வெளிநாட்டிற்கு செல்லும் சீனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சீன அரசு ...
அது அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ...
எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் !
நம் பதிவர்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் ...
பொது கழிப்பிடங்களில் நீண்டநேரம் இருக்க வேண்டாம் !
[பதிவைப் பற்றி வெளியே வந்து யோசிங்க ]
கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள் !
[உங்களின் பதிவு படிப்பவர் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்கக் கூடாது ]
பொது இடங்களில் மூக்கை நோண்டக்கூடாது !
[பதிவுக்கு மண்டையை குடைந்துக்கலாம் ,மூக்கை நோண்டிக்கக்கூடாது ]
நூடுல்சோ ,சூப்போ உண்கையில் சத்தம் வரக்கூடாது !
[நம் பதிவு படிப்பவரின் பொறுமையை 'உறிஞ்சி'டக் கூடாது ]
விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள் !
[சிந்தித்து எழுதுபவன் பதிவர் ,காப்பிபேஸ்ட் செய்வதும் திருட்டுதான் ]
மிக மிக முக்கியம் ...
நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !
[பதிவைப்போட முடியவில்லையென பதட்டமோ ,பயமோ இருந்தால் மேற்கண்ட காரியம் தானாகவே நடந்து விடும் !]
|
|
Tweet |
மிகவும் சரிதான்
ReplyDeleteபதிவர்களுக்கு பயனுள்ள டிப்ஸ்தான்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
இந்த வாழ்த்தை சீன அரசுக்கு அனுப்பி விடுகிறேன் !
Deleteநன்றி ரமணி ஜி !
tha.ma 2
ReplyDeleteநன்றி ரமணி ஜி !
Deleteஇந்தளவு பயமும் பதட்டமும் இருக்கிறதா...?
ReplyDeleteஇருக்கு ,ஆனா 'அந்த 'அளவுக்கு இல்லை !
Deleteநன்றி தனபாலன் ஜி !
நல்லா இருக்கு.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் .பாராட்டுக்கும் நன்றி அய்யா !
Deleteபடிக்கும்போது கொஞ்சம் மூக்கைப் பிடித்துக்கொள்வது அவசியமாக இருந்தாலும் ,ரசிக்கும்படியாக இருக்கிறது.
ReplyDeleteசும்மாவா சொன்னான் கவிஞன் பாப்லோ நெருடோ 'மூத்திரத்தின்நாற்றத்திலும்.பூவின் மணத்திலும் என் கவிதைப் பிறக்கும் 'என்று !
Deleteநன்றி மேடம் !
அட இப்படிக்கூட யோசிப்பீங்களா?
ReplyDeleteஅவரவர் வலைப்பூ ,அவரவர் ராஜாங்கம் ,இப்படித்தான் பரிபாலனம் செய்யணும்னு வரையறை இல்லையே ,கருண் ஜி ?
Deleteநன்றி !
சரிங்க நீங்க இந்தப் பதிவை எங்கே இருந்து சிந்தீசிங்க
ReplyDeleteநிச்சயமா நீங்க நினைக்கிற இடத்தில் இருந்து சிந்திக்க வில்லை !சிஈ ஈ ஈ ...
Deleteநன்றி மது கஸ்தூரி ரெங்கன் ஜி !