8 September 2015

நடிகை யோட கணவனுக்கு இது தெரிஞ்சா :)

நாட்டிலே சோம்பேறிகள் பெருகிவிட்டார்களோ :)

                    '' புது வருசத்துக்கு வரப்போற புதுமைக் காலண்டர்  செம சேல்ஸ் ஆகப் போவுதா ,ஏன் ?''
                     '' எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் ,வாரம் ஒரு முறை கிழிக்கிற வீக்லி காலண்டர் வரப் போவுதே !''





ஒரு குடிகாரனின் தத்துவம் !


         ''மச்சி ,நமக்கு பிராந்தி ,பீர் ,ரம் பிடிக்குது .ஒயின் பிடிக்காத காரணத்தை கண்டு பிடிச்சிட்டியா ?''

     ''ஓயின்னு  சொல்லிப் பாரு ,உதடுகள் கூட ஒட்ட மாட்டேங்குதே !''

நடிகையோட கணவனுக்கு இது தெரிஞ்சா ...?

               '' உன்னை கதாநாயகியா நான்தான் அறிமுகப் படுத்தினேன் ...ஆனா, உன் கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தமா இருக்கு !''
           ''டோன்ட் ஒர்ரி ,அடுத்த தடவை கட்டாயம் வந்துடுங்க சார் !''

143 ன்னா ரெண்டு அர்த்தம் இருக்கு !


143ன்னு  சொன்னா ...
வாலிப அகராதியில் வேண்டுமானால் 
i love you என்றிருக்கலாம் !
ஆன்மீக அகராதியில்,
அது நேபாளில் உள்ள சிவன் சிலை 
உயரத்தைக் குறிக்கும் !


  1.  Chokkan SubramanianTue Sep 09, 09:49:00 a.m.
    இதுக்கு கூடவா உதடு ஒட்டனும்? யப்பா, எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!!!

    நடிகை ஒரு கல்யாணம் மட்டும் பண்ணினால் தான் ஆச்சிரியம். அடுத்த கல்யாணத்துக்கு, உங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்போறாங்களாம்!!!

    அட! 143 -தெரியாத ஒரு ஆன்மிக விஷயத்தை சொன்னதற்கு 




    1. Bagawanjee KATue Sep 09, 08:54:00 p.m. குடிக்கும் போது இதை நான் யோசிக்கலை,குடிகாரனைப் பார்த்து யோசித்தது !

      அழைப்பிதழ் வரட்டும் ,பதினாறு பேறு இல்லை இல்லை ..பேருடன் பல்லாண்டு வாழ்கன்னு வாழ்த்திவிடுகிறேன்!

      காதல் சொல்ல வந்தேன் ,ஆன்மீகம் வந்து விட்டது !

19 comments:

  1. பதிவு வெளியாகும் நேரத்தை தவறாக 'செட்' செய்துவிட்டேன் ,மன்னியுங்கள் வலையுலக உறவுகளே :)

    ReplyDelete
    Replies
    1. முகப்பு பக்கம் வந்து, பிறகு பதிவின் தலைப்பு சொடுக்க வேண்டியிருக்கிறது ஜி...

      Delete
    2. பதிவு ஏறுவது தாமதமாகிறது என்று சகோ .மது ஜியும் தெரிவித்து இருந்தார் ,நீங்களும் சொல்வதால் ,இரண்டு கேட்ஜெட்டை நீக்கியுள்ளேன் ..சரியாகி விட்டதா ,சொல்லுங்க ஜி !

      Delete
  2. புது வருசத்துக்கு வரப்போற புதுமைக் காலண்டர் ... ரொம்பவே ‘வீக்’-ன்னு சொல்லுங்க...! சோம்பேறியாக இருந்தாத்தான் நாட்டில இருக்கிற கோயில்கள்ல்ல சோறு கிடைக்கிறதே...!


    நமக்கு ஒட்டி உறவாடுறதுதா பிடிக்கும்... அதுனாலதா ஒயினோட ஒட்டும் இல்ல... உறவும் இல்ல...!


    பராவில்ல... எ கல்யாணத்திற்கு வர முடியலேன்னு வருத்தப்படாதிங்க... எனக்கு வாழ்க்கை கொடுத்தவரே நீங்கதான்... ஒங்களுக்கு ஒரு குழந்தை கொடுக்கத் தயார இருக்கேன்... என்ன அப்படி பாக்குறீங்க...எப்பவுமே என்ன தப்பாவ பாப்பீங்களே...! நா அந்த அர்த்தத்தில சொல்லலை.... இன்னும் எட்டு மாசத்தில் பொறக்கப்போற குழந்தைக்கு ஒங்களோட பேரத்தா வைப்பேன்...! என்னோட ஹஸ்பென்ட் ஓபன் ஹார்ட்... இந்த விவரத்த அவர்ட்ட சொல்லிட்டேன்... அவரு ஒன்னும் தப்பா எடுத்துகல...!


    அந்த சிவன்தானே இந்தப்பாடு படுத்திறான்...! 143 -க்கு 144 போட முடியுமா என்ன?


    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. அன்னதானம் சாப்பிடுபவர்களில் பெரும்பாலோர் சோம்பேறிகள் தான் :)

      கலைஞரின் அன்புத்தம்பிக்கு சொல்லவா வேணும் :)

      சரியாய் சொல்லுங்க ,புதுகணவனுக்கு ஓபன் ஹார்ட்டா.ஹார்ட் அட்டாக்கா :)

      பொம்பளைப் பிள்ளையாவது அவனே ,இவனே என்பதைவிட சிவனேன்னு இருக்கிற மாதிரி தெரியலையே :)

      Delete
  3. நடிகையின் கணவருக்கு தெரிஞ்சா.......தொழில் நுட்ப வளர்ச்சி ரெம்பவும் வளர்ச்சி அடைஞ்சிருக்குன்னு நெணப்பாரு.. அடுத்து தமிழ்நாட்டு முதல்வரு சேர்ல உட்கார தம் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்குமான்னு அலைவாரு...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,இதிலே இவ்வளவு அரசியல் இருக்கா :)

      Delete
  4. வீக்லி காலண்டர் சூப்பரு..ஹஹ

    ReplyDelete
    Replies
    1. தினசரி தேதியை கிழிக்க எத்தனைப் பேருக்கு முடிகிறது ,தேவைதானே இது :)

      Delete
  5. வாரக்காலண்டர், வித்தியாசமான பாணி. நகைச்சுவை ஊடே இவ்வாறான உத்திகளைத் தரும் உங்களது எழுத்துக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,காபி ரைட் வாங்கி வைத்துக் கொள்ளட்டுமா :)

      Delete
  6. வணக்கம்,
    143 இப்படியுமா???? தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மறக்க முடியாத அளவுக்கு தகவல் ,அப்படித்தானே :)

      Delete
  7. அடுத்ததடவை கல்யாணத்துக்கு வந்துடுங்க...ஹஹஹஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நமக்குத்தான் ஆயிரங்காலத்து பயிர் ,அவங்களுக்கு இல்லையே :)

      Delete
  8. 01. இதைவிட மாதம் ஒருமுறை கிழித்தால் இன்னும் சுலபமே.....
    02. இதெல்லாம் அனுபவசாலிக்குதானே வரும்......
    03. பரவாயில்லை அடுத்த வாரம் டைவோர்ஸூக்கு சாட்சி கையெழுத்து போட வரட்டுமே....
    04. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே உள்ள மன்த்லி ஆச்சே அது ,இது வீக்லி :)
      எனக்கென்ன அனுபவமா இருக்கு :)
      ஏழு நாள் கியாரண்டி தானா :)
      143அடியை ஏன் நிர்ணயம் செய்தார்களோ :)

      Delete
  9. கேலண்டர் அட்வான்ஸ் புக்கிங்!

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆர்டரைச் சொல்லுங்க :)

      Delete