாடிட்டு இருக்காரு...!


    “பணமாடி முக்கியம்... பணத்த என்னக்கி வேணுமுன்னாலும் சம்பாதிக்கலாம்... மனுசன...சம்பாதிக்க முடியுமா...? தங்கமானவங்க... இவுங்க தங்க மனசுக்கு தாஜ்மகாலை எழுதித்தரப்போறேன்...”
    “அதானே... எழுதித்தானே தர முடியும்... பெரிய்....ய்...ய... எழுத்தாளர் இல்லையா...?”


    பரவாயில்ல... கவலைய விடுங்க... இதையே தந்தியா பாவிச்சுக்கன்னுட்டு... போஸ்டு காட்டுல்ல...வாழ்த்த சொல்லிடுங்க... செலவு மிச்சம்தானே...!


    கூட்டிக் கழிச்சு வகுத்தப் பாருங்க... கணக்கு சரியாத்தான் வரும்...!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. ஏதோ சம்திங் ராங்க் :)

      வெள்ளை மாளிகையை கூட விற்கலாம் ,வாங்கலாம் :)

      ஆஹா ,இந்த ஐடியா நல்லாயிருக்கே :)

      ஆனால் ,இரத்தத்தில் சர்க்கரை கூடும் விகிதம் குறைவாச்சே :)

      Delete
  2. கடன் வாங்குபவர்களும் எந்த பேங்க்கில் ஏமாற்றலாம் என்று ஜோசியம் பார்த்து விட்டு வந்தால்?

    ம்ம்ம்... அதென்னவோ உண்மைதாங்க....

    அச்சச்சோ..... பதில் மொய்கள்!

    நல்ல விஷயம். இது ஜோக்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதையும் கண்டு பிடிக்கும் அளவுக்கு மேலாளருக்கு ஜோதிடம் தெரியணும்:)

      ஆனாலும் விட மாட்டோம் ,அப்படித்தானே :)

      செல்லிலே வாழ்த்து சொல்லி முடிச்சுக்க வேண்டியதுதான் :)

      சர்க்கரை வந்தாலே ,தின்னிப் பண்டாரமாகி விட வேண்டியதுதான் :)

      Delete
  3. Replies
    1. ஜோதிடம் உண்மை என்றால் இதை செய்யலாம் தானே :)

      Delete
  4. ''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு பிரயோசனம் இல்லையேன்னு குத்திக் காட்டுறாளே!'' என்பதில் தவறில்லையே!

    என் வீட்டிலும் இதே தொல்லை
    என்னமோ
    உள நிறைவுக்கு எழுதறன் என்று
    காலம் கடத்திறேன்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என்ன வந்து நிறையுது என்று கேட்கிறாளே துணைவி :)

      Delete
  5. 01. அப்படீனாக்கா நாட்டில் உள்ள சோஸியர்களுக்கு வேலை உறுதி
    02. நியாயம்தானே..
    03. நியாயமான கவலைதான்
    04. கஷ்டமடா சாமி

    ReplyDelete
    Replies
    1. ஜோதிடம் உண்மையென்றால் அரசே வங்கிகளில் வேலை தரலாமே :)
      காசிலேயே குறியாய் இருந்தால் கணவன்தான் என்ன செய்வான் :)
      இவர் போய் சேர்ந்தால் செத்தாண்டா சேகர் என்று விட்டு விடுவார்களே :)
      ஆறு வேளை சாப்பிடுவதா:)

      Delete
  6. அனைத்தும் அருமை

    ReplyDelete
    Replies
    1. மெய்யாகவே மொய் அருமையிலும் அருமைதானே :)

      Delete
  7. ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் “பெப்பே” சொல்லலாமே மனைவீயே குத்திக் காட்டினால்.....பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போல....இது என்ன புது வைத்தியம்

    ReplyDelete
    Replies
    1. மேலாளர் ஜாதகம் பார்க்கப் போகிறார் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் :)
      எங்கே போய் முட்டிக்கொள்வது :)
      ரசிக்க வைத்தால் பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் தவறில்லைதானே :)
      புதுசில்லை ,இதுதான் உண்மை வைத்தியம் :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பல்கலை கழகத்தில் ஜோதிடவியல் படிப்பு படித்தவர்களுக்கு அரசு ஏன் வேலை தருவதில்லை ,அரசே ஜோதிடத்தை நம்ப வில்லை போலிருக்கே :)

      Delete
  9. ஜோக்குகளை ரசித்தேன். கடன் கொடுத்தால் திருப்பி கட்டாத மூஞ்சியைப் பார்த்தாலேயே தெரிந்துவிடும் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. உங்க திறமை யாருக்கு வரும் ?எல்லோருக்கும் வந்தால் ,வாராக்கடன் என்பதே வங்கியில் இல்லாமல் போய்விடுமே :)

      Delete
  10. அனைத்தையும் ரசித்தேன். எழுத்தாளர் நகைச்சுவையை சற்றே அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. ஏனென்றால் ,அது நம்ம துறையாச்சே :)

      Delete
  11. // '' வங்கி மேலாளர்களுக்கு ஜோதிடமும் பார்க்கத் தெரியணுமா, ஏன் ?''
    ''யார் கடனை திருப்பி கட்டுவார்கள் என்று ஜாதகத்தைப் பார்த்து , கடனைக் கொடுக்க உதவுமே !''//

    இந்த ஜோக் படித்ததும் நான் 'ஹாய் மதன்' பகுதியில் கேட்ட கேள்வியும் திரு. மதனின் பதிலும் ஞாபகம் வந்தது. (மதன் வரைந்த கார்ட்டூன் பார்க்க இந்த இணைப்பில் வருக...)

    ReplyDelete
    Replies
    1. உங்க கேள்வியும் ,மதனின் படமும் சூப்பர் பொருத்தம் :)
      நம் இருவரின் சிந்தனையோட்டமும் பொருத்தமே :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    பாத்திரகாரனின் எழுத்து போல நம்ம எழுத்து வரும் காலம் தூரம் இல்லை.. வெகுசீக்கரமாக ஜோக்காளிதளத்தின் நகைச்சுவைகள் பல ரூபாய்க்கு போகும்.. புத்தக வெளியீடு செய்யுங்கள் கவலை வேண்டாம் ஜி. மற்றவைகளை இரசித்தேன். வாழ்த்துக்கள் த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவா ?முதலில் E நூலாக்கிப் பார்க்கணும் ,எத்தனை Eளிச்சவாயர்கள் படிப்பார்கள் என்பது தெரிந்து விடும் :)

      Delete
  13. சிறப்பான ஜோக்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் என்ற வகையில் உங்க அனுபவம் எப்படி ஜி :)

      Delete