15 September 2015

காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா :)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  ''குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிகப்பா பிறக்க வாய்ப்பில்லை 

என்று எப்படி உறுதியாச் சொல்றே ?

 கேசரியிலே குங்குமப் பூவை போட்டும் கேசரி கலரா வர''  


மாடேங்குதே!''


தானாடா விட்டாலும் தசை ஆடுமோ :)

                                                      
               

                  ''டார்லிங் ,முதலிரவிலே எனக்கே பதட்டமாயிருக்கே,உனக்கு எப்படி ?''
                 
                 ''எனக்கு அனுபவமாகிப் போச்சுங்க !'' 
         

காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா ?

          ''கண்ணு ,மூக்கு ,வாய் முன்னாடி பார்க்கயிருக்கு...காது மட்டும் ஏன் இரண்டு  பக்கமும்  இருக்கு,டார்லிங் ?''
             ''சில லூசுங்க இந்த மாதிரி கேட்பதை இந்த காதுலே வாங்கி,அந்த காது வழியா விடத்தான் !''


மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல !

சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு 
வருகை தரும் பயணிகள்  கவனத்திற்கு ...
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 
மேற்கூரை  மூன்று மாதத்தில் நான்கு முறை 
இடிந்து விழுந்து இருப்பதால் ...
இரும்பு ஹெல்மெட்டுடன் வருகை தருமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !
விமான பயணத்தில் மட்டுமல்ல 
விமான நிலையத்திலும் கூட ...
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை 
பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !
    (குறிப்பு ....இந்த பதிவை எழுதி ஒரு வருடம் முடிந்த பின்பும் கூட சென்ற வாரம் வரை கூரை பெயர்ந்து விழுவது தொடர்கிறது :)

  1. ‘தளிர்’ சுரேஷ்Mon Sep 15, 04:16:00 p.m.
    அந்த கணவனை நினைத்தால் பாவமாக இருக்கிறது! ரெண்டாவது ஜோக் நெத்தியடியா இருக்கு! விமான நிலைய அவலம் மட்டும்ல்ல கேவலமும் கூட! நன்றி!




    1. முதல் நாளே இளம் மனைவி இப்படி அணு குண்டு போட்டா ,அவர் பாடு கஷ்டம்தான் !

21 comments:

  1. Replies
    1. தக்காளி பழம்போல் சிவந்து இருக்கும் நீங்கள் ,கலருக்கு செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது ,அதான் இப்படி கேட்கிறீர்கள்:)

      Delete

  2. கேசரியிலே குங்குமப் பூவை போட்டும் கேசரி கலரா வரமாடேங்கிறதெல்லாம் சரிதான்... மொதல்ல கர்ப்பமான்னு ரிசல்ட் வரட்டும்...மொதல்ல மாதரி இது பித்த வாந்தின்னு சொல்லிடப் போறாரு...! அதுவரைக்கும் ‘கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்புன்னு’ வேணுமுன்னா பாடிட்டு இருங்க... சும்மா அத இதச் சொல்லி என்ன டென்சனா ஆக்காதீங்க...!


    இதுல பதட்டப் படுறதுக்கு என்னங்க இருக்கு... சும்மா நடிக்காதீங்க...! சினிமாவப் பாத்துப் பாத்து கெட்டுப் போயிட்டீங்க...! எனக்கு டைவர்ஸ் கிடைக்கிறத்துக்கு முன்னாடி... அவரு... அதாங்க... அவரு...இப்படியெல்லாம் பேசுனதே இல்லீங்க...நெசமா...!


    என்ன லூசாப்பா... காது கொடுத்துக் கேட்டேன் ‘குவா குவா’ சத்தம்...!


    கூரை விழுவது தொடர்கதைதான்... முடிவே இல்லாதது... இதுக்குத்தான் அப்பவே சொன்னான்.... கூரை ஏறி விமானக் கூரைய... சாரி...கோழிபிடிக்க முடியாதவன்... வானம் ஏறி வைகுண்டம் போனானாம்... வைகுண்டம் போக வழி...சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு உள்ளே சென்று வந்தால்... போய் சேர வழி காட்டுவார்கள்... !

    த.ம. 1.

    ReplyDelete
    Replies
    1. ‘கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்புன்னு’ பாடிகிட்டே இருந்தா தத்துவ மேதை அல்லவா வந்து பிறப்பான் :)

      அனுபவம் எப்படியெல்லாம் பேசுது :)

      ஒரு காதுக்குள் இரண்டு குவா சத்தம் எப்படி வந்தது :)

      கட்டிய நாளில் இருந்து நேற்று வரை இது தொடர்கிறதே :)

      Delete
  3. இரு காதுகள் இதற்குத்தானோ?

    ReplyDelete
    Replies
    1. தேவைபடுபவை மட்டும் இரு காதின் வழியே 'இன்புட் ' பண்ணிக்கலாம் :)

      Delete
  4. ரசித்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. கேசரி உங்களுக்கு பிடித்ததா :)

      Delete
  5. Replies
    1. உங்க நிறத்துக்கு காரணம் சொல்லமுடியுமா ,வெங்கட்ஜி :)

      Delete
  6. சில லூசுங்க பேசறத,,,,,,,
    இது போன்ற அவலம் இன்னும் ஏராளம்,,,,,
    நீங்கள் எத்துனை ஆண்டு கடந்தும் இந்த ஜோக்க திரும்ப எழுதலாம்,,,,,,,
    மாறாது,,,,,
    அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இரு காதுக்கு காரணம் அதுதானே :)
      ஒரு கழுத்தில் நாலைந்து தாலி சுமக்க எப்படி மனசு வருதோ :)
      அதாவது கேசரி நிறம் என்றும் மாறாது ,அப்படித்தானே :)

      Delete
  7. 01. கேசரியில சாயப்பொடி போட்டால் வரும்.
    02. அவளுக்கு பொய் பேச பிடிக்காது போல...
    03. லூசு மா3 கேட்டால் லூசுனுதான் சொல்வாள்.
    04. ஆனால் அரசியல்வாதிகள் வரும் பொழுது விழமாட்டுதே..

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா,குழந்தை சிகப்பா வேணும்னா சாயப் பொடி சாப்பாட்டில் சேர்த்துக்கணுமா :)
      உத்தமி அதான் உண்மையே உளறிட்டா :)
      வேறெப்படி கேட்கணும் :)
      உங்க ஆசை சீக்கிரம் நிறைவேறட்டும் :)

      Delete
  8. அடடே... என்ன ஒரு சிந்தனை!

    ஐயோ.....!

    அட, என்ன ஒரு விளக்கம்!

    விமான நிலைய மேற்கூரை இருக்கட்டும், மெட்ரோ ரயில் இரும்புகள் கூட தவணை முறையில் விழுந்து உயிரை வாங்குகின்றனவே....

    ReplyDelete
    Replies
    1. நேற்று கேசரியில் குங்குமப்பூ பார்த்ததால் வந்த சிந்தனை :)

      முதல் ராத்திரியே ஐயோன்னா :)

      இந்த விளக்கமாவது காதில் நுழையுமா :)

      பஸ்களும் ஓட்டை ஒடசல் ,மனுஷன் எதில்தான் போவது :)

      Delete
  9. பைக் ஓட்டுபவர்களுக்கு மட்டுமின்றி,விமான நிலையத்திலும் தலைக்கவசத்தை கட்டாயமாக வேண்டுமோ?
    அருமை

    ReplyDelete
    Replies
    1. அங்கேயே ஹெல்மெட் வாடகை கடையை போட்டு விடலாம் :)

      Delete
  10. விமான நிலைய கூரை விழுவது தொடர்கிறது. பொன் விழா (50 ) கொண்டாடப் போகிறார்களாம். ஹெல்மெட்டோடு போக வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. இடிந்து விழுவதற்கும் பொன் விழாவா ,நாடு வல்லரசு ஆயிடும் :)

      Delete
  11. வர்ரீங்களா சொல்லுங்க ,உங்களை சந்தித்து மகிழ்கிறேன் :)

    ReplyDelete