26 September 2015

பணத் தேவைக்கு இப்படி செய்யலாமா :)

             ''வங்கிக்கு போய் ஒரு முழப் பூவுக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்டீங்களாமே ,ஏன் ?''

            ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாம்னு சொல்றாங்களே !''

தலைவலிதான் போச்சே ,அப்புறமும் ஏன் :)
                  ''நேற்றுபூரா ஒற்றைத்தலைவலி ,   வலி வலது பக்கமா ,இடது பக்கமான்னு  ஞாபகம் வர மாட்டேங்குது  ,டாக்டர்  !''
           ''ரொம்பவும் யோசிக்காதீங்க  , இரட்டைத்  தலைவலி வந்திடப்போவுது !'' 



காசியில் விருப்பப்பட்டு விடவில்லை :)
             ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு
வரணும்னு சொல்வாங்க ,உன் புருஷன் எதை

விட்டார்டி?''
             ''அவர் எங்கே விட்டார் ? மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''


காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமேல்:)

காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ..இனி ..

பல்லு வழியா சொல்லு போகும்னு மாறிடுமோ ?

தலைவலி, காதுவலி...ஒரே வலியா...இருக்கே.......




  1. எந்த வலியாய் இருந்தால் என்ன ,வலிப்போக்கன் நீங்க இருக்கும் போது :)


22 comments:

  1. பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாமா?
    ஒற்றைத்தலைவலி இற்குப் பதிலாக இரட்டைத் தலைவலியா?
    இரண்டுமே
    கொஞ்சம் சிந்தனையைக் கிளறிவிடுதே!
    சிறப்பான நகைச்சுவைகள்

    ReplyDelete
    Replies
    1. வைத்தாலும் கூட பூ வாடாமல் இருக்கப்போறதில்லையே:)
      இருப்பது ஒரே தலை ,ஆனால் தலைவலி மட்டும் இரட்டையா :)

      Delete
  2. பூவையரும் பூ சுற்ற ஆரம்பித்து விட்டார்களா...? ‘ பொன்னை வைக்கும் இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அண்ணன் அன்றி யாருமுண்டோ இன்னும் ஒரு சொந்தமுண்டோ அதன் பேர் பாசம் அன்றோ’ பாசக்கார அண்ணனா இருக்கீங்க... இத வச்சிட்டு எவ்வள கொடுக்க முடியுமோ... கொடுங்கண்ணா... ஒங்க பேங்குக்குப் புண்ணியமா போகும்...!


    ஒரு தலைக்கு ஒற்றைத் தலைவலிதான் வரும்... இதுக்கு போயி அலட்டிக்கலாமா...?


    காசிக்கு போயி பாவத்த தொலைக்கிறதுக்குப் பதிலா... தொலைஞ்சது... பல் செட்டா...? காசு செலவுன்னு சொல்லு...!


    ஊசியின் காதில் ஒட்டகம் நுழையிற மாதரி...!

    த.ம.1.

    ReplyDelete
    Replies
    1. அள்ளிக் கொடுக்க முடியலை என்றாலும் கிள்ளியாவது கொடுங்கண்ணா:)

      அதானே ,நியாயமும்கூட :)

      வாய் திறந்து பேச முடியலே ,ரெடிமேடா பல்செட் கிடைச்சா தேவலே :)

      சரியாய் சொன்னீங்க ,கில்லர்ஜியை பார்க்க அபுதாபி சென்ற போது,அந்த ஊ கா ஒ நுழையும் அதிசயத்தைக் காட்டினார் :)




      Delete
  3. பொன் வைக்கிற இடத்தில் பூ..... நல்ல ஐடியா. எனக்கு கொஞ்சம் காசு தேவை. பத்து முழம் பூவோட இதோ வங்கிக்கு புறப்பட்டுவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு கடன் கிடைக்காது ,வெறும் கையில் முழம் போடத் தெரியலியே உங்களுக்கு :)

      Delete
  4. பொன்னும் பூவும் இதுவும் நல்ல ஐடியா தான். ஆனால் யாராவது அடிக்க வந்தால் உங்க முகவரியைத்தாங்க அனுப்பி வைக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அனுப்புங்கள் ,முகத்தில் அடி ,வரி வரியாய் விழாமல் போனால் சரிதான் :)

      Delete
  5. 01.சரிதானே..?
    02. அப்படீனா டாக்டருக்கு ரெட்டை சார்ஜ் கிடைக்குமே...
    03. பதியோடு போகாமல் பல் செட்டோடு போச்சே..
    04. பழமொழி ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. என்னிடம் கேட்டால் எப்படி ,பூவுடன் வங்கிக்கு சென்று கேளுங்கள் :)
      இப்படியும் வசூலிப்பார்னு முன்பே தெரிந்திருந்தால் தலைவலியே போயிருக்குமே :)
      விட வேண்டுமென்று ,பதி... சதி செய்து சதியை ஆற்றுக்குள் தள்ளி விடாமல் போனாரே :)
      செல்லிருந்தால் சொல்லும் போகும் என்பது தானே புதுமொழி :)

      Delete
  6. வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் சும்மாவா வழினுப்பி..வைத்தார்கள்.?????

    ReplyDelete
    Replies
    1. தர்ம அடிக் கொடுக்க நினைத்தாலும் பணிச்சுமை அவர்களைப் பணிய வைத்து விட்டது :)

      Delete
  7. ஒரு முழப் பூவுக்கு.... யாரிடம் கேட்கப்பட்டது. பெண் வங்கியாளரிடமா.?தலைவலி போய் திருகு வலியா.?நல்ல வேளை மனைவியை விட்டு வரவில்லை.காது கேட்காத பல் இல்லாதவருக்கு ?

    ReplyDelete
    Replies
    1. பூவுடன் அல்வாவும் கொண்டு போனா கடன் கிடைக்காது ,கல்தா கிடைக்கும் :)

      இரட்டை திருகு வலி :)

      அதையும் ஒருவர் செய்ய நினைத்தார் ' நம் வலைப்பூவில் ;)

      காதிலே மினி தந்தி மெசினை செட் பண்ணி விட வேண்டியதுதான் :)

      Delete
  8. Replies
    1. அது எஸ் .வி ,சேகரோட நாடகமாச்சே :)

      Delete
  9. இந்த ஐடியாவும் நல்லா தான் இருக்கு,
    அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,ஐடியா வொர்க் அவுட் ஆக மாட்டேங்குதே :)

      Delete
  10. ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாம்னு சொல்றாங்களே !''//
    ''ரொம்பவும் யோசிக்காதீங்க , இரட்டைத் தலைவலி வந்திடப்போவுது !'' //
    மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''//
    பல்லு வழியா சொல்லு போகும்னு மாறிடுமோ ?//
    ஆகாகா! ரெம்ப அருமை...நல:லா யோசிக்கிறீங்...ங்.....ங்...க...
    இன்னும் என் நெருக்கடி நேரம் தொடருது
    ப்ளீஸ்! அடுத்த செவ்வாய் வரை.. பின்பு வந்து கருத்திடுவேன்...


    ReplyDelete
    Replies
    1. செவ்வாய் வெறும் வாயாகாது என்று நம்புறேன் :)

      Delete
  11. Replies
    1. பூவுக்குக் கடன் கொடுத்தால் எத்தனைக் கோடி தேவைப் படும் என்று யோசீத்தீர்களா :)

      Delete