9 September 2015

சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலம்! :)

  BJPயினால்  வந்த மொக்கை :)                             

                  

              ''அந்த கஞ்சப் பிசினாரி ,அந்த கட்சியில்தான் சேருவார்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''

                     ''மிஸ் கால் கொடுத்தா சேர்த்துக்கிற கட்சி அதுதானே !''


இப்படியும் சின்னதா கடிக்கலாம் !

''தலைவரே ,அதுதாங்க பள்ளிவாசல் !''

''அப்படியா ,எந்த பள்ளிக்கு வாசல் ?''

தம்பதிக்குள் 'குளுர்'விட்டுப் போகலாம் ,ஆனால் ...?

             ''இன்ஸ்பெக்டர் டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் ,அப்பவும்  எனக்கு குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
          ''எனக்கு எப்பவோ குளிர் விட்டுப் போச்சு சார் !''

சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலம் :)
சமந்தா ரெட்டி தான் உடுத்திய உடைகளை 
ஏலம் போட்டு வருகிற பணத்தில் 
ஏழைக் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
உங்கள் உதவியை உங்கள் மாநிலக் குழந்தைகளுக்குக் கூட செய்துக் கொள்ளுங்கள் ... 
ஆனால் ...ஏலம் சென்னையில்தான் நடக்கணும் !
சிலுக்கு ஸ்மிதா கடித்த கொய்யாப்பழ எச் 'சிலுக்கு 'கொட்டிக் கொடுத்தவர்கள் இங்கேதான் ஏராளமாய் இருக்கிறார்கள் !
 உங்க பல் பதிந்த ரொட்டிக்கு கூட 
கோடிகளை கொட்ட ஜொள்ளர்கள் இங்கே 
காத்துக் கிடக்கிறார்கள் !





  1. தெரியாத வாசலை...அதாங்க பள்ளி வாசலை காட்டிபிட்டிங்க ஜீ..




    1. தலைவர் தான் பள்ளி வாசலை மிதிக்க வில்லை ,நீங்களுமா ?





    1. சென்ற வாரம் ,லண்டனில் ஒரு நடிகை இப்படித்தான் உதவப் போகிறேன் என்று தன் முத்தத்தை பெற்றுக் கொள்ள ஏலம் விட்டாராம் ,49 லட்சம் கொடுத்து முத்தம் பெற்றுக் கொண்டவர் யார் தெரியுமா ?இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூலியன் பாரதி என்பவர்தான் !
      நமது பெருமையை நிலைநாட்டிய அவருக்கு பாராட்டுக்கள் !

28 comments:

  1. ஹா.ஹா...ஹா...

    வாழ்க்கைப் பள்ளிக்கு வாசல்.

    எந்தக் குளிர்?

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கூடம் பக்கம் போகாமலே தலைவர் பெரிய லெவலுக்கு வந்து விட்டாரே :)

      கிரிமினலுக்கும் ,காக்கிக்கும் இடையில் இருக்க வேண்டிய குளிர் :)

      எச்'சிலுக்கு'மா இந்த கிராக்கி :)

      Delete
  2. மிஸ் கால் கொடுத்தா அதை மிஸ் பண்ணலாமா...? அந்த கால கையா நெனச்சு பிடிச்சுகிறேன்... என்ன கை விட்டுறாதிங்க...!


    பள்ளி வாசல் வழியே ஒன்னு உள்ளே வந்திருச்சு... என்னான்னுதானே கேக்கிறீங்க...!

    பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன்
    பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே!
    அள்ளியிறைக்க வந்த கள்ள நகையே.. உன்
    அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே!


    ஏன் இன்ஸ்பெக்டர் பயந்து சாவுறீங்க... இந்த கபாலி இருக்கான்... ஒங்களுக்கு ஒன்னு ஆகாது... நா...காப்பத்துவேன்... அந்த ஜெர்கின்ன கொஞ்சம் குடுங்க...!


    சமஞ்சா ரெட்டி... அந்த டிரஸ்ஸ ஏலம் எடுக்க கிளம்பிட்டேன்... என்ன யாரும் தேடாதீங்க... சொல்லிட்டேன்... சொல்லிட்டேன்... எத்தன லட்சம் செலவானாலும் கவலயில்ல... ஆறு நூறானாலும் ஹைகோர்ட் பாழனாலும் பரவாயில்லை...எப்பா... சென்னைக்கு போகணும் எவ்வளவு பணம் இருக்கு...?

    த.ம.1.

    ReplyDelete
    Replies
    1. கையி போயி call லு வந்தது டும் டும் டும் :)

      பள்ளி ,புள்ளி ,வெள்ளி ,அள்ளி ...கொள்ளி மட்டும்தான் பாக்கி :)

      இருந்தாலும் கபாலிக்கு ரொம்பத்தான் இடம் கொடுத்துட்டார் :)

      நீங்க சென்னைக்கு போகவே வேண்டாம் ,உங்களைவிட பெரிய பெரிய ஆளுங்க அங்கேயே இருக்காங்க :)

      Delete
  3. சூப்பர் கட்சி ஜி... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. கொள்கை ஒத்து வர்ற கட்சியில் தானே சேர முடியும் :)

      Delete
  4. லண்டன் நடிகை இடம்
    ஒரு முத்தம் பெற
    49 இலட்சம் என்றால்
    ஈழத்து யாழ்பாவாணனிடம்
    ஒரு முத்தம் பெற
    49 கோடி கேட்கலாமா
    ஐயா!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அதிகமாய் கேட்கலாம் ,யாரும் தரப் போறதில்லையே :)

      Delete
  5. பிஜெபி கட்சிக்கு அந்தப் பெயரும் உண்டா.?இதெல்லாம் சின்னக் கடி என்றால் மற்றவை பெரியகடிதானே....தம்பதிக்குள் குளிர் விடக்கூடாது. தாம்பத்யம் அலுத்து விடும் சமாந்த ரொட்டி, சாரி ரெட்டி தகவல் புதுசு.

    ReplyDelete
    Replies
    1. MCP என்றாலும் நல்லாத்தானே இருக்கு :)
      மகாகடி என்றாலும் தப்பில்லை :)
      தாம்பத்திய ரகசியத்தை அழகாச் சொல்லிட்டீங்களே :)
      தெரிஞ்சுகிட்டா போதாது ,பணத்தோட ரெடியா இருங்க :)

      Delete
  6. ஒசாமா மன்னிக்கணும் ஒபாமா உங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறார்
    இந்த மூளைய எங்கையும் அடைவு வச்சிராதீங்க என்மா யோசிக்கிறீங்கப்பா முடியல :))))))))))) வாழ்த்துக்கள் ஜி .

    ReplyDelete
    Replies
    1. ஹஹ மிகச்சரியாகச்சொன்னீர்கள் தோழி.

      Delete
    2. ஒசாமா தேடியிருந்தால் நியாயம் இருக்கு ,நாங்க ரெண்டு பேருமே 'கழுத்தறுக்கின்ற ' பார்ட்டிங்க :)
      எவன் அடகு வச்சுக்கிறேன்னு சொல்றான் ?உங்க மூளையை நீங்களே வச்சுக்குங்க ,வட்டியில்லாக் கடன் ஒரு கோடி தர்றோம்னு சொல்றாங்களே :)

      Delete
    3. சசிகலாWed Sep 09, 04:18:00 p.m.
      ஹஹ மிகச்சரியாகச்சொன்னீர்கள் தோழி.
      Reply>>
      ஒபாமா என்னைத் தேடுவதாக சொல்லி இருப்பதைத் தானே,நீங்களும் சரியென்று சொல்கிறீர்கள் :)

      Delete
  7. மிஸ்டு கால் பார்ட்டியா??
    அனைத்தும் அருமை

    ReplyDelete
    Replies
    1. உலகத்திலேயே இது ஒன்றாகத்தான் இருக்கும் :)

      Delete
  8. பல் பதிந்த ரொட்டிக்கு அள்ளி கொடுக்கும் சகிப்பு தன்மை நிறைந்த ஜொள்ளர்கள் நிறைந்த தலநகரம் தலைவரே....

    ReplyDelete
    Replies
    1. ரொட்டியில் வெண்ணை கூட வேண்டாம் ,கோடிகள் கொட்ட சென்னை ரெடி :)

      Delete
  9. Replies
    1. அசத்தல் ....கடைசியில் உள்ள படம்தானே :)

      Delete
  10. Replies
    1. இப்படி சொன்னா ,அது தமிழாகி விடுமா :)

      Delete
  11. 01. மிஸ்ட்டு காலுக்கு கட்சியிலே சேர்க்கிறவங்க கால் பண்ணினால் மந்திரி பதவி கொடுப்பாங்களா ஜி ?
    02. இவர்தான் மதவாதமற்ற தலைவர்.
    03. யாருக்கு யார்மீது குளிர் விட்டுப்போனது ?
    04. பாவம் இல்லாதவள் இப்படியாவது யோசனை வந்த்தே...
    (ஜி சில்க் கடித்தது கொய்யா அல்ல ! ஆப்பிள் சரித்திரம் பொய்யாக கூடாது அப்புறம் மழை வராது)

    ReplyDelete
    Replies
    1. கால் செய்தவர்கள் பத்து பேர் என்றால் பதவி உறுதி :)
      பள்ளி வாசலைத்தான் மிதிக்கவில்லை ,பள்ளிவாசலையுமா:)
      சியர்ஸ் என்று சொல்லிக் கொள்ளும் இருவருக்குள்ளும் :)
      சரித்திரம் மிக முக்கியம் ,வருகிற பதிவர் சந்திப்பில் அய்யா முத்துநிலவன் தலைமையில் பட்டி மன்றம் நடத்தி முடிவெடுத்து விடலாம் ,சிலுக்கு கடித்தது கொய்யாவா ,ஆப்பிளா என்று :)

      Delete
  12. அடேங்கப்பா என்னமா கலாய்கிறீர்கள் அனைத்தும் அருமை சகோ ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. என்ன ,இன்னைக்கு தாய்க்குலம் எல்லோரும் சேர்ந்துகிட்டு என்னைக் கலாய்க்கிறீங்களே:)

      Delete
  13. மிஸ்ட் கால் பார்ட்தினு சொல்லுங்க ஜி...

    தலைவரு பள்ளிக்கூடம் போயிருந்தாதானே பள்ளி வாசம்/ல் பற்றித் தெரியுன்...

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு கட்சி ஆரம்பித்தால் ஓஹோன்னு வரும் :)

      அவருக்கு எதுக்கு வேண்டாத வேலையெல்லாம் :)

      Delete