14 March 2013

'சிரி'கவிதை!கொசு அடிக்கவும் கத்துக்கணும் !


பறந்து வந்து ...உடம்பின் மேல்  உட்கார்ந்து ...
கடி இடத்தில் 'லுப்ரிகேசன் 'செய்யும்  வரையும் தெரியாது ...
மெய் மறந்து ரத்தம் உறிஞ்சுகையில் ...
மெதுவாக தொட்டாலே செத்துவிடும் கொசு ...
அது சொல்லும் பாடம் ...
பறப்பதை பிடிக்க நினைக்காதே !
சாதிக்க பொறுமை வேண்டும் !
மெய்   மறந்து இருக்கையில் ஆபத்து அதிகம் !


2 comments:

  1. வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான சிந்தனை தருகிறது என்பதற்காக கொசுவுக்கு 'பூஸ்ட் 'கொடுக்க முடியுமா ?தொடர்கிறது என் கொசு வேட்டை ![புலி வேட்டைக்கு தடை ஆகையால் நம்மால் முடிந்த இந்த வேட்டையை தொடர வேண்டியதுதான்] !நன்றி !

      Delete