17 October 2013

இருக்கிற பெண்டாட்டியை காப்பாத்திக்க ....!

''என்னங்க ,சிறந்த மேக்கப்மேனுக்கான  பரிசு வாங்கி இருக்கீங்க ,கட்டிக்கிட்ட பெண்டாட்டி எனக்கு மேக்கப் போடமாட்டேன்னு  ஏன் சொல்றீங்க ?''
'' சுமாரா இருந்த மொத பெண்டாட்டிக்கு மேக்கப் போட்டேன் ...அவளையும் ஒருத்தன் தள்ளிக்கிட்டு போய்விட்டானே !''


20 comments:

  1. அய்யய்யோ... அப்ப மேக்கப் போட்டுறாதீங்க...

    ReplyDelete
    Replies
    1. நடிகைகளுக்கு தவிர வேறு யாருக்கும் மேக்கப் போடுவதில்லைன்னு சபதமே எடுத்து விட்டாரே !
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. Replies
    1. காலம் கெட்டுக்கிடக்கு...மனைவியைக் கூட அழகு படுத்திப் பார்க்க முடியலே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. அப்படியா கதை! அட! பாவமே!

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு ஒப்பனைக் கலைஞனின் பரிதாபக் கதை அய்யா !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. மனைவியின் கண் கருவளையத்தை மறைச்சாரு,அது[?]இவர் கண்ணையே கட்டிட்டு ஓடிப் போயிருச்சே !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  5. முதல் மனைவி இருந்ததையே மறைத்து இரண்டாவது மனைவியைக் கொண்டு வந்திருக்கிறாரா! சாமர்த்தியசாலி தான்!

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் செய்றது ,இப்படி ஓடிப் போகும்னு தெரிஞ்சுருந்த அவர் தொழில் திறமையை காட்டி இருக்க மாட்டாரே !
      நன்றி செல்லப்பா ஜி !

      Delete
  6. அப்ப சரி
    அவர் மேக்கப் போடாததுதான் சரி

    ReplyDelete
    Replies
    1. இந்த ஞானம் முதல்லேயே இருந்திருந்தால் இந்த கேள்விக்கு இடம் இருந்துருக்காதே!
      நன்றி !

      Delete
  7. நீங்க பதிவெழுதுறது உங்க வூட்டம்மாவுக்கு தெரியுமா!? எப்ப பாரு பொண்டாட்டிகளை கலாய்ச்சு போஸ்ட் போடுறீங்களே! அதான் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. 'மேல் 'இடத்து உத்தரவு இல்லாமல் இந்த MALEஆல் என்ன செய்ய முடியும் ?
      போர் அடிக்குதுன்னு நினைக்கறேன் ,ரூட்டை மாத்தினா சரியாப் போச்சு !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_745.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் தகவலுக்கும் நன்றி தனபாலன் ஜி !

      Delete
  9. ஹா. ஹா நல்ல ஜோக்.

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஜோக்கை ரசித்த நல்ல உள்ளத்திற்கு நன்றி !
      ஓட்டும் போட்டு மேலே ஏற உதவியதற்கு நன்றி கும்மாச்சி !

      Delete